ஜீ தமிழ் சீரியலில் அறிமுகமாகும் பாடகி மால்குடி சுபா.. காரணம்..!! திறமைக்கு எப்போதும் மதிப்பு தான்
சென்னை: பாடகி மால்குடி சுபா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடிக்க இருக்கிறார்.
சீரியலில் அவரோடு எடுத்த புகைப்படங்களை நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடிக்கும் ஹேமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல் முறையாக சீரியலில் அறிமுகமாகும் மால்குடி சுபாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஜீ தமிழ் சீரியல்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் தற்போது பாடகியான மால்குடி சுபா அறிமுகமாக இருக்கிறார். இவருடைய அறிமுகத்தால் இந்த சீரியலின் கதை கலைக்கட்ட போகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். தன்னுடைய பாடலில் மூலமாக எவ்வளவு சோகத்தில் இருப்பவர்களையும் துள்ளல் ஆட்டம் போட வைத்திருக்கும் மால்குடி சுபா தற்போது இந்த நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நவராத்திரி விழா கொண்டாடப்படும் போது அறிமுகமாக இருக்கிறார். அதனால் நவராத்திரி விழாவில் இவருடைய பாடல்கள் கண்டிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

பல மொழி பாடகி
பாடகியே மால்குடி சுபா தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் தன்னுடைய பாடல்களால் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளார். .இதுவரைக்கும் அவர் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். ஆரம்பத்தில் ஏ ஆர் ரகுமான் ரகுமான் மற்றும் விஜி மானுவல் போன்றவர்கள் இசையமைத்த விளம்பரங்களுக்கு குரல் கொடுப்பதன் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். முதல் முறையாக இளையராஜாவின் இசையில் நாடோடி தென்றல் திரைப்படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

வசீகரமான குரல்
அதுமட்டுமல்லாமல் ஏ ஆர் ரகுமானின் முதல் ஆல்பமான "செட் மி ப்ரீ"யரில் அனைத்து பாடல்களையும் மால்குடி சுபா தான் பாடி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் 90ஸ் கிட்ஸ்களை ஆட்டம் போட வைத்த "தைய்ய தைய்ய"பாடல், "துள்ளுவதோ இளமை", "60 ஆயிருச்சு "எனும் பல பாடல்களை இவர் வசீகரமான தன்னுடைய குரலால் பாடி இருக்கிறார். பாடகியாக மட்டுமல்லாமல் நடிகையாக அச்சம் மடம் நாணம் பயிற்று எனும் திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது சீரியலில் இவர் அறிமுகமாக இருக்கிறார்.

என்டர்டைன்மென்ட் இருக்கு
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் தற்போது நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தான் மால்குடி சுபா பாட்டு வருகிறாரா? ? அல்லது சீரியலின் கதைப்படி ஏற்கனவே பொம்மி மற்றும் அந்த வீட்டின் மருமகள்களுக்குள் பாட்டுப் போட்டி நடக்க இருக்கிறது. அதனால் அவர்களின் பாட்டுப் போட்டிக்கு இவர் ஜட்ஜ் ஆக வரப்போகிறாரா?? என்று பொறுத்திருந்து பார்த்தால் தெரியும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் மால்குடி சுபாவின் புகைப்படங்களை பல நாட்களுக்கு பிறகு பார்த்ததால் அவருடைய தீவிரமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications