தக் லைஃப் தோல்வி! கமல்ஹாசன் மனநிலை இதுதான்! அப்படி சொன்னாரு! வெளிப்படையாக பேசிய ஸ்ருதிஹாசன்
சென்னை: திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் 'பிரீத்தி' என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் அவர் தனது தந்தை நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' பட தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

கூலியில் ஸ்ருதிஹாசன்
'கூலி' படத்தில் ஸ்ருதிஹாசன் ரஜினியுடன் படம் முழுவதும் பயணிக்கும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் அவருக்கு கோலிவுட் திரையுலகில் இதுபோன்ற ரோல்கள் தொடர்ந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ருதிஹாசனின் கருத்து
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தக் லைஃப் படத்தின் தோல்வி கமலை பதித்தா என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு ஸ்ருதிஹாசன் பதிலடிக்கையில்,"சினிமாவில் வெற்றி, தோல்வி என பல விஷயங்களைப் பார்த்தவர் எனது தந்தை கமல் ஹாசன். அதனால் 'தக் லைஃப்' பட தோல்வி அவரைப் பாதிக்கவில்லை" என்று ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
கமலின் எளிமை
"அவர் சினிமாவில் சம்பாதிக்கும் எல்லா பணத்தையும் சினிமாவிலேயேதான் போடுகிறார். கார் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற ஆசைகள் அவருக்கு இல்லை. இதுபோன்ற 'நம்பர் கேம்' (வசூல் கணக்கு) எனது தந்தையை ஒருபோதும் பாதிக்காது" என்று ஸ்ருதிஹாசன் மேலும் தெரிவித்துள்ளார்.
தக் லைஃப் தோல்வி ஒரு பார்வை
'நாயகன்' படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவின் இருபெரும் ஜாம்பவான்களான கமல் மற்றும் மணிரத்னம் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்த படம் 'தக் லைஃப்'. இந்தப் படத்தில் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அசோக் செல்வன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தத் திரைப்படம் வெளியீட்டுக்கு பிறகு கடுமையான எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தது. இதனால் 'தக் லைஃப்' ஒரு மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது.
கமலின் அடுத்த திட்டங்கள்
கமல்ஹாசனுக்கு விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு 'இந்தியன் 2' மற்றும் 'தக் லைஃப்' ஆகிய படங்களின் தோல்விக்குப் பிறகு தனது அடுத்தப் படத்தை நிச்சயம் ஹிட்டாக்க வேண்டும் என்பதில் கமல் உறுதியாக இருக்கிறார். அடுத்ததாக பிரபல சண்டைக் கலைஞர்களான அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி
இதற்கிடையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து அவர் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 'கூலி' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் ரஜினி மற்றும் கமல் இருவரையும் வைத்து லோகேஷ் ஒரு படத்தை இயக்க உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications