சிறகடிக்க ஆசை: ரோகிணியின் பிளானுக்கு ஆப்பு வைத்த முத்து.. மீனாவின் சாமர்த்தியம்.. சிக்கிய மலேசிய மாமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 22ஆம் தேதிக்கான எபிசோடில் மலேசியாவுக்கு செல்ல வேண்டும் என்று முத்து சொன்னதை கேட்டு விஜயாவும் சம்மதம் சொல்கிறார். அதனால் ரோகிணி புது ப்ளான் போடுகிறார். ரோகிணியிடம் மலேசியா மாமாவாக நடித்த பிரவுன் மணி சிக்குகிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மலேசியா போக வேண்டும் என்று முத்து அண்ணாமலை விஜயாவிடம் பேசிக் கொண்டிருக்க, ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அதோடு இந்த விஷயத்தில் விஜயா முத்துவுக்கு சப்போர்ட்டாக பேசியதும் அண்ணாமலை அதிர்ச்சி அடைகிறார்.

Siragadikka aasai serial vijay tv

அண்ணாமலை மட்டும் முதலில் மலேசியாவுக்கு போக வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது முத்துவுக்கு சப்போர்ட்டாக மீனா பேசிக்கொண்டே இருக்கிறார். அதனால் விஜயாவும் மலேசியாவுக்கு போகலாம் என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். இதனால் ரோகிணி அதிர்ச்சியாக இருக்கிறார். மறுபக்கத்தில் முத்து மொட்டை மாடியில் மீனாவுடன் சிஐடி போல பேச ஆரம்பிக்கிறார்.

முத்து மலேசியாவுக்கு போவதாக சொன்னது எல்லாம் உண்மை என்று நினைத்த மீனா மாடிக்கு வந்து முத்துவுடன் சண்டை போடுகிறார்கள். இருக்கிற காசு எல்லாம் இப்போ மலேசியாவுக்கு போய் செலவழிச்சிட்டா நாம எப்ப வீடு கட்டுவது என்று வாக்குவாதத்தில் ஈடுபட, நான் சொன்னது எல்லாமே பொய். இதை தடுப்பதற்காக ரோகிணி ஏதாவது கிரிமினல் வேலை செய்வா. அப்போ அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று பிளான் போடுகின்றனர்.

மறுபக்கத்தில் ரூமிற்கு போன ரோகிணி மனோஜிடம் என்னுடைய அப்பா ஜெயிலில் இருக்கும்போது எல்லாரும் போய் அவரை பார்ப்பது எனக்கு பிடிக்கல. நீ எனக்கு சப்போர்ட்டா எதுவுமே பேசல என்று அழுது புலம்புகிறார். இதனால் இதனை நம்பும் மனோஜ் விஜயாவிடம் சென்று யாரும் மலேசியாவுக்கு போக வேண்டாம். நம்மள எல்லாம் மாமா பாத்தா வருத்தப்படுவாரு.

அவர் வெளியே வந்த பிறகு போய் பார்த்துக்கலாம் என்று சொல்ல, அங்கு வந்த முத்துவும் மீனாவும் ரோகிணி அப்பாவை போய் பார்க்கலன்னா தப்பா நினைப்பாங்க. அவங்க வெளியே வந்த பிறகு நாம போனா பணத்துக்காக போன மாதிரி இருக்கும். கஷ்டத்தில் நாம் இருக்கோம் என்று காட்டணும் என்று சொன்னதும் விஜயாவும் ஆமா கட்டாயம் நாம போய் தான் ஆகணும் என்று சொல்கிறார்.

இதனால் மனோஜ் வேறு வழியில்லாமல் திரும்பி போகிறார். அடுத்ததாக இருக்கும் போது ஸ்ருதி டப்பிங் முடித்துவிட்டு வருகிறார் அப்போது நான் இன்னைக்கு ஒரு சீரியலுக்கு டப்பிங் பேசினேன். அதில் கணவர் டைம் ஸ்பென்ட் பண்ணவில்லை என்று டைவர்ஸ் கேட்டதாக ரவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

நாம ரெண்டு பேரும் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று மணி நேரம் தான் ஒன்றாக இருக்கிறோம் என்று கணக்கு போட்டு பார்க்கிறார். பிறகு இதைப் பற்றி கேட்பதற்காக ரோகிணி, மனோஜ் மற்றும் மீனா, முத்துவை கூப்பிட்டு வைத்து விசாரிக்கிறார். அப்போது மனோஜும் ரோகிணியும் நாங்கள் ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் ஒன்றாக இருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

முத்துவும் மீனாவும் நாங்கள் 10 மணி நேரம் ஒன்றாக இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். இதனால் நாம தான் டைம் ஸ்பென்ட் பண்ணுவது குறைவு என்று ஸ்ருதி சண்டை போடுகிறார். அதற்கு முத்து நாம் மலேசியாவுக்கு போறோம் நீங்க அங்க வாங்க ஒரு வாரம் முழுக்க ரவி உன்கூடவே டைம் ஸ்பென்ட் பண்ணுவான் என்று சொன்னதும், ஸ்ருதி அதற்கு சம்மதம் சொல்கிறார்.

இது ரோகிணிக்கு மேலும் அதிர்ச்சியை கொடுக்கிறது. கடைசியாக வித்யாவிடம் சென்று வீட்டில் நடந்த எல்லா பிரச்சனையும் சொல்ல வித்யா இப்பவாவது உண்மையை ஒத்துக் கொண்டு எல்லார் காலிலும் விழுந்திரு என்று சொல்ல, அது முடியாது என்று ரோகிணி சொல்கிறார்.

அதோடு பிரவுன் மணியே வரச் சொல்லி அவரிடம் பேசவேண்டும் என்று சொல்கிறார். பிறகு பிரவுன் மணி அங்கு வந்ததும் இந்த ஒரு முறை மட்டும் தனக்கு உதவி பண்ணுமாறு கேட்க, அவர் முடியாது என்று சொல்கிறார். பிறகு இதுதான் எனக்கு கடைசி சான்ஸ் இந்த ஒரு தடவை மட்டும் நீங்க எனக்கு உதவி செய்தால் போதும் நீங்க நல்ல விஷயத்துக்காக தான் செய்றீங்க. என் வாழ்க்கையை காப்பாற்றி தாங்க என்று ரோகிணி அழுததும் பிரவுன் மணி சம்மதம் சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+