மனைவியை குறித்து மனம் திறந்த எதிர்நீச்சல் குணசேகரன்.. அட இவருக்குள் இவ்வளவு காதலா.??
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் மாரிமுத்து தன்னுடைய குடும்பத்தை பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்.
உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து இருந்த மாரிமுத்து ஆரம்பம் முதல் இப்ப வரைக்கும் மனைவி மீது இருக்கும் தன்னுடைய அன்பை வெளிப்படையாக வெளிக்காட்டி இருக்கிறார்.
சீரியலில் இதுவரைக்கும் இவரை கடுகடுவென பார்த்த ரசிகர்கள் குணசேகரனுக்குள் இவ்வளவு காதல் இருக்கிறதா என்று கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறார்கள்.

பொருத்தமான குணசேகரன் கேரக்டர்
திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருந்த மாரிமுத்து தற்போது முதல் முறையாக சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த கேரக்டர் மாரிமுத்துவுக்கே செய்தது போல படுக்கச்சிதமாக இவருக்கு அமைந்திருக்கிறது. இந்த கேரக்டரில் நடிக்கச் சொன்னால் கதையோடு ஒன்றி பார்ப்பவர்கள் அனைவரும் மிரண்டு போகும் வகையில் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

மனைவியின் கேள்வி⁉
சீரியலில் மாரிமுத்துவை குணசேகரனாக பார்த்த ரசிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் இவர் இப்படித்தான் நின்று நினைத்துக் கொண்டிருந்தார்களாம். அதனால் தான் இவர் வெளியே செல்லும் இடங்களில் கூட சிலர் முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விடுவதாக கூறியிருந்தார். இந்த நிலையில் சீரியலில் இவர் அறிமுகம் ஆவதற்கு இவருடைய மனைவி தான் காரணம் என்று கூறி இருக்கிறார். இவர் திரைப்படத்திலே அதிகமாக நடித்து கொண்டிருக்கும்போது சீரியலிலும் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும். எப்போது நடிப்பீங்க ?? என்று மாரிமுத்துவின் மனைவி கேட்டுக் கொண்டிருந்தாராம்.

அதிக பாசம்
மாரிமுத்து தன்னுடைய உறவுக்கார பெண்ணை தான் திருமணம் செய்து இருக்கிறாராம். திருமணமான புதிதியிலே மாரிமுத்து அவருடைய மனைவிக்கு சினிமாவை பழகி கொடுத்து விட்டாராம். ஆரம்பத்தில் தன்னுடன் வேற ஒரு பெண் நடிக்கும் போதும், வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்டுவது போன்ற சீன்களை பார்க்கும்போது தன்னுடைய மனைவிக்கு சிறிய ஒரு வெறுப்புணர்ச்சி இருந்து இருக்க தான் செய்யும் அதற்கு பிறகு இது நடிப்பு என்பதை நன்றாக புரிய வைத்து விட்டேன். போகப் போக இது நடிப்பு இப்படித்தான் இருக்கும் என்பது புரிந்து விட்டது என்று கூறியிருக்கிறார்.

மனைவிக்காக சப்போர்ட்
நடிக்கும்போது பல பெண்களோடு நடித்திருந்தாலும் அதற்குப் பிறகு ஏதாவது ஆடியோ பங்க்ஷன், சிறப்பு நிகழ்ச்சிகளில் நாம் அவர்களை பார்க்கும்போது சகோதர தனத்தோடு பேசும்போது அருகில் இருந்து தனது மனைவி பார்ப்பதால் இது நடிப்புக்காக மட்டும்தான் அப்படி செய்கிறார்கள் என்பதை நன்றாக புரிந்து கொள்கிறார் என்று மனைவிக்காக சப்போர்ட் செய்து மாரிமுத்து பேசியிருக்கிறார். சீரியலுக்கு வந்தது ரொம்ப காலதாமதம் ஆகத்தான் வந்திருக்கிறேன். ஆரம்பத்தில் நிறைய பேர் கூப்பிட்டு கொண்டு இருந்தார்கள். அப்போது சினிமாவில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் தன்னால் வர முடியவில்லை. அப்போது கூட மாமா, நீங்க சீரியல் பண்ணுனா நல்லா இருக்கும். உங்களுக்கு இருக்க திறமைக்கு சீரியல் இன்னும் நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று மோட்டிவேஷனை மாரிமுத்துவின் மனைவி கொடுத்துக்கொண்டு இருந்தாராம். அதனால் தான் தற்போது இந்த சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் சீரியலில் மனைவியின் பேச்சை கேட்காத மனிதர் நிஜத்தில் மனைவியின் மீது இவ்வளவு பாசத்தை வைத்திருக்கிறாரே என்று கூறி வருகிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications