திருமண தேதியை அறிவித்த சிறகடிக்க ஆசை சீரியல் முத்து.. அடடே இப்படி ஒரு டுவிஸ்ட்டா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடிக்கும் நடிகர் வெற்றி வசந்த்க்கும், சீரியல் நடிகை வைஷ்ணவிக்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருந்த நிலையில் இவர்களின் திருமணம் எப்போது என்று அறிவித்திருக்கிறார்கள்.

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக வெற்றி வசந்த் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்திருக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அதிலும் கிடைத்த வேலை எல்லாம் செய்து வந்த வெற்றி வசந்த்திற்க்கு முதல் முறையாக சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாகத்தான் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் சீரியலிலேயே இவருக்கு பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் கிடைத்து விட்டது .

சிறகடிக்க ஆசை சீரியலில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கேரக்டராக வெற்றி வசந்த் நடித்து வருகிறார். அதனாலேயே இவருக்கு அதிகமான ரசிகர்களும் கிடைத்துவிட்டனர்‌ முத்து மற்றும் மீனா ஜோடிக்கு இணையத்திலும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இரண்டு மாதத்திற்கு முன்பு வெற்றி வசந்த் தன்னுடைய காதல் செய்தியை அறிவித்திருந்தார். அவர் காதலித்து வந்தது விஜய் டிவி பிரபலமான நடிகை வைஷ்ணவி தான். இவர் விஜய் டிவியில் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே சின்னத்திரையில் ஒன்றாக நடித்து பல நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் இந்த ஜோடியும் இணைந்து இருக்கிறார்கள். பொன்னி சீரியலில் கெஸ்ட் ரோலில் அதுவும் பொன்னிக்கு அண்ணனாகத்தான் வெற்றி வசந்த் அந்த சீரியலில் நடித்திருந்தார்.

television siragadikka aasai serial vijay tv

அதற்கு பிறகு இரண்டு மாதங்களில் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு திருமண வரைக்கும் வந்திருக்கிறது. இவர்களுடைய எங்கேஜ்மென்ட் மிக எளிமையாக நடைபெற்றது. அப்போது திருமணம் தேதி விரைவில் அறிவிப்போம் என்று சொல்லி இருந்தனர். இந்த நிலையில் இவர்களுடைய திருமணம் வரும் திங்கள்கிழமை அதாவது நவம்பர் 28ஆம் தேதி தான் நடைபெற இருக்கிறது.

இந்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரத்தில் பல எதிர்பாராத திருப்பங்கள் வர இருக்கிறது. அதே நேரத்தில் இவர்களுடைய திருமணம் செய்தி வெளியானதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+