சிறகடிக்க ஆசை மீனாவிற்கு கல்யாணம்! அவரே வெளியிட்ட பதிவு.. மதுரை பொண்ணுக்கு இப்படி ஒரு ஏற்பாடா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கோமதி பிரியா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதிலும் தனக்கு விரைவில் திருமணம் நடக்க போகிறது என்பது போன்று அந்த பதிவில் சில ஹேஷ்டேக் கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த சீரியலில் பூ கட்டும் பெண்ணாக நடிகை கோமதி பிரியா நடித்து வருகிறார். இவருடைய சொந்த ஊர் மதுரை தான். மதுரையில் நடுத்தர குடும்பத்தை சார்ந்த கோமதி பிரியா சென்னையில் படிக்கப் போயிருந்த நேரத்தில் தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக பகுதி நேரமாக வேலை செய்து கொண்டு இருந்தார்.

சிறகடிக்க ஆசை சீரியல் மீனா
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் ஆடியன்ஸாக கலந்து கொண்டார். அதற்குப் பிறகு சில ஆடிஷனில் கலந்து கொண்ட போது தான் இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் கலர்ஸ் தமிழில் ஓவியா, விஜய் டிவியில் பாவம் கணேசன் போன்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த கோமதி பிரியாவிற்கு சிறகடிக்க ஆசை சீரியலின் மீனா கேரக்டர் தான் பெரிய அளவில் பிரபலம் கொடுத்தது.
சீரியலில் நடிப்பு
சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியலிலும் நடித்து வந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். இப்போது தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டப்பிங் சீரியலில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் சோசியல் மீடியாவிலும் பயங்கரமாக ஆக்டிவாக இருக்கும் கோமதி பிரியா தான் கோவிலுக்கு செல்லும் புகைப்படங்கள் மற்றும் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
கோமதி பிரியா பதிவு
இந்த நிலையில் நேற்று அவர் கிறிஸ்தவ முறையான மணப்பெண் கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். அதில் கிறிஸ்தவ பிரைடல் மேக்கப் பிடித்திருக்கிறதா? அல்லது கவுன் பிடித்திருக்கிறதா? என்று ஓட்டிங் வைத்திருக்கிறார். அதே போல மணப்பெண், குட் நியூஸ், பிளசிங், விரைவில் திருமணம் என்பது போன்ற ஹேஷ்டேக் அதில் பகிர்ந்து இருக்கிறார்கள். இதனால் கோமதி பிரியாவிற்கு விரைவில் திருமணமா? என்ற கேள்விகள் ரசிகர்களுக்கு வருகிறது. இது குறித்து கமெண்ட்கள் அதிகமாக வந்திருக்கிறது. ஆனால் கோமதி பிரியா எந்த கமெண்ட்களுக்கும் விளக்கம் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications