கைகளில் மருதாணி, வெட்கத்தால் சிவந்து போன ஷபானா... வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்
சென்னை: செம்பருத்தி சீரியலின் கதாநாயகி ரசிகர்களின் மனதை குழம்ப வைத்து விட்டார்.
ஏற்கனவே இவருடைய காதலை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கும் போது தற்போது இவர் வெளியிட்ட போட்டோஸ்கள் வைரலாகி வருகிறது.
ஷபானாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

ரசிகர்களுக்கு குழப்பம்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் மூலமாக ரசிகர்களின் செல்ல மருமகளாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷபானா தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்ட போட்டோஸ்கள் பலருடைய மனதையும் குழப்பி வருகிறதாம். இது சும்மா போட்டோ சூட்டுக்காக எடுத்த போட்டோவா??அல்லது அவரது திருமணத்திற்காக பங்க்ஷனா என்று பலர் தங்களுடைய சந்தேகங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ரசிகர்களின் கனவு கன்னி
சின்னத்திரை நடிகையாக இருந்தாலும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் ஹோம்லியான கேரக்டரால் ரசிகர்களை கவர்ந்து இழுத்து விட்டார். தனக்குப் பெண் பார்த்தால் இவரைப்போல பெண் பார்க்க வேண்டும் என்று பல இளைஞர்கள் இவர் பெயரை கூறிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இளைஞர்களின் மனதில் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சில மாதங்களுக்கு முன்பு தான் காதலிக்கும் தகவலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது
இவருக்காகவே இந்த செம்பருத்தி சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அதிகம் தான். ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இவருக்கு அதிகமாக இருந்து வருகின்றனர். தற்போது இந்த சீரியலின் வெற்றிக்கு இவர்தான் காரணம் என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகன் ஆரியனை காதலிப்பதாகவும், இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததை இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தனர். இதைப்பார்த்த ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து கொண்டு இருந்தனர். ஆனால் ஒரு சில தீவிரமான ஷபானாவின் ரசிகர்கள் பீல் பண்ணி வந்தனர்.

இது என்னவாக இருக்கும்
தற்போது இன்ஸ்டாகிராமில் ஷபானா ஸ்டோரி வைத்துள்ளார். அதில் தன் கைநிறைய மெஹந்தி வைத்துள்ள போட்டோக்களை அப்லோட் பண்ணி இருக்கிறார். இதை பார்த்ததும் ஏற்கனவே ரகசியமாக எங்கேஜ்மென்ட் முடிந்தது போல திருமணத்தையும் ரகசியமாக முடிப்பதற்கு ஏதும் பிளான் செய்திருக்கிறாரா?? திருமணத்திற்கு முந்தைய பங்க்ஷனா என்று கேள்விக்களை ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போது, ஷபானாவின் நெருங்கிய தோழியான ஜனனி அசோக் குமார் அவரும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஷபானாவின் போட்டோவை வைத்திருக்கிறார். இதனால் விரைவில் ஷபானாவுக்கு திருமணமா??என்று ரசிகர்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications