ஹீரோ...சிவகார்த்திகேயன் ஸ்ட்ரெஸ் லிஸ்ட்!
சென்னை: சன் டிவி வரும் ஞாயிறு நாளை மாலை 6:30 மணிக்கு உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று மாதங்களுக்கு முன் வெளிவந்த ஹீரோ படத்தை ஒளிபரப்ப உள்ளது.
ஹீரோ படம் வெளியாவதற்கு முன்னர் அந்த படத்தின் குழுவினருடன் சன் டிவி நடத்திய நேர்காணலை அந்த டிவி மறு ஒளிபரப்பு செய்தது. நிகழ்ச்சியை அர்ஷத், நட்சத்திரா தொகுத்து வழங்கி இருந்தார்கள்.
அப்போது ஒரு செக்மென்ட்டில் படத்தில் வருவது போல உங்கள் மனதில் எதாவது ஸ்ட்ரெஸ் இருந்தால், இந்த பலூனில் எழுதி பறக்க விடுங்கள் என்று ஆளுக்கு ஒரு பலூன் தந்தார்கள். அப்போது தனது ஸ்ட்ரெஸ் பற்றி பலூனில் எழுதி இருந்தார் சிவகார்த்திகேயன்.

80ஸ் கிட்ஸ் ஹீரோ
90ஸ் கிட்ஸ்களுக்கு சூப்பர் ஹீரோ அறிமுகமான சமயம் அது. எல்லா பிள்ளைகளும் சூப்பர் ஹீரோ படம் பார்ப்பதிலும், சக்திமான் போன்ற சீரியல்கள் பார்ப்பதிலும் ஆர்வமாக இருந்தனர். 90ஸ் கிட்ஸ்களின் முதல் சூப்பர் ஹீரோ என்றால் அது சக்திமான்தான்.அப்படி ஒரு ஹீரோவாகத்தான் ஹீரோ படத்தில் நடிகர் சிவ கார்த்திகேயன் நடித்து இருப்பார்.

மித்ரன் அர்ஜுன்
இயக்குநர் மித்ரன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அர்ஜுன் நடித்து இருக்கும் 90 ஸ் படங்களில் அர்ஜுன் ஆக்ஷன்...அவர் புரூஸ்லீ மாதிரி தோற்றத்தில் இருப்பது...புரூஸ்லீ பாணியில் கராத்தே சண்டை போடுவது என்று அமர்க்களமாக நடித்து இருப்பார்.

சூப்பர் ஹீரோ அர்ஜுன்
ஆக்ஷன் கிங் அர்ஜூனுடன், சூப்பர் ஹீரோவாக சிவ கார்த்திகேயன் நடித்து இருக்க, சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து இருப்பார். இவர்தான் பள்ளி பிள்ளைகள் மனதில் இருக்கும் ஸ்ட்ரெஸை குறைப்பது பற்றி ஒரு ஐடியா கொடுத்து இருப்பார். தங்களது ஸ்ட்ரெஸை பலூனில் எழுதி பறக்க விட்டால் ஸ்ட்ரெஸ் நம்மை விட்டுப் பறந்து போகும் என்று செய்து காண்பிப்பார்.

நேர்காணலில் ஸ்ட்ரெஸ் பலூன்
நேர்காணலில் நட்சத்திராஒரு பலூனை கொடுத்து, உங்களது ஸ்ட்ரெஸை எழுதி பறக்க விட்டுவிடலாம் என்று கூறினார். அதில் சிவ கார்த்திகேயன். இந்த இன்டர்வியூவில் இன்னும் என்னென்ன கேம் இருக்கும்...பசிக்குதே எப்போது சாப்பிடலாம்...நடித்து வரும் டாக்டர் படம் ஷூட்டிங் பகலிலும் இரவிலும் தொடர்ந்து வைக்கிறார்கள்.. எப்போது டைம் மாத்துவார்கள்.. மித்ரனுக்கு எப்போது செட்டாகும் என்பது பற்றி விளையாட்டாக எழுதி இருந்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications