சன் குடும்ப விருதுகள்.. கோலாகலமாக கொண்டாடும் சன் டிவி
சென்னை : சன் டிவி இன்று தனது சன் குடும்ப விருதுகள் விழாவைக் கோலாகலமாக கொண்டாடவுள்ளது.
சன் தொலைக்காட்சி கடந்த 27 வருடங்களாக இயங்கி வருகிறது. சன் குழும சானல்கள் இந்தியாவின் முக்கிய 5 மொழிகளிலும் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டையே தலைமையாக கொண்டு செயல்பட்டு வருகிறது சன் தொலைக்காட்சி .
சன் தொலைக்காட்சி ஆர்ம்பித்த காலத்தில் இருந்து சன் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் நாடகங்களுக்கு வரவேற்பு அதிகம். சன் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகிய நெடுந்தொடர்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
|
திருப்தி தரும் நினைவாய்
90ஸ் கிட்ஸின் இளம் வயது திருப்தி தரும் நினைவாய் இருப்பதற்கு முக்கிய காரணம் சன் தொலைகாட்சியும் தான். 90களின் இறுதியில் வந்த பல நாடகங்கள் இன்றளவும் யாராலும் மறக்க முடியாது.
|
மெட்டிஒலி
முக்கியமாக சித்தி, மர்மதேசம், அத்திபூக்கள், மை டியர் பூதம், மெட்டிஒலி, கோலங்கள் போன்ற பல நாடகங்கள் இன்றளவும் ரசிகர்களால் யூடியூப் போன்ற இனைய தளங்களின் வாயிலாக காணப்பட்டுதான் வருகிறது.
|
அசுர வளர்ச்சி
தற்போது இனைய வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று விட்டாலும், இன்றளவும் சன் தொலைகாட்சியின் நாடகங்கள் பலரால் பார்க்கபட்டு தான் வருகின்றது. மர்மதேசம் போன்ற தரமான தொடர்களை எதிர்பார்த்து 90ஸ் கிட்ஸ் காத்திருக்கின்றனர். மர்மதேசத்தின் எப்பிஸோடுகள் புதன் இரவு வரும் போது தெருக்களே அமைதியாய் காட்சி அளிக்கும் அந்த தொடக்க பாடல் வரும்போது அனைத்து வீடுகளிலும் இருந்து எதிரொலிக்கும் இசையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் .
|
வெற்றிகரமாக
தற்போது 27 வருடங்களை கடந்து வெற்றிகரமாக நெடுந்தொடர்களை ஆதரித்து வருவதால் அந்த நெடுந்தொடர்களை மக்கள் முன்னிலையில் பாராட்டும் வகையில் சன் தொலைக்காட்சி சார்பில் சன் குடும்ப விருதுகள் வருடாவருடம் நடத்த படுகிறது.
|
குடும்ப விழா
ஈச்சம்பாக்கத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் இந்த வருடம் சன் குடும்ப விழா இன்று நடைபெறுகிறது. இதற்காக மக்கள் மற்றும் ஊடகத்துறை என அனைவரையும் வரவேற்று இருக்கிறது சன் குடும்பம். இன்றைய இளைஞர்கள் இனையம் பக்கம் சென்று விட்டாலும் சன் தொலைக்காட்சியின் நெடுந்தொடர்கள் மூத்த வயதினரை இன்றும் தனது கட்டுபாட்டிற்குள்ளே வைத்து இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications