10 வருஷமா குழந்தை இல்ல.. காரணம் இதுதான்! மோசமான கேள்விகளுக்கு சாந்தனு வெளிப்படையான பதிலடி
சென்னை: இயக்குனர் பாக்யராஜின் மகனான சாந்தனு தொகுப்பாளினி கிகி என்ற கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை என்பது குறித்து பலரும் கமாண்டுகளில் கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து சாந்தனு மற்றும் கிகி இருவரும் கோபமாக பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பிரபலமடைந்த பாக்யராஜின் மகன்தான் சாந்தனு. இவர் பாக்யராஜ் இயக்கி நடித்த வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதற்கு பிறகு கதாநாயகனாக சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதிலும் சக்கரகட்டி திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அந்த நேரத்தில் 90ஸ் கிட்ஸுகளில் எவர்கிரீன் பாடல்களில் இந்த திரைப்பட பாடல்களும் இடம் பிடித்திருந்தது.

சாந்தனு நடித்த திரைப்படம்
ஆனால் சக்கரகட்டி படம் வெளியான பிறகு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் ஆனால் அது பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை இதனால் இவர் படிப்பிற்கு கவனம் செலுத்த வேண்டும் என்று நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்தார். பிறகு சில வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க தொடங்கி இருந்தார். ஆனால் அப்பாவை போல இவரால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை.
காதல் திருமணம்
தொடர்ந்து தனக்கு தன்னுடைய திறமைக்கான அங்கீகாரம் கிடைப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார். சாந்தனுவும் தொகுப்பாளினி கிகியும் காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிகி மானாடா மயிலாட உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுபோல பல திரைப்பட இசை வெளியீட்டு விழா, ட்ரைலர் விழாக்களையும் இவர்தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
குழந்தை குறித்து விளக்கம்
டான்ஸில் அதிக ஆர்வம் உள்ள கிகி இரண்டு டான்ஸ் ஸ்கூலையும் தொடங்கி நிர்வகித்து வருகிறார். அதேபோல சாந்தனு மற்றும் கிகி இருவரும் youtube சேனலையும் நடந்து கொண்டிருக்கிறார்கள். அதில் தங்களைப் பற்றிய பல தகவல்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தங்கள் குறித்து வரும் கமாண்டுகளுக்கு அந்த வீடியோவில் விளக்கம் கொடுத்திருக்கின்றனர். அதில் பலர் தங்களிடம் குழந்தை இன்னும் பிறக்கவில்லையே என்ன காரணம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அதற்கு காட்டமாக பதில் கொடுத்திருக்கிறார்கள்.
கிகி பதிலடி
இந்த வீடியோவில் கிகி மற்றும் சாந்தனு பேசுகையில் எல்லோரும் எங்களிடம் குழந்தை எப்போது பிறக்கும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே எங்களுடைய குழந்தைகளை நீங்களா கவனித்துக் கொள்ள போகிறீர்கள்? நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் ஆனால் எங்களுடைய குழந்தைகளை நீங்கள் வளர்த்துக் கொடுக்கப் போறீங்களா? என்று கிகி கேட்டிருக்கிறார். நாங்கள் இப்படி பேசுவதை பார்த்து நீங்கள் திமிராகவோ ஆணவமாகவோ பேசுகிறோம் என்று நினைக்காதீங்க.
நெகட்டிவ் கமெண்ட்
எங்களுடைய வலி வேதனையை தான் நாங்கள் இப்படி சொல்கிறோம். பத்து வருஷம் ஆகிடுச்சு இன்னும் குழந்தை இல்லையா? நீ இப்படி ஆடிக்கிட்டு திரியிற உனக்கு எப்படி குழந்தை பிறக்கும் என்று தான் சிலர் கேக்குறாங்க. ஒரு சிலர் உண்மையான பாசமாக கேட்டாலும் சிலர் குத்தலாக கேட்கிறார்கள். அடுத்தவர்களின் மனதை கஷ்டப்படுத்துவதற்காக கேட்கிறார்கள். இப்படி நொய் நொய் என்று இவர்கள் கேட்டுக் கொண்டிருப்பதால் எங்களுக்கு மன அழுத்தம் தான் வருகிறது.
வருத்தம்
கடவுள் எங்களுக்கு எப்போது குழந்தை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போது கொடுக்கட்டும். ஆனால் இது போன்ற கேள்வி கேட்பவர்கள் எங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது நல்லது செய்யப் போகிறார்கள் என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் இஷ்டத்திற்கு எதையாவது கேட்டு விட்டு போய் விடுகிறார்கள், அதனால் எங்களுக்கு தான் வருத்தமாக இருக்கிறது.
சாந்தனுவின் விளக்கம்
ஒருவேளை உண்மையாக பாசத்தோடு குழந்தை எப்போது பிறக்கும் என்று கேட்பவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம். அதே நேரத்தில் எங்களை வெறுப்பேற்றி பார்க்க வேண்டும் நினைப்பவர்களுக்கு தான் மேலே சொன்ன பதிலை கொடுக்கிறோம் என்று சாந்தனு மற்றும் கிகி இருவரும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்கள்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications