கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து பிரேக் எடுக்கும் பிரபல நடிகை! வாழ்த்து மழையில் க்யூட் ஜோடி
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் திடீர் திருமணம் செய்த நக்சத்ரா கர்ப்பமாக இருப்பதாகவும் அவர் அதனால சீரியல்களில் நடிக்காமல் இப்போது இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் நக்சத்ராவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

திடீர் திருமணம்
ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் கதாநாயகி வெண்ணிலா கேரக்டரில் நடித்து இப்ப வரைக்கும் ரசிகர்களால் வெண்ணிலா என்று செல்லமாக அழைக்கப்படும் நக்சத்திரா சமீபத்தில் தான் திருமணம் செய்திருந்தார். அவருடைய திடீர் திருமணம் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் அவருடைய திருமணத்தைப் பற்றி அவருடைய நெருங்கிய தோழி ஸ்ரீநிதி வெளியிட்ட கருத்து தான். ஆனாலும் திருமணம் முடிந்து ஒரு சில நாட்கள் கழித்து சமூக வலைத்தளத்தில் நக்சத்திரா அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருந்தார்.

சின்னத்திரை நட்புகள்
பள்ளி கல்லூரி நட்புகள் போலவே சின்னத்திரையிலும் நட்பாக வலம் வந்து கொண்டிருந்த நடிகைகள் என்று சொன்னாலே டக் என்று அனைவருக்கும் நினைவிற்கு வருவது கயல் சீரியல் சைத்ரா, செம்பருத்தி சீரியல் ஷபானா, பூவே பூச்சூடவா சீரியல் ரேஷ்மா மற்றும் யாரடி நீ மோகினி சீரியல் நக்சத்திரா தான். கடந்த வருடம் வரைக்கும் இவர்கள் போட்ட ஆட்டம் சமூக வலைத்தளத்தில் பலரையும் கவர்ந்திருந்தது. நட்பாக இவர்கள் அடிக்கடி போட்டோ சூட் எடுத்து எப்போதுமே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாகவே இருந்து வந்தனர். அதுவும் கொரோனா காலகட்டத்தில் இவர்களுடைய கொண்டாட்டத்தை கூறவே வேண்டாம் அனைவரும் வீட்டிற்குள் இருக்கும் போதும் கூட இவர்கள் ஒற்றுமையாக இருந்து ஜாலியாக பல போட்டோ சூட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தனர்.

எளிமையான திருமணம்
இந்த நிலையில் முதலில் இந்த அணியில் கயல் கதாநாயகி சைத்ராவுக்கு திருமணம் முடிந்தது. அதற்கு பிறகு சபானா மற்றும் ரேஷ்மாவுக்கு திருமணம் முடிய இந்த வருடத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் நக்சத்திராவிற்கு திருமணம் முடிந்தது. தன்னுடைய பாட்டியின் உடல்நிலை குறைவின் காரணமாக நெருங்கிய நண்பர்களுக்கு கூட சொல்லாமல் எளிமையாக திருமணத்தை நக்சத்திரா முடித்திருந்தார். கயல் சைத்ராவின் திருமணத்தில் இவர்கள் போட்ட ஆட்டம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்த நிலையில் யாருமே இல்லாமல் தனியாக நக்சத்திரா திருமணத்தை முடித்துக் கொண்டார்.

மகிழ்ச்சியான செய்தி
திருமணத்திற்கு பிறகு மீண்டும் வள்ளி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நக்சத்திரா தற்போது அந்த சீரியல் முடிவடைந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது .ஆனால் அதை குறித்து நக்சத்திரா இன்னும் அதிகாரப்பூர்வமான தகவலை கூறவில்லை என்றாலும் அவருடைய தோழிகள் அவரை சென்று பார்த்த வண்ணமாகவே இருக்கின்றனர். இந்த தகவல்கள் வெளியானதும் ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications