வனிதா மகள் ஜோவிகா வருகிறார்.. கூடவே சித்தி ஸ்ரீதேவியும்.. பிக்பாஸில் இணைகிறதா விஜயகுமார் குடும்பம்?
சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விஜயகுமார் மகள் நடிகை ஸ்ரீதேவி கலந்து கொள்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் டிவியில் செம ஹிட்டான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ். இது 6 சீசன்களை கடந்து தற்போது 7ஆவது சீசனுக்கு தயாராகி வருகிறது. நாள்தோறும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையிலான இந்த நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்படுகிறது.

இந்த சீசனை கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அவருக்கு 100 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த சீசனில் இரு வீடுகள் உள்ளதாக அண்மையில் ப்ரோமோவில் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். எதற்காக இந்த இரு வீடுகள். இரண்டாவது வீட்டில் யாரெல்லாம் தங்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தெலுங்கு நிகழ்ச்சியில் கூட ஒரு வீடுதான் உள்ளது. ஆனால் தமிழ் நிகழ்ச்சிக்கு ஏன் இரு வீடுகள் உள்ளன என தெரியவில்லை.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, நடிகர் அப்பாஸ், நடிகை தர்ஷா குப்தா, நடிகை அம்மு அபிராமி, விஜே ரக்ஷன், ஜாக்லின் காக்கா முட்டை விக்னேஷ், நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ், ரேகா நாயர், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், பப்லு, சோனியா அகர்வால், விஜே பார்வதி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள் என தெரிகிறது.
இந்த இரண்டாம் வீட்டில் ஓவியா, ஆரி, சாண்டி, அசீம் உள்ளிட்டோர் தங்குவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் கலந்து கொள்கிறார் என தெரிகிறது. ஏற்கெனவே யூகமாக தெரிவித்து வந்த நிலையில் வனிதாவின் போஸ்ட் தற்போது உறுதியாகிவிட்டது.
அதில் என் உலக அழகி, ஜோவிகா, ஐ லவ் யூ, நீ என்ன செய்தாலும் கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் என தெரிவித்துள்ளார், வனிதாவின் மகள் மிகவும் பக்குவமான பெண். அம்மாவுக்கு சமையலில் உதவியாக இருப்பார். சில ஷோக்களிலும் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் செம ஷாக் தரும் விஷயமாக இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி விஜயகுமாரும் கலந்து கொள்கிறார் என்கிறார்கள்.
விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி ரிக்ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தேவதையை கண்டேன், தித்திக்குதே போன்ற படங்களில் நடித்திருந்தார். இவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வர இருப்பதாக தெரிகிறது. ஒரு வேளை இவர் பிக்பாஸுக்கு வந்தால் இவர் ஜோவிகாவுக்கு சித்தியாயிற்றே அவருடன் பழகுவாரா, இதனால் வனிதா தனது தந்தை விஜயகுமார், அண்ணன் அருண் விஜய், தங்கைகள் ப்ரீத்தா, கவிதா, அனிதா, ஸ்ரீதேவியுடன் ஒன்று சேர்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வனிதாவுக்கு விஜயகுமார் தரப்பினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது. அந்த சொத்தில் ஒரு பங்கு தனது மகள்களுக்கு கிடைக்க வேண்டும் என வனிதா கருதுகிறார். இந்த பிரச்சினையால் வனிதாவை எல்லாரும் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். தற்போது தனது குடும்பத்தினருடன் ஒன்று சேர வனிதா ஆசைப்படுகிறார். எந்த விழா என்றாலும் வனிதாவை தவிர்த்து மற்றவர்கள் எல்லாம் ஒன்றாக கொண்டாடுகிறார்கள். இது வனிதாவுக்கும் அவருடைய குழந்தைகளுக்கும் ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இந்த நிகழ்ச்சி மூலம் அம்மாவுக்கும் தாத்தா, சித்திகள், மாமாவுக்கும் இடையே ஒரு பாலமாக ஜோவிகா இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications