சிறகடிக்க ஆசை: சீதாவிற்காக நீதி கேட்ட பெண்.. மீனா முன்பு முத்து சொல்ல போகும் வார்த்தை! இனி சம்பவம் இருக்கு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் 9ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சீதா காதலுக்கு முத்து சம்மதம் தெரிவிக்காமல் இருக்கும் நிலையில் புதிய பிரச்சனை ஒன்று முத்துவிடம் வருகிறது. இந்த நிலையில் முத்து சீதாவின் காதலுக்கு சம்மதம் தெரிவிப்பாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்க வைத்திருக்கிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் சில நாட்களாகவே கதை பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லாமல் தான் போய்க்கொண்டிருக்கிறது. ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிய வந்த பிறகு அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மனோஜ்க்கு இன்னொரு கல்யாணம் பண்ண வேண்டும் என்று விஜயா பிளான் போட்டு இருக்கிறார். மறுபக்கத்தில் சீதாவின் காதல் விஷயமும் முத்து மற்றும் மீனாவிற்கு தெரிய வந்திருக்கிறது எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அருண் மற்றும் சீதா கல்யாணத்தை நடத்தி வைப்பதற்காக மீனா முத்துவை எதிர்த்து கொண்டு இருக்கிறார்.

காதல் தொல்லை
இந்த நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவமும் நேற்றைய எபிசோடில் நடந்தது. அதாவது நேற்று முத்து சவாரிக்காக காரில் போய்க்கொண்டிருக்கும் போது ஒரு அம்மா குறுக்க வந்து காரை நிறுத்தி இருந்தார். தன்னுடைய மகள் விஷத்தை குடித்து விட்டாள். ஆபத்தாக இருக்கிறாள். அவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகணும்னு அந்த அம்மா சொல்ல முத்து தான் அந்த பெண்ணை ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு வந்து இருந்தார்.
முத்துக்கு வந்த பிரச்சனை
அப்போது அவருடைய அண்ணனும் ஹாஸ்பிடலுக்கு வந்து இருந்தார். அவரைப் பார்த்ததும் அந்த பெண்ணின் அம்மா, என்னுடைய பொண்ணு ஒரு பையனை காதலிச்சா ஆனா என்னுடைய பையனும் என் கணவரும் அந்த பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதனால என் பொண்ணு மருந்து குடிச்சுட்டா. நீங்களே என் பையன் கிட்ட ஒரு நல்ல முடிவு சொல்லுங்க... அவளுக்கு ஆசைப்பட்ட பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறேன்னு சொல்லுங்க என்று அந்த பெண் முத்துவிடம் கேட்க, அதற்கு பக்கத்தில் இருக்கும் சீதா நீங்களே சொல்லுங்க உங்களுடைய வார்த்தை அவங்க ரொம்ப எதிர்பார்க்காங்க என்று சொல்கிறார்.
மீண்டும் மீண்டும் ஒரே காட்சி
அதோடு நீங்களே சொல்லுங்க காதலிச்ச பொண்ணுக்கு அந்த பையனை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி சொல்லுங்க என்று அழுத்தி மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சீதாவும் பக்கத்தில் நின்று கொண்டு இருக்க, முத்து என்ன சொல்ல என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இதுதான் இந்த வார ப்ரோமோவாக இருக்கிறது. ஆனால் இரண்டு வாரங்களாக முத்து சீதாவிற்கு அருணை கல்யாணம் பண்ணி வைக்க விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருப்பதும், மீனா சீதாவுக்காக சப்போர்ட் பண்ணுவதுமாக கதை நகர்ந்....து கொண்டிருக்கிறது.
இனி இதுதான் கதை
அடுத்த வாரத்திலும் இதே சங்கதி தான் நிலுவையாக இருக்கப்போகிறது என்று தெரிகிறது. அதனால் இந்த கதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு போனால் நன்றாக இருக்கும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. முத்து, காதலிச்ச பையனுக்கு பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு சொல்லப் போறாரா அல்லது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கும் அந்தப் பெண் காதலிச்ச பையன் தப்பானவன் என்று ஏதாவது ஆதாரத்தை காட்டப் போறாரான்னு தெரியவில்லை. ஏற்கனவே அருண் மற்றும் முத்துக்கு இடையே ஈகோ பிரச்சனை அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ஒருவேளை இப்போது சீதாவிற்காக முத்து அருணை கல்யாணம் பண்ணுவதற்கு சம்மதித்தாலும் அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கப் போகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications