சிறகடிக்க ஆசை: முத்துவிடம் போன் பற்றி வித்யா சொன்ன விஷயம்.. அதிர்ச்சியில் ரோகிணி.. மீனா கேட்ட கேள்வி
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 31ஆம் தேதிக்கான எபிசோடில் முத்துவின் போனை தொலைத்தது வித்யா தான் என்ற உண்மை முத்துக்கு தெரியவருகிறது. வித்யா சொன்ன வார்த்தையை கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஸ்ருதியும் ரவியும் திருமண நாளுக்காக எல்லோருக்கும் இன்விடேஷன் கொடுத்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து எங்க எல்லோருடைய பெயரையும் வச்சிருக்க ஆனா மனோஜ் என்ன செய்யப் போறான் என்று அவன் பெயரை போட்டு இருக்கே என்று கேட்க மனோஜ் அதிர்ச்சி அடைகின்றார்.

அதற்கு ரோகிணி நான் தான் எல்லாருக்கும் மேக்கப் பண்ண போறேன் என்று சொல்ல, சரி நீ அது பண்ணுற ஆனால் மனோஜ் என்ன பண்ணுறான் என்று கேட்க, அதற்கு மனோஜ் எதுவும் சொல்லாமல் நிற்கிறார். அதற்கு முத்து அப்போ உன் கடையில் இருக்கும் கல்லாப்பெட்டி கொண்டு வந்துரு என்று சொல்கிறார் இதனால் விஜயா கோபப்பட்டு முத்துவை திட்டுகிறார்.
அதற்கு பிறகு அண்ணாமலை எல்லாருடைய பெயரையும் மறக்காமல் இன்விடேஷனில் போட்டதற்கு ஸ்ருதியை பாராட்டுகிறார். ஆனால் மீனா சொன்னதால்தான் எனக்கு தெரிந்தது அவங்க தான் இதற்கு காரணம் என்று ஸ்ருதி சொல்ல, அண்ணாமலை மீனாவை பாராட்டுகிறார். அந்த நேரத்தில் முத்துவுக்கு ஃபோன் வருகிறது.
அதாவது முத்து உதவி செய்த தாத்தாவின் உறவினர் ஃபோன் பண்ணுகிறார். அவர் நீங்க அனுப்புன இரண்டு போட்டோவில் இருக்கிற பொண்ணுதான் உங்க செல்போனை தொலைச்சது என்று சொல்ல, அதில் யார் என்று முத்து கேட்டதும் வித்யா என்று அந்த நபர் சொல்கிறார். உடனே முத்து மீனாவை தனியாக கூப்பிட்டு வித்யா நான் செல்போனை தொலைச்சிருக்கா.

அப்போ இவருக்கு பார்லர் அம்மா தான் எடுத்துக் கொடுத்து இருக்கணும் பார்லர் அம்மாவின் கல்யாண ஃபங்சனுக்கு தானே நாம போயிட்டு வந்தோம் அதற்கு பிறகு தான் என் போன் தொலைஞ்சது. அதனால் இது பார்லர் அம்மா செஞ்ச வேலையா தான் இருக்கும். இதை பத்தி நான் முழுமையாக கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு முத்து வித்யாவின் வீட்டிற்கு போகிறார்.
முத்துவை பார்த்ததும் வித்யா என்ன திடீர்னு வந்து இருக்கீங்க என்று கேட்க, அதற்கு முத்து எல்லோரும் வரணும்னா திடீர்னு தான் வர முடியும் என்று சொல்லி திமிராக பேசுகிறார். பிறகு செல்போனை எதுக்காக எடுத்த என்று கேட்க, இது யாரு செல்போன் நான் எதுவும் எடுக்கலையே என்று வித்யா சொல்கிறார்.
அதற்கு பிறகு எல்லா விஷயமும் தெரிஞ்சு தான் வந்திருக்கிறேன் நீ தான் இந்த செல்போனை எடுத்து தொலைச்சுருக்குற. நீ செருப்பு தைக்க போன இடத்தில் செல்போனை விட்டுட்டு வந்து இருக்குற என்று எல்லா விஷயத்தையும் சொன்னதும் வித்யா ஒரு நிமிஷம் அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு நான் இந்த செல்போனை தெருவில் விற்பவர்களிடம் தான் வாங்கினேன் என் செல்போன் சரியில்லாமல் போய்விட்டது. மாத கடைசி என்பதால் என்னிடம் பணம் இல்லை அதனால் தான் இந்த பழைய ஃபோனை வாங்கினேன். வாங்கின அடுத்த நாளே இது காணாமல் போயிடுச்சு. எங்க தொலைச்சேன்னு தெரியாம இருந்தேன். ஆனா அது செருப்பு தைக்க போன இடத்தில் தான் தொலைஞ்சது என்று இப்பதான் தெரியும்.

இந்த போன் வாங்கியதால் எனக்கு ரெண்டு ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஆகிடுச்சு. இது உங்க ஃபோன் என்று தெரிஞ்சிருந்தா உங்ககிட்ட அப்பவே கொடுத்திருப்பேனே என்று சொல்ல, இது இதை நம்பாத முத்து நீ பார்லர் அம்மா ஃபிரண்டு அவங்கள போலவே பேசுற. தப்பு செய்றவங்களை விட தப்புக்கு துணை போறவங்களுக்கு தான் தண்டனை அதிகம். உன்ன கல்யாணம் பண்ண போறவன் என்ன பாவம் செஞ்சானோ தெரியல என்று சொல்லிவிட்டு போகிறார்.
இதை நினைத்து வித்யா ஃபீல் பண்ணி நினைத்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் முத்து வீட்டிற்கு வந்து மீனாவிடம் வித்யா வீட்டிற்கு போனேன் அந்த போன் கடையில் வாங்கினேன்னு சொல்லுறா என்று சொல்லிக் கொண்டிருக்க இதையெல்லாம் மறைந்திருந்து கேட்ட ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு வித்யாவை நேரில் சந்தித்து ரோகிணி நன்றி சொல்கிறார். வித்யா நீ உன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்வதற்காக தான் இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கிற உன்னை நான் மாட்டிக் கொடுக்க வேண்டாம் என்று நினைத்து தான் மாற்றி சொன்னேன் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு மனோஜ் தனக்கு பேய் பிடித்து விட்டது என்று நம்பி சாமியாரை வரவழைத்து செய்த செயல் எல்லாவற்றையும் ரோகிணி சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications