சின்ன வயசில் அப்பா, அம்மா என்னை கஷ்டப்படுத்தியிருக்காங்க! தக் லைப் விழாவில் கண்ணீர் விட்ட சிம்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கண் கலங்கியவாறு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்த சிம்பு ரசிகர்களும் உருகி வருகிறார்கள். தக் லைப் படம் சிம்புவுக்கு திருப்புமுனையாக அமையும் என கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

thug life simbu

கடந்த 1987 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் என்ற திரைப்படம் பிளாக் பஸ்டர் படமானது. அந்த படத்தின் பாடல்களும் சரி கதைக்களமும் சூப்பராக அமைந்தது. இன்றும் இந்த படத்தை டிவியில் போட்டால் நிறைய ரசிகர்கள் அந்த படத்தை பார்ப்பதுண்டு.

அந்த வகையில் 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் மணிரத்னம்- கமல் கூட்டணியில் தக் லைஃப் எனும் திரைப்படம் உருவானது. இது வரும் ஜூன் 5-ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது.

சிம்பு கமல்

அதில் சிம்புவை கமல்ஹாசன் எடுத்து வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட பின்னாளில் சந்திக்கும் போது இருவருமே கொலை வெறி கொண்ட எதிரிகளாக இருக்கிறார்கள். இவர்கள் ஏன் எதிரிகளானார்கள் என தெரியவில்லை.

அபிராமியுடன் நெருக்கம்

கமல்ஹாசன், அபிராமியுடன் லிப் லாக் செய்கிறார். த்ரிஷாவுடனும் நெருக்கமாக நடிக்கிறார். இந்த படத்தில் சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.

ஏ.ஆர்.ரகுமான்

இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் கைவண்ணத்தில் ஜிங்குசா, சுகர் பேபி பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது அங்கு நடிகர் சிம்பு பேசுகையில் இந்த மேடையில் நான் எனது தாய், தந்தைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

சாக்லேட்

ஏனென்றால் சின்ன வயதில் எல்லா பசங்களுக்கும் சாக்லேட் வாங்கி தருவார்கள். படத்திற்கு, பீச்சுக்கு அழைத்துச் செல்வார்கள். விளையாட சொல்வார்கள் அல்லது படிக்க சொல்வார்கள். ஆனால் பிறந்தது முதல் எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்தார்கள்.

ஜாலியா இருக்க

அப்போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். ஏன் இப்படி நம்மை கஷ்டப்படுத்துகிறார்களே, மற்ற பசங்க எல்லாம் ஜாலியாக இருக்கும் போது நான் மட்டும் ஒரு பக்கம் படப்பிடிப்பு இன்னொரு பக்கம் படிப்பு என இருந்தேன். அது ரொம்ப கஷ்டமாக இருந்தது.

40 ஆண்டுகள்

ஆனால் இன்று 40 ஆண்டுகள் கழித்து , கமல் சாருடன் தக்லைஃப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்போது எல்லோரும் சிம்புவுக்கு பாடத் தெரியும், ஆட தெரியும் என சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதற்கு எல்லாம் காரணம் எனது தாய், தந்தைதான். அவர்களுக்கு எனது நன்றி.

எமோஷனல்

இன்று எனது அப்பாவை இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டாம் என சொன்னேன். ஏனென்றால் அவர் எமோஷனல் ஆகிவிடுவார் என்பதற்காக சொன்னேன். ஆனால் கடைசியில் நான் எமோஷனலாகி விட்டேன் என நா தழுதழுக்க சிம்பு பேசியிருந்தார்.

கமல் பேச்சு

இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் நான் முதல்வர் ஆவதற்காக அரசியலுக்கு வரவில்லை. நானே ஒரு பிட்டுதான். எனக்கு எம்பி, எம்எல்ஏ என்றால் என்னவென புரியாது. ஆனால் ஒரு எம்எல்ஏ செய்வதை ஒரு தமிழகத்திற்கே செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+