காதலையே இப்போதான் சொன்னாங்க அதுக்குள் இப்படி பதிவா? பசங்க பட கிஷோரை காதலிக்கும் ப்ரீத்தியிடம் கேள்வி
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் ப்ரீத்தி குமார் தான் காதலிக்கும் காதலன் பற்றி வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
நடிகை ப்ரீத்தியும் பசங்க திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கிஷோரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது அவர்களுடைய காதலை வெளிப்படையாக அறிவித்திருக்கின்றனர்.
காதலை ரசிகர்களிடம் அறிவித்த கிஷோர் மற்றும் ப்ரீத்தி குமார் தற்போது அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ரகசியமான காதல்
கடந்த வருடத்தின் பல பிரபலங்கள் திடீர் திருமணம் செய்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தனர். அந்த வகையில் வருடத்தின் கடைசி மாதத்தில் தங்களுடைய பலவருட காதலை சின்னத்திரை நடிகையாக இருக்கும் ப்ரீத்தி ரசிகர்களிடம் போட்டு உடைத்து சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். வானத்தைப்போல சீரியலில் பொன்னியாக ஆரம்பத்தில் நடித்து தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் ப்ரீத்தி, கோலி சோடா, பசங்க திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கிஷோரை காதலித்து வருகிறார். இவர்களுடைய காதல் பல வருடங்களாக நடைபெற்று வந்தாலும் வெளியே தெரியாத வகையில் ரகசியமாக தான் வைத்திருக்கின்றனர்.

பிறந்தநாளில் காதல் பதிவு
கிஷோர் தன்னுடைய காதல் ரகசியத்தை மறைமுகமாகவே வைத்துக்கொண்டு, அவர் பிரீத்தியின் பல புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வந்தார். ஆனால் ஆரம்பத்தில் அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு சந்தேகம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது பிரீத்தியின் பிறந்த நாளில் தன்னுடைய காதலை முதல் முறையாக வெளிப்படையாக கூறியிருந்தார். அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள், லவ் யூ அச்சுமா, நீ என்னுடைய லைஃபில் கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட் என்றும், என்னதான் இந்த பர்த்டேவை எப்போதும் போல செலபிரேட் பண்ணினாலும், அடுத்த வருஷம் கண்டிப்பாக ஹஸ்பண்ட் அண்ட் வைஃபாக உன்னுடைய பர்த்டே நாம செலிப்ரேட் பண்ணலாம், என அந்த பதிவில் கூறியிருந்தார். இதற்குப் பிறகுதான் பலரும் யார் அந்த பெண் என்று தேடத் தொடங்கி இருக்கின்றனர்.

வதந்திகளுக்கு பதில் இல்லை
இந்த நிலையில் இவர்களுடைய காதல் ரகசியம் வெளியானதும் பல்வேறு தகவல்களும் பரவி வருகிறது. அதில் கிஷோரை விட ப்ரீத்தி நான்கு வயது மூத்தவர் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. ஆனால் அதை குறித்து இவர்கள் இருவரும் எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் இதுவரைக்கும் தாங்கள் பொக்கிஷமாக பார்த்து வந்த பல புகைப்படங்களும் வீடியோக்களும் இப்போது தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் புத்தாண்டு வாழ்த்து
இந்த நிலையில் ப்ரீத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வணக்கம் 2023 மக்களே, புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் அனைவருக்கும் அமைதி, அன்பு மற்றும் சிரிப்பு வாழ்த்துக்கள் என்று கிஷோரோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது. புது வருடத்தில் முதல் பதிவில் இருவரும் ஒன்றாக இருக்கும் வேலையில், திருமணம் எப்போது என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இதுவரைக்கும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் ப்ரீத்தியை திட்டி வந்த ரசிகர்கள் கூட இப்போது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications