Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை சூட்டிங்கில் 2 மணி நேரம் அழுதேன்.. நான் சாப்பிடற தட்டு கூட இவங்க தந்தது தான்! வெற்றி வசந்த் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial ) முத்து கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் வெற்றி வசந்த் (Vetri Vasanth) தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து சமீபத்தில் பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் பேசி இருக்கிறார்.

சின்னத்திரை விஜய் சேதுபதி என்று செல்லமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் வெற்றி வசந்த் சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருக்கிறார். இந்த சீரியலுக்கு முன்பு ஒரு சில ஷார்ட் பிலிம்ங்களிலும், ஆல்பங்களில் நடித்திருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் முதல் சீரியலிலே வெற்றி வசந்துக்கு கிடைத்துவிட்டது.

Vetri Vasanth Siragadikka Aasai serial Vijay TV Tamil Television

இந்த சீரியலில் இருந்து இவர் சினிமாவில் நடிக்கலாம் என்று பலரும் கூறிவரும் அளவிற்கு இவருடைய நடிப்பு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இதே போல நம்ம வீட்ல ஒரு பிள்ளை இல்லையே என்று பல தாய்மார்கள் வெற்றிவசந்த் நடிக்கும் முத்து கேரக்டரை பார்த்து ஏங்கி வருகிறார்கள்.

நடிகர் வெற்றி வசந்த் பேட்டி

இந்த நிலையில் வெற்றி வசந்த் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது, இந்த சீரியல் வாய்ப்பு எனக்கு எதிர்பாராத விதத்தில் தான் கிடைத்தது.. ஒரு நண்பர்தான் நீ போய் இந்த ஆடிஷனில் கலந்து பாரு என்று சொன்னாங்க. நான் போய் கதை கேட்டதும் எப்படியும் நமக்கு கிடைக்காது என்று நினைத்தேன். ஆனால் என்னை செலக்ட் பண்ணி விட்டேன் என்று சொன்னார்கள். ஆரம்பத்தில் எனக்கு டிரைவிங் தெரியாததால் பிறகு கற்றுக்கொண்டு இப்போ நடித்துக் கொண்டிருக்கிறேன்.

இது ஒரு பக்கம் இருக்க, இந்த சீரியலில் நடிக்கிற எல்லாருமே ஒரே குடும்பம் போல தான் இருக்கிறோம் என்று பேசி இருந்தார். அதோடு இந்த சீரியலில் பார்வதி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை உடன் உள்ள தன்னுடைய பந்தத்தை பற்றியும் பேசி இருந்தார்.

பார்வதியும் அந்த பேட்டியில் கலந்து கொண்டார். அவர் வெற்றி வசந்த பற்றி பேசும்போது, வெற்றி வசந்த் என்னுடைய சொந்த பிள்ளை மாதிரிதான். சீரியலில் என்னை அத்தைன்னு கூப்பிடுவாரு. ஆனா சூட்டிங் முடிந்ததும் என்னை அம்மானு கூப்பிடுவாரு. எனக்கு ஒரு மகன் இருக்கிறார். அவன் எப்படி எனக்கு முக்கியமோ அதேபோலத்தான் வெற்றிவசந்த்தும் எனக்கு முக்கியம் என்று உருக்கமாக பேசினார்.

பந்தா இல்லாத ஹீரோ

அதோடு நான் பல ஹீரோவை பார்த்திருக்கிறேன் அவங்க சூட்டிங் ஸ்பாட்டில் ஓவராக அலப்பறை பண்ணுவாங்க. ஆனால் வெற்றிவசந்த் அப்படி எந்த பந்தாவும் பண்ண மாட்டாரு. சீரியலில் எப்படி இருக்கிறாரோ அதேபோலத்தான் நிஜத்திலும் எல்லாரிடமும் பழகுவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட வெச்சி வசந்த் இவங்க எப்பவுமே இப்படித்தான் சொல்லுவாங்க ஆனால் எனக்கு உண்மையில் இவங்க ஒரு அம்மா மாதிரி தான்.

பார்வதி கொடுத்த கிப்ட்

இவங்க என்னுடைய கல்யாணத்துக்கு கொடுத்த பிளேட்லதான் நாங்க சாப்பிட்டுட்டு இருக்கிறோம். என்னுடைய மனைவி எல்லாமே பீங்கான் மற்றும் மரத்திலான பொருட்களை தான் வாங்கி வைத்திருக்கிறார். இவங்க எங்க கல்யாணத்தோட ஒரு பெரிய பாக்ஸ் கொடுத்தாங்க. அது என்னன்னு பார்த்தா எல்லாமே சாதாரணமா பயன்படுத்துற பொருள்கள். இப்போ வரைக்கும் இவங்க வாங்கி கொடுத்த தட்டுல தான் சாப்பிடுறோம். டம்ளரில் தான் தண்ணி குடிக்கிறோம் என்று பேசிக் கொண்டிருந்தார்.

வெற்றி வசந்த் அழுகை

அப்போது வெற்றி வசந்திடம் நீங்க கடைசியாக எதற்காக அழுதீங்க என்று கேட்க, நான் கடந்த வாரம் சிறகடிக்க ஆசை வீடியோ சூட்டிங் ஸ்பாட்டுல தான் ரொம்ப நேரம் அழுதேன். அது ஒரு எமோஷனலான காட்சி ஷூட்டிங் எடுத்துட்டு இருந்தாங்க. அதுக்காக நான் ரெண்டரை மணி நேரம் அழுது ஆரம்பத்தில் கிளிசரின் போட்டேன் பிறகு அந்த காட்சியில் நான் ஒன்றி போய் என்னை அறியாமல் அழுது கொண்டிருந்தேன். அதுதான் நான் அதிகமாக அழுதது என்று ஒரு எமோஷனலாக பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+