மீராவை புரிந்து கொண்ட கௌதம்.. புது பாதையில் திரும்பிய கண்ணான கண்ணே!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் டி ஆர் பி யில் முதலிடத்தில் இருக்கும் கண்ணான கண்ணே சீரியலின் எதிர்பாராத மாற்றம் ரசிகர்களிடம் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

இனி புதிய கோணத்தில் இது பயணிப்பது தெரிந்ததும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

மகளின் பாச போராட்டம்

மகளின் பாச போராட்டம்

சன் டிவியில் இரவு 8.30மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் பல ரசிகர்களின் பேவரைட் சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் அப்பா மகளின் பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதில் மகளை வெறுக்கும் அப்பாவாக பிரித்திவிராஜ் மிரட்டிக் கொண்டிருக்கிறார். அப்பாவின் பாசத்திற்காக மீரா கேரக்டரில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் ரசிகர்களையும் பீல் பண்ண வைத்து வருகிறார். நடிக்கச் சொன்னால் இவர்கள் கேரக்டராகவே மாறி இருக்கிறார்கள்.

வெளியான சந்தோஷின் உண்மை குணம்

வெளியான சந்தோஷின் உண்மை குணம்

மீராவின் சகோதரியாக ப்ரீத்தி இதுவரைக்கும் பாசமாக இருந்தாலும் தன்னுடைய காதலை மீரா எதிர்ப்பதால் தன்னுடைய அக்காவே தனக்கு எதிரியாக நினைத்து விட்டார். தற்போது பிரீத்தி சந்தோஷ் திருமணத்திற்கு பிறகுதான் சந்தோஷம் இயல்பான குணம் ப்ரீத்திக்கு தெரிந்துள்ளது. ப்ரீத்திக்கு மட்டுமல்லாமல் கௌதமும் அவருடைய குடும்பமும் சந்தோஷின் உண்மை குணத்தை அறிந்து குடும்பமே அதிர்ந்து போயிருக்கிறது. இதை ஆரம்பத்திலிருந்து எத்தனையோ முறை யுவா மற்றும் மீரா எடுத்துக்கூறியும் இவர்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை தற்போது இவர்கள் புரிந்து கொண்டுவிட்டனர்.

புரிந்துகொண்ட கௌதம்

புரிந்துகொண்ட கௌதம்

இதுவரைக்கும் தான் எடுக்கும் முடிவு தான் சரி என்று நினைத்துக்கொண்டிருந்த கௌதம் முதல்முறையாக மீராவின் பேச்சை கேட்காததால் ப்ரீத்தியின் வாழ்க்கை வீணாகி விட்டதே என்று பீல் பண்ணியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ப்ரீத்தியின் வாழ்க்கைக்காகவும் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் சந்தோஷுக்கு எழுதிக் கொடுக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். சந்தோஷ் குடும்பத்தினர் மீரா கௌதம் குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேற்றி இவர்களை ஏழ்மையான நிலைக்குக் கொண்டுசென்று பழிவாங்க வழி செய்திருக்கிறது.

கதையில் திருப்புமுனை

கதையில் திருப்புமுனை

சந்தோஷ் அத்தை மேனகாவின் பேச்சைக் கேட்டு நடப்பதால் தற்போதைய ப்ரோமோவில் மேனகா சந்தோஷ், உன் கையால் ப்ரீத்தியின் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றி விடு என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் இனி நடக்கப்போவது என்ன என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. மீராவை எப்படியாவது கௌதம் ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சொத்துக்களை எல்லாம் இழந்த பிறகு தன்னுடைய மகள் தான் தன்னுடைய சொத்து என்று புரிந்துகொண்டு கௌதம் எடுக்கும் முடிவு நிகழ்ச்சிக்கு முக்கிய திருப்புமுனையாக இருக்கப்போகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+