சிறகடிக்க ஆசை: அண்ணாமலை வீட்டிற்கு வந்த பெண்ணால் வெடித்த பூகம்பம்.. மீனாக்கு போன் பண்ணி முத்து கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை 12ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா வீட்டை விட்டு போனதால் மொத்த குடும்பத்தினரும் கஷ்டப்படுகின்றனர். அதே நேரத்தில் மீனாவுக்காக சப்போர்ட் செய்து முத்து விஜயாவை திட்டுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்ததும் சத்யாவும் அவருடைய அம்மாவும் நாங்க வேணும்னா மாப்பிள்ளை கிட்ட பேசி பார்க்கவா? என்று கேட்க நீங்க யாரும் எதுவும் பண்ண வேண்டாம் அவரே வந்து கூப்பிடுவாரு, அவர் இல்லாம என்னால் இருக்க முடியாது என் நான் இல்லாமல் அவரால் எடுக்க முடியாது. என்ன நெனச்சு நீங்க யாரும் கவலைப்படாதீங்க என்று சொல்லிவிட்டு நான் இங்கதான் இருக்கிறேன் என்று விஷயத்தை சீதாவுக்கு சொல்ல வேண்டாம் என்று மீனா சொல்லிவிட்டு மாடியில் இருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அப்போது மீனாவின் அம்மா நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன் என்று கீழே போகிறார். மறுபக்கத்தில் ரவியும் மனோஜும் மாடியில் குடித்துக்கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் முத்துவும் அங்கு வந்து என்னை பார்த்து எல்லாரும் குடிகாரன்னு சொல்லுறீங்க.. ஆனா நீங்க ரெண்டு பேரும் இங்க ரகசியமா குடிச்சிட்டு இருக்கீங்க. உங்களை யாரும் அப்படி சொல்ல மாட்டாங்களே? என்று கேட்டுக் கொண்டு அங்கு வந்து இருக்கிறார்.

பிறகு நான் ரவி நீ எதுக்கு இங்க வந்தா என்று கேட்க, மீனா துணி காயப்போட வந்திருப்பா அதான் பார்க்க வந்தேன் என்று சொன்னதும், நடந்ததெல்லாம் மறந்து போச்சா? அண்ணியை நீ வீட்டை விட்டு போக சொல்லிட்டியே என்று ரவி ஞாபகப்படுத்த யோசித்துப் பார்த்த முத்து, ஆமா மீனா என்கிட்ட உண்மையை மறைச்சுட்டா என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு மனோஜ் இன்னும் என்னவெல்லாம் விஷயத்தை மறைச்சிருக்காலோ தெரியல அது என்னனு போன் பண்ணி கேளு என்று ஏத்தி விட முத்து போன் பண்ணுகிறார் .

மீனா என்ன விஷயம் பத்தி கேட்க இன்னும் எத்தனை விஷயத்தை எங்கிட்ட மறைச்சிருக்க என்று கேட்டதும் மீனா கோபத்தில் ஃபோனை வைத்து விடுகிறார். ஆனாலும் முத்து விடாமல் போன் அடித்து கொண்டே இருக்க, அது பெரிய லிஸ்ட் இருக்கிறது, அதை நாளைக்கு காலையில் நீங்க தெளிஞ்ச பிறகு கேளுங்க நான் சொல்லுறேன் என்று போனை வைத்து விடுகிறார். மீனா போனை வைத்ததும் மனோஜ் ரோகினி என்கிட்ட எதையும் மறைக்க மாட்டா என்று சொல்ல, முத்து சிரித்துக் கொண்டு என் பொண்டாட்டியாவது ஒரே ஒருமுறை தான் பொய் சொல்லி மாட்டி இருக்க ஆனா உன் பொண்டாட்டி மாசத்துக்கு ஒரு வாட்டி பொய் சொல்லிட்டு மாட்டி இருக்கா ஆனா நீ இப்படி சொல்ற, நீ வேணா இப்ப ரோகிணிக்கு போன் பண்ணி என்கிட்ட என்னெல்லாம் மறைச்சிருக்கேன்னு கேளு என்று சொல்ல மனோஜ் போன் செய்ய மாட்டேன் என்று மறுக்கிறார்.

பிறகு மறுநாள் காலையில் போதை தெளிந்த முத்து மீனா மீனா என்று கூப்பிட அண்ணாமலை வந்து இப்பதான் உனக்கு தெளிஞ்சி இருக்கா என்று கேட்கிறார். பிறகு மீனா இங்க இல்ல என்பது உனக்கு தெரியாதா? என்று கேட்க, முத்து நடந்ததெல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் விஜயாவும் வந்து மீனா எனக்கு ஒரு டீ போடு என்று சொல்கிறார்.

அண்ணாமலை விஜயாவிடமும் உனக்கு மறந்துடுச்சா என்று கேட்க அவா தான் வீட்டை விட்டு போயிட்டாளே என்று சொல்லிவிட்டு ரோகிணி எனக்கு டீ போட்டுக் கொண்டு வா என்று சொல்ல ரோகிணி டீயை போட்டு கொண்டு கொடுக்க, அதை குடித்து பார்த்து விட்டு தூக்கி விடுகிறார். பிறகு நேற்று வரைக்கும் எங்க வீட்டுல ஒரு வேலைக்காரி இருந்தா அவ கிட்ட கத்துக்க வேண்டியதுதானே என்று சொன்னதும் எல்லாரும் யார் என்று குழப்பத்தில் இருக்கின்றனர்.

பிறகு விஜயா அந்த மீனாவ தான் வேலைக்காரின்னு சொல்லுறேன் என்று சொன்னதும், முத்து இந்த வீட்டு வேலைக்காரி இல்லை என் பொண்டாட்டி என்று கோபப்படுகிறார். அதை பார்த்ததும் ஸ்ருதி பரவாயில்லை நீங்க மீனாவை பத்தி பேசினா கேட்க மாட்டீங்கன்னு நினைச்சேன் ஆனா சப்போர்ட் பண்றீங்க என்று சொல்கிறார். இதனால் கோபப்பட்ட விஜயா கோபத்தை ரோகிணியிடம் காட்டுகிறார். நீ வேலைக்காரிக்கு கூட லாயக்கு கிடையாது என்று திட்டிவிட்டு போகிறார். ஆனால் மனோஜ் எதுவும் சொல்லாமல் அம்மா பின்னாடியே போக இதனால் ரோகிணி கோபத்தில் இருக்கிறார்.

நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் வீட்டிற்கு சமைப்பதற்காக ஒரு பெண்ணை கூட்டிக்கொண்டு ரோகிணி வருகிறார். அந்த பெண் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டதும் குடும்பத்தினரும் காரத்தில் கத்திக் கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து என் பொண்டாட்டியை வேலைக்காரின்னு சொன்னீங்க இல்ல, உங்களுக்கு இதுவும் தேவை தான் இன்னும் தேவை தான் என்று சொல்லிவிட்டு போகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+