சிறகடிக்க ஆசை: முத்துவுக்கு கிடைத்த ஆதாரம்.. மீனாவின் தாண்டவம்.. ரோகிணி உளறிய உண்மை! செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 27ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி தான் தன்னுடைய போனை திருடியது என்ற உண்மையை முத்து கண்டுபிடிக்கிறார். அதே நேரத்தில் ரோகிணி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் வித்யாவும், ரோகிணியும் சண்டை போடுகின்றனர். அப்போது ரோகிணி இனி உன்னுடைய ஃப்ரெண்ட்ஷிப் எனக்கு தேவையில்லை என்று சொல்கிறார். இதை கேட்ட வித்யாவும் உன்னுடைய புருஷன் குடும்பத்தையே இப்படி ஏமாத்துற, நீயும் எனக்கு வேண்டாம் என்று இருவரும் தங்களுடைய பிரண்ட்ஷிப்பை முறித்துக் கொள்கிறார்கள்.

மறுபக்கத்தில் போனை யார் எடுத்திருப்பார் என்று மீனா யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து சத்யாவிடம் போன் செய்து வீடியோவை லீக் செய்தது யாரு என்று ஏதாவது கண்டுபிடிச்சியா? என்று கேட்க, அதற்கு சத்யா ஆமா அது சிட்டி தான் லீக் செஞ்சதா அவனோட பிரெண்ட்ஸ் சொன்னாங்க என்று சொல்கிறார்.
அப்போது இது கட்டாயம் ரோகிணி வேலையாக இருக்கும். அவன் மேல தான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது அப்படி இல்லை என்றால் ரோகிணியின் பிரண்டு வித்யா தான் எடுத்திருப்பா. நாம மனோஜ் கல்யாணம் பார்ட்டிக்கு போயிட்டு வரும்போது தான் போன் மிஸ் ஆகி இருந்தது. அதனால் ரோகிணி அல்லது அவருடைய பிரண்டு தான் சிட்டிக்கு கொடுத்திருப்பாங்க. சிட்டி அந்த போனிலிருந்த வீடியோவை லீக் செய்து இருக்கிறான் என்று கெஸ் பண்ணுகிறார்.

அதோடு ரோகிணி போட்டோவையும் வித்யாவின் போட்டோவையும் தாத்தாவிடம் காட்டினால் அவர்கள் அடையாளம் காட்டுவாங்க என்று முத்து பிளான் போடுகிறார். ஆனால் ரோகிணியை போட்டோ எடுக்கலாம். ஆனால் வித்யா போட்டோ இல்லையே என்ன செய்ய என்று மீனா கேட்டதும் நீ நாளைக்கு வித்யா வீட்டுக்கு சென்று வித்யாவை போட்டோ எடுத்து விடு என்று முத்து ஐடியா கொடுக்கிறார்.
அடுத்த நாள் காலையில் வித்யா வீட்டிற்கு மீனாவை பின் தொடர்ந்து வந்த முருகன் போகிறார். வித்யாவிடம் உங்களை ரெண்டு நாளா வெளியே பார்க்கவே இல்லை என்று லவ் மூடில் பேசுகிறார். அவரிடம் கோபத்தை காட்டும் வித்யா அவர் போன பிறகு அவர் மீது காதல் வந்தது போல அவர் பேசியதை நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறார்.
எதிர்நீச்சல் 2வில் என்ட்ரி ஆகும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. மாற்றப்பட்ட கதை.. ஆனால் இது தப்புங்க!
அந்த நேரத்தில் மீனா அங்கு போனதும் அவரிடம் எனக்கு லைஃப் பார்ட்னர் வேண்டுமென்றால் நான் எப்படி தேர்ந்தெடுப்பது என்று வித்யா கேட்கிறார். அதற்கு ஒரு நாள் ஃபுல்லா அவருடைய போனை வாங்கி வைத்திருந்தால் அவர் எப்படிப்பட்டவர் என்று கண்டுபிடித்து விடலாம் என்று சொன்னதும் வித்யாவின் முகம் சிவக்கிறது.
அப்போது மீனா அவரை வளைத்து வளைத்து போட்டோ எடுத்து விடுகிறார். பிறகு மீனா அங்கிருந்து கிளம்பி முத்துவிடம் வித்யா போட்டோவை காட்ட அவர் அதனை தாத்தாவின் உறவினருக்கு அனுப்பி இந்த இரண்டு பெண்களில் யார் போனை தவறவிட்டது என்று கேட்டு சொல்லுங்கள் என்று சொல்கிறார்.

ஆனால் அந்த நபர் நான் வேலைக்காக வெளியே போயிருக்கிறேன். ஊருக்கு போக ரெண்டு நாள் ஆகும் அப்புறம் கேட்டு சொல்றேன் என்று சொல்கிறார். இறுதியில் ரோகிணி தூங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மீனா பேய் போல வந்து முத்து போனை எடுத்தது நீதானே? சத்யாவின் வீடியோவை ரிலீஸ் பண்ணது நீதானே என்று அவரை மிரட்டுவது போல கனவு கண்டு கத்தி கொண்டிருக்கிறார். அதை பார்த்து மனோஜ் அதிர்ச்சியில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications