அடிக்கிற மழைக்கு டிவி முன்புதான் தீபாவளியா?? தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் தீபாவளி நிகழ்ச்சிகள்
சென்னை: விடாமல் மழை கொளுத்தி வருவதால் மக்கள் அனைவரும் தீபாவளியை வீட்டுக்குள்ளே கொண்டாட ரெடி ஆகிவிட்டார்கள்.
ஏற்கனவே கடந்த வருடம் தீபாவளியை கொராணா காரணமாக கொண்டாடாத மக்கள் தற்போது மழையின் காரணமாக கொண்டாட முடியுமா??முடியாதா??என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ரசிகர்களின் கவலையை அறிந்து தான் தற்போது டிவி சேனல்கள் புது நிகழ்ச்சிகளை தீபாவளியில் களமிறக்கி இருக்கிறது.

புது புது நிகழ்ச்சிகள்
அங்கே இங்கே சென்று நோயை வாங்கி வந்து விடக்கூடாது என்று சில மக்கள் விழிப்பாக வீட்டுக்குள்ளே பண்டிகையை கொண்டாடிவிட்டு டிவி முன்பு உட்கார்ந்து விட முடிவு செய்து விட்டார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் மற்றும் சந்தோசத்தை கொடுக்கும் விதத்தில் டிவி சேனல்களில் பல புது படங்களையும் புதுப்புது நிகழ்ச்சிகளையும் சின்னத்திரையில் அறிமுகப் படுத்தி இருக்கின்றனர். இது வரைக்கும் இல்லாத வகையில் பல புது படங்கள் இந்த தீபாவளிக்கு டிவி சேனல்களில் வெளியாக இருக்கின்றது.

கலகலப்பான பட்டிமன்றம்
விஜய் டிவியில் தீபாவளி ஸ்பெஷலாக பட்டிமன்றம் காலை ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. இதில் விஜய் டிவியில் பிரபலமான மணிமேகலை, அறந்தாங்கி நிஷா உட்பட பலரும் இதில் கலந்து கொள்கிறார்கள். இதில் மணிமேகலை தொகுப்பாளராக பார்த்த ரசிகர்கள் இவர் பட்டிமன்றத்தில் மீண்டும் களம் இறங்கி இருப்பதைப் பார்த்ததும் இந்த நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறோம் என கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஜாலியும் சந்தோஷமும் ஆக இவர்கள் பேசும் விதத்தைப் பார்த்து இப்போதே கமெண்ட்கள் குவியத் தொடங்கிவிட்டது.

கப்பைக் ஜெயிப்பது யாரு
விஜய் பரம்பரை வெற்றிக் கோப்பையை தட்டி செல்லும் ஆண்கள் பரம்பரை மற்றும் பெண்கள் பரம்பரை என இரண்டு பரம்பரை களையும் மோதிக்கொள்ளும் காரசாரமான போட்டிகளை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் விட்டு வருகின்றனர். அதில் நடுவர்களாக பெண்கள் அணியின் தலைவராக மணிமேகலையும் ஆண்கள் அணியின் தலைவராக ரக்ஷன் இருந்து வருகின்றனர். இந்த தீபாவளியை பெருமைப்படுத்தும் விதமாக ஆட்டம் பாட்டத்துடன் இவர்கள் செய்யும் சேட்டைகள் பெரிய லெவலில் ரசிகர்களின் மனதில் கவர்ந்திருக்கிறது.

ஜீ தமிழின் தலை தீபாவளி
விஜய் டிவியை தொடர்ந்து ஜீ தமிழில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த தலை தீபாவளி நிகழ்ச்சி மாலை 4 மணி முதல் ஒளிபரப்பாகும். இந்த சேனலில் புதியதாக தற்போது திருமணம் முடித்து வைத்த ஜோடிகளுக்கு சிறப்பாக தலைதீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இந்த சேனலில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள்.

சிவகார்த்திகேயனின் டாக்டர்
அதுபோல யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்முறையாக சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படம் சன் டிவியில் பிரீமியர் மற்றும் OTT யில் வெளியிடப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரியங்கா, அருள்மோகன், யோகி பாபு மற்றும் அர்ச்சனா ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் மாலை ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கின்றது.

ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை
ஆர்யா நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று சார்பட்டா பரம்பரை தீபாவளியை முன்னிட்டு கலைஞர் டிவியில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை பா ரஞ்சித் எழுதி இயக்கிய குத்துச்சண்டை திரைப்படமான சார்பட்டா பரம்பரை, மாலை ஆறு முப்பது மணிக்கு திரையிடப்படுகிறது.

தனுஷின் கர்ணன்
தனுஷ் நடித்ததில் பல திரைப்படங்கள் அதிகமாகப் பேசப்பட்ட திரைப்படமாக இருந்தாலும், சமீபத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விட்டது.அது மட்டுமல்லாமல் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் இந்த தீபாவளி ஸ்பெஷலாக ஜீ தமிழில் 12.30க்கு ஒளிபரப்பாகிறது.

சந்தானத்தின் டிக்கிலோனா
சந்தானம் நடித்து காமெடியாக வெற்றி பெற்ற படங்களில் டிக்கிலோனா ஒன்றாகும். இதில் அனகா, ஷிரின் காஞ்ச்வாலா, யோகி பாபு மற்றும் அருண் அலெக்சாண்டர் உட்பட பலர் நடித்துள்ளனர். இது Zee5 வில் வெளியாகி இருந்தது.இத்திரைப்படமும் மாலை 6 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது.












Click it and Unblock the Notifications