Maman vs DD Next level Review: சூரியின் மாமன் vs சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல், எது பெஸ்ட்? ஒரு அலசல்
சென்னை: நடிகர் சூரி நடிப்பில் டிடி நெஸ்ட் லெவல் திரைப்படமும், நடிகர் சூரியின் மாமன் திரைப்படமும் இன்று ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டு படங்களில் எது டாப் என்று பார்க்கலாம். இந்த திரைப்படம் குறித்து x தள பக்கங்களில் அதிகமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. சூரி செண்டிமெண்ட் மாமாவாக வலம் வருகிறார். அதே நேரத்தில் திரைப்பட விமர்சகராக பேயிடம் சிக்கிக் கொள்ளும் சந்தானம் தப்பித்தாரா? இல்லையா? என்றும் பார்க்கலாம்.
விடுமுறையை குறிவைத்து இன்று ஒரே நாளில் மூன்று திரைப்படங்கள் வெளியாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் யோகி பாபுவின் திரைப்படம் பின்வாங்கி விட்டது. ஆனால் சொன்ன தேதியில் சூரியின் மாமன் திரைப்படமும், டிடி ரிட்டன்ஸ் திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. இதில் மாமன் திரைப்படத்தின் கதையை பிரசாந்த் பாண்டியராஜ் எழுதி இருக்கிறார். இதில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார்.

மாமன் படம் ரிவ்யூ
மாமன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் பால சரவணன், ராஜ்கிரண், பாபா மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அதுபோல சூரியின் சகோதரியாக லப்பர் பந்து திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ஸ்வாசிஹா நடித்திருக்கிறார். ஒரு குடும்பத்தில் தாய் மாமாவாக இருப்பவருக்கு என்னென்ன பொறுப்பு இருக்கின்றன என்பதை ஜாலியாக குடும்ப பாங்காக கதையை கூறி இருக்கிறது.
ரசிகர்கள் விமர்சனம்
இந்த படம் பற்றி ஒரு ரசிகர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் சூரி நன்றாக நடித்திருக்கிறார். முதல் பாதி நன்றாகவும், இரண்டாம் கொஞ்சம் மெதுவாகவும் செல்கிறது, இந்த திரைப்படத்திற்கு 5க்கு 3 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார். அதேபோல டிடி நெஸ்ட் லெவல் படத்திற்க்கும் ரேட்டிங் கொடுத்திருக்கிறார். இதில் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக செல்கிறது, இரண்டாம் பாதியில் தான் சூப்பராக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.ஆனால் இரண்டு படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என்று அந்த ரசிகர் பகிர்ந்து இருக்கிறார்.
சண்டைக் காட்சி
அதுபோல இன்னொரு ரசிகர் மாமன் படம் மனதை தொடும் உணர்ச்சிகளும், மனதை தொடும் நகைச்சுவையும் கலந்த ஒரு மகிழ்ச்சிகரமான கலவை என்று பாராட்டி இருக்கிறார். அதோடு சூரியும், ஐஸ்வர்யாவும் தத்ரூபமாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் இது ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும் ஒரு சில இடங்களில் ஏதோ ஒரு ஒன்று மிஸ் ஆகுற மாதிரி பீல் இருக்கிறது, சண்டைக்காட்சிகள் வேணும்னு திணிக்கப்பட்டது போல இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
சந்தானம் விமர்சனம் செய்திருக்கலாம்
அதுபோல டிடி நெஸ்ட் லெவல் கதையில் திரை விமர்சகராக வரும் நடிகர் சந்தானம் எந்த திரைப்படத்தையும் ரிவ்யூ செய்வது போன்று காட்சிகள் இல்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கிறது. ஏதாவது ஒரு மொக்கை படத்தை எடுத்தாவது சந்தானம் விமர்சனம் செய்திருக்கலாம், youtube-ல் படத்தை விமர்சனம் செய்பவரை பற்றி இந்த படம் இருக்கும் நிலையில் எந்த யூடியூபரையும் சந்தானம் கலாய்க்காமல் விட்டதுதான் அதிசயம் என்றும் சிலர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதுதான் மிஸ்ஸிங்
ஒருவேளை இந்த படத்தில் யூட்யூபர்களை காலாய்த்து விட்டால் நம்முடைய படம் வெளியாகும் போது அவர்கள் நெகட்டிவ் ரிவ்யூ கொடுத்து விடுவார்கள் என்று சந்தானம் பயந்துவிட்டாரா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். மாமன் திரைப்படத்தில் காமெடி, சென்டிமென்ட் காதல் எல்லாம் கலவையாக இருந்தாலும் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் காமெடி பல இடங்களில் இருக்கிறது என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கிறது. ஆனால் முதல் பகுதி மெதுவாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது என்பது பலருடைய வருத்தமாகவும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications