Sneha: சினேகாவை நோக்கி செய்தியாளர் கேட்ட கேள்வி! நாக்கை துருத்திய பிரசன்னா.. இவ்ளோ கோபப்படுறாரே!
சென்னை: நடிகை சினேகா தான் தொடங்கிய சினேகாலயா நிறுவனத்தின் ப்ரோமோஷனில் தான் புதியதாக உருவாக்கிய ஆடைகளை அறிமுகப்படுத்தி இருந்தார். அப்போது செய்தியாளர்களும் அங்கு வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கேட்ட கேள்வியை கேட்டு சினேகாவின் கணவரான நடிகர் பிரசன்னா கடுப்பாகி நாக்கை துருத்தி மிரட்டி இருக்கிறார்.
நடிகை சினேகா தமிழ் சினிமாவில் புன்னகை அரசியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். 90s காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமானாலும் இப்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவே நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு பிறகு பல நடிகைகளுக்கு மார்க்கெட் குறைந்துவிடும். ஆனால் சினேகா அதற்கெல்லாம் நேர்மாறாகவே ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் இப்போது மீண்டும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் பிசினஸிலும் கவனம் செலுத்தி இருக்கிறார். சினேகா சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் போது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாகவே பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஆனாலும் அதையெல்லாம் அவர்கள் கண்டு கொள்வதில்லை. சில நேரங்களில் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்று பரவிய வதந்திகளுக்கு கூட மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இப்போது சினேகா தொடங்கி இருக்கும் சினேகாலயா நிறுவனத்தின் புதிய புடவையை அறிமுகம் செய்யும் விழா நடந்தது. அதில் செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு இருந்த செய்தியாளர் ஒருவர் பிரசன்னாவிடம், சார் சினேகா மேடம் நான் மட்டும் எத்தனை வயதானாலும் அப்படியே இருக்கிறார்களே? வயது என்பது நம்பர் என்பது போல இருக்கிறாங்க என்று சொல்லிக் கொண்டு இருக்க அதற்கு பிரசன்னா நாக்கை துருத்தி டேய் என் மனைவி இது என்று சொல்வது போல சைகை காட்ட, அங்கிருந்து எல்லோரும் சிரித்து இருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதை பார்க்கும் சில நெட்டிசன்கள் பிரசன்னா செய்தியாளர்களை மிரட்டி இருக்கிறார் என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் தன் முன்பே மனைவியை பெருமையாக பேசியதை பிரசன்னாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா? அல்லது இது என்னுடைய பிராபர்ட்டி யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்று இவர் இப்படி சொல்கிறாரா? என்று கூட கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.

எது எப்படியோ சினேகா தன்னுடைய கணவரின் செய்கையை பார்த்து சிரித்துக் கொண்டுதான் இருந்தார். பிறகு அவர் பேசும் போது தன்னுடைய சினேகாலயா சார்பில் அறிமுகப்படுத்தப்படும் புடவைகள் ஒவ்வொரு வருடமும் மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பிடித்து வருவதாகவும், தொடர்ந்து தன்னுடைய நிறுவனத்தை கவனிப்பது தான் தன்னுடைய நோக்கம் என்றும் சொல்லி இருந்தார்.
அதோடு விஜய்யோடு சினேகா கோட் படத்தில் நடித்திருந்தார். அதுபோல பிரசன்னா அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இதனால் இவர்கள் இருவரை பற்றிய கேள்விகளையும் செய்தியாளர்கள் எழுப்பி இருந்தனர். அதற்கு பிரசன்னா விஜய் மற்றும் அஜித் இருவரும் அவர்களுடைய குறிக்கோளை நோக்கிய பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அதைப் பற்றி நாம சொல்ல முடியாது. அவர்கள் இருவரும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய வாழ்த்துக்கள் என்று சொல்லி இருந்தார்.
அடுத்ததாக 2026 இல் விஜயால் அரசியலில் மாற்றம் வருமா என்று கேட்டதற்கு பிரசன்னா மற்றும் சினேகா இருவருமே அதை நாங்கள் இருவரும் மட்டும் சொல்ல முடியாது. மக்கள் என்ன நினைக்கிறார்களோ அப்படி நடக்கும் என்று பேச்சை நிறுத்தி இருக்கிறார்கள்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications