என்ன போடணும்.. எப்படிப் போடணும்னு எனக்கு தெரியும்.. பொங்கி எழுந்த ஷிவானி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த லாக்டோன் நேரங்களில் ரசிகர்களை ரொம்பவே குஷிப்படுத்தி இளைஞர்களை தங்களின் வசப்படுத்திய ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருந்தார்.

Recommended Video

    நெட்டிசன்களுக்கு சவுக்கடி வார்னிங் கொடுத்துள்ளார் நடிகை ஷிவானி நாராயணன்

    ஷிவானி சீரியல்களில் அறிமுகமாகி இருந்தாலும் இணையதளங்களில் தான் இவரது ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஷிவானியை கலாய்க்கும் நெட்டிசன் களுக்கு ஒரு பெரிய சொற்பொழிவையே நடத்தி இருக்கிறார்.

    அவருடைய இந்த போஸ்ட் நெட்டிசன்களை வறுத்தெடுத்து இவர் பேசியிருக்கும் கருத்தும் வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஷிவானி இப்போது ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார் .

     செம சூடு

    செம சூடு

    போட்டோவைப் பார்த்ததும் ரசிகர்களுக்கு சூடேறும் விதமாக வெரி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். கால் மேல் கால் போட்டு தொடை தெரியும் அளவிற்கு முன்னழகு மொத்தமாக தெரியும் அளவில் இறுக்கமான ஒரு உடையை அணிந்து வழக்கமான அதே அவரது முக எக்ஸ்பிரஷனை காட்டியிருக்கிறார். இவருடைய இந்த போஸ்ட்டை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் நாங்க இருக்கிறோம் தலைவி என்று கிளம்பி விட்டனர்.

     திடீர் பொங்கல்

    திடீர் பொங்கல்

    இதிலும் சில நெட்டிசன்கள் இவரை கலாய்த்துக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் அவரை கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு தான் இந்தப்பதிவு என்று குறிப்பிட்டிருக்கிறார் .அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார் தெரியுமா. நான் போட்டிருக்கும் இந்த கருத்து, எல்லோருக்கும் அல்ல. என்னை பற்றி பேசும் அனைவருக்கும் என்று கூறியிருக்கிறார் . மேலும் யூட்யூபில் என் பெயரை சொல்லி என்னை ட்ரோல் பண்ணி காசு சம்பாதிக்கும் அவர்களுக்கும் என்று கூறியிருக்கிறார்.

     குறை கூறுகிறீர்களே

    குறை கூறுகிறீர்களே

    ஒரு பெண்ணைப் பற்றி ஒரு பெண்ணின் குணத்தையும் அழகையும் ஒரு பெண்ணின் குரலில் குறை பேசுவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று யூடியூப் சேனல் லில் இவரைப்பற்றி கமெண்டுகளை போடும் நெட்டிசன்களையும் விளாசி எடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நான் என் ஆடைகளை முடிவு செய்ய உரிமை உண்டு நீங்கள் சொல்லும் ஆடை தான் அணியவேண்டும் என்று அவசியமில்.லை எனக்கு பிடித்ததை தான் நான் செய்வேன். நான் என்ன டிரஸ் போடணும் நான் எதை போடக்கூடாது என்று நான் முடிவு பண்ணிக்கிறேன். அதைப்பற்றி நீங்கள் கவனிக்க வேண்டிய அவசியமில்லை.

     நல்லா வளர்த்திருக்காங்க

    நல்லா வளர்த்திருக்காங்க

    அதுமட்டுமல்லாமல் சிலர் நான் வளர்ந்த விதத்தைப் பற்றியும் என்னுடைய ஃபேமிலி பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லணும். என்னோட அம்மா அப்பா என்னை நல்லாவே வளர்த்து இருக்கிறார்கள் . எனக்கு எதுவேணும் எது வேண்டாம் என்னோட சாய்ஸ் முடிவு பண்ணும் உரிமையை கொடுத்திருக்கிறார்கள். நான் போடும் போட்டோஸ் வீடியோஸ் எல்லாமே என்னோட இன்ட்ரஸ்ட்ல்ல இருந்து வந்தது . இதுக்கும் என் பேரன்ட்ஸ்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் சிலர் என்னுடைய ஃபேமிலி பத்தி பேசுறது கொஞ்சம் கூட சரியில்ல.

     அது எனக்கு தேவையில்லை

    அது எனக்கு தேவையில்லை

    நானும் அடுத்தவங்களை இம்ப்ரஸ் பண்றதுக்காக இதையெல்லாம் பண்ணல. அது எனக்கு தேவையும் இல்லை. முதல்ல இந்த பாடி ஷேமிங் பண்றத நிறுத்துங்க. சிலர் என்னுடைய உடல் அமைப்பை பற்றி ஷேமிங் பண்றாங்க. சிலர் என்னுடைய வயதையும் உடலையும் கம்பேர் பண்ணி ஷேமிங் பண்றாங்க. இட் இஸ் நன் ஆப் யுவர் பிசினஸ் .இன்னொரு விஷயம் என்னுடைய கமெண்ட் பாக்ஸ் எல்லாம் நான் ஆப் பண்ண மாட்டேன்.

     நல்ல உள்ளங்களும் இருக்கே

    நல்ல உள்ளங்களும் இருக்கே

    சிலர் உங்களை மாதிரி மெசேஜ் பண்ணும் போது ஆயிரத்திற்கும் மேல நல்ல உள்ளம் கொண்ட என்னுடைய ரசிகர்கள் எனக்காக நல்ல நல்ல கமெண்ட்களை எல்லாம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவங்களுக்காக தான் அந்த கமெண்ட்ஸ் பட்டனை நான் வைத்திருக்கிறேன் என்று பொங்கி எழுந்து பொசுக்கி எடுத்து விட்டார் ஷிவானி. ஷிவானி இவ்வளவு நாளா அமைதியாகத்தான் இருந்தார். ஆனால் இவரை கலாய்க்கும் நெட்டிசன்கள் ட்ரோல் பண்னி போடும் வீடியோ கிரியேட்டர்களும் நாளுக்கு நாள் இவரை கலாய்த்து வளர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து திடீரென்று பொங்கி இருக்கிறார்.

     பிக் பாஸ்

    பிக் பாஸ்

    இவரை கலாய்க்கும் தேட் ரேட் பார்ட்டிகளுக்கு ரிப்ளை கொடுப்பதற்காக ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். இதை படிக்கும் போது முழுக்க முழுக்க இது அவர்களுடைய பர்சனல் வியூ தான் . அப்போ இவ்வளவு நாளா இவர் கமெண்டுகளை எல்லாம் படித்துக்கொண்டுதான் ஆனா ஒரு ரிப்ளை கூட பண்ணாமல் இருந்திருக்கிறார். தற்போது இவர் கொடுத்திருக்கும் ரிப்ளை வைரலாக பரவி வருகிறது. இவர் பிக் பாஸ் 4 சீசனுக்கு செலக்ட் ஆகி இருக்கிறார் என்று ஒரு செய்தி உலாவுகிறது.

     விடாமல் கலக்கல்

    விடாமல் கலக்கல்

    இந்த செய்தி வெளியாகி வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி யாளர்கள் ஒரு ஹோட்டலில் தங்க வைத்து இருக்கிறார்கள் என்றும் செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் சமீபகாலமாக இவர் வெளியிடும் போட்டோக்களில் இவர் ஹோட்டலில் இருப்பது போன்ற போட்டோக்கள் வெளியாகி வருகிறது. இதனை தொடர்ந்து இவர் அந்த வீட்டிற்கு போனதும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்களாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+