சன் டிவி சீரியலுக்கு மாறிய சிறகடிக்க ஆசை ரோகிணி.. அதுவும் இப்படி ஒரு கேரக்டரா? அப்போ விஜய் டிவி நிலைமை?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சிரியலில் ரோகினி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சல்மா அருண் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இவருடைய என்ட்ரி ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது. இதனால் இனி இவர் சிறக்கடிக்க ஆசை சீரியலில் தொடர்வாரா? இல்லையா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் வந்திருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் கதாநாயகன் முத்து மற்றும் மீனாவிற்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு இந்த சீரியலில் வெற்றிக்கு முக்கிய காரணமாக ரோகிணி கேரக்டரில் நடித்துவரும் சல்மாவிற்க்கும் இருக்கிறார். இவர் இதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடித்திருந்தார்.

தொடரும் பிரச்சனைகள்
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலிலும் வில்லி கேரக்டரில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அந்த சீரியல் முடிவடைந்த நேரத்தில் தான் இவருக்கு சிறகடிக்க ஆசை சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இவர் வில்லியா அல்லது ஐயோ பாவமா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஊரில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் எனக்கு தான் வருமா? என்று கேட்பது போலத்தான் ரோகிணிக்கு மட்டும் வாராவாரம் ஒரு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.
ரோகினி பற்றிய உண்மைகள்
ஆனால் ரோகிணி ஒவ்வொரு பிரச்சனையிலும் சுயநலமாக தான் தப்பிப்பதற்காக அடுத்தவர்களை பழிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறார். அதனால் ரோகிணி பற்றிய மொத்த உண்மைகளும் எப்போது குடும்பத்திற்கு தெரியவரும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏற்கனவே திருமணம் முடிந்தது விஷயமும், அவர்தான் க்ரிஷ் அம்மா என்ற உண்மைகள் எல்லாம் குடும்பத்திற்கு தெரிய வரும்போது விஜயாவின் ஆட்டம் வேற லெவலில் இருக்கும். ஆனால் அது தெரிவதற்கு எப்படியும் இன்னும் ஒரு சில வருடங்கள் ஆகலாம்.
சன் டிவி சீரியலில் அறிமுகம்
இப்படி கதை ரோகினியை சுற்றியே பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் ரோகிணியாக நடித்து வரும் சல்மா அருண் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வினோதினி சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்த சீரியலில் தெய்வமகள் சீரியலில் பிரபலமடைந்த நடிகர் கிருஷ்ணா கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருடைய மனைவி பிரிந்து போய்விட்டதாகவும் அவர் தன்னுடைய மகனை தனியாக வளர்த்துவது வருவது போன்று தான் கதை இருக்கிறது.
மிரட்டும் மனைவி
இந்த நிலையில் கிருஷ்ணாவின் மனைவி யார் என்ற கதாநாயகி கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இன்று ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் தான் கிருஷ்ணாவின் மனைவியாக சல்மா என்ட்ரி கொடுக்கிறார். கணவனை டார்ச்சர் செய்யும் மனைவி கேரக்டரில் சல்மா நடித்திருக்கிறார். இந்த ப்ரொமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications