சன் டிவி டாப் சீரியலை விட்டு விலகும் கதாநாயகன்... காரணம் மனைவி தானா? லீக்கான தகவல்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் இருந்து சஞ்சீவ் விலக போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் ஒன்றில் நடித்து வந்த சஞ்சீவ் தற்போது சன் டிவி சீரியலில் நடித்து வருகிறார்.
சஞ்சீவ் மனைவி ஆலியா மானசா கதாநாயகியாக நடிக்கும் இனியா சீரியலில் சஞ்சீவ் கதாநாயகனாக நடிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

கயல் சீரியல் நடிகர்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் ரசிகர்களின் மத்தியில் குறுகிய காலத்திலே நல்ல வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்றாக கயல் சீரியல் இருந்து வருகிறது . இந்த சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார். கதாநாயகியாக கயல் கேரட்டரில் சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் வில்லியாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போதே அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்த நிலையில் தற்போது கதாநாயகி அவதாரம் எடுத்ததும் இவருடைய ரசிகர்கள் இரட்டிப்பாக தொடங்கி விட்டனர் .இந்த சீரியலின் கதாநாயகி அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து வரப்படுகிறது. ஆனாலும் ராஜா ராணி சீரியலுக்கு பிறகு சஞ்சீவ் இந்த சீரியலில் நடித்து வருகிறார்.

இது சரியாக வருமா
டிஆர்பி யில் முதல் இடத்தில் இருந்து வரும் கயல் சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் சஞ்சீவ் அந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கயல் சீரியலில் ரசிகர்கள் இப்போதுதான் கயல் மற்றும் சஞ்சீவ் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக தொடங்கி இருக்கிறது. அதற்கு இடையில் இப்படி ஒரு மாற்றம் நடைபெற்றால் அது சரியாக வருமா என்று பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த சீரியலில் கதாநாயகனுக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருக்கிறது. அதனால் சஞ்சீவ் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கலாம் என்றும் செய்திகள் பரவி வருகிறது.

காதல் திருமணம்
சஞ்சீவ் சின்னத்திரை நடிகையான ஆலியா மானசாவை முதல் சீரியலில் காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இவர்கள் இருவரும் ராஜா ராணி சீரியலின் மூலமாக சின்னத்திரையில் ஒன்றாக பழகி திருமணம் செய்து கொண்ட பிறகு சஞ்சீவ் கயல் சீரியலிலும் ஆலியா ராஜா ராணி இரண்டாவது சீரியலிலும் நடித்துக் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் அந்த சீரியலில் இருந்து ஆலியா விலகி இருந்தார். ஆனால் சஞ்சீவ் தொடர்ந்து இந்த சீரியலில் நடித்து வருகிறார் .இந்த நிலையில் தற்போது ஆலியா மீண்டும் சன் டிவி சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

மனைவி சீரியலில் வாய்ப்பு
ஆலியா, இனியா என்ற சீரியலில் கதாநாயகி ஆக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியல் தொடங்கி ஒரு சில வாரங்களிலேயே ரசிகர்கள் எதிர்பார்க்காத அளவில் டிஆர்பி யில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் இனியாவிற்கு கதாநாயகனாக சஞ்சீவ் ஆரம்பத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அவர் அந்த சீரியலில் இப்ப வரைக்கும் கதாநாயகன் ரிஷி தான் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரிஷி இனியாவை திருமணம் செய்து கொடுமைப்படுத்துவதற்காக பிளான் செய்து கொண்டிருக்கும்போது இனியாவை காப்பாற்றுவதற்காக சஞ்சீவ் அந்த சீரியலில் வரலாம். சஞ்சீவ் தான் சீரியலின் கதாநாயகனாக இருக்கலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது .ஆனால் இந்த தகவலை குறித்து சஞ்சீவ் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான பதிலையும் கூறவில்லை. அதனால் பொருத்திருந்து பார்த்தால் தான் தெரியும். கயல் சீரியலில் இருந்து சஞ்சீவ் விலகுகிறாரா? இல்லையா? என்று. அதே நேரத்தில் தற்போது கயல் சீரியலில் ஒரு சில வாரங்களாகவே சஞ்சீவ் எபிசோடு அதிகமாக காட்டப்படாமல் தான் இருக்கிறது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications