பாடலால் அனைவரின் மனதைக் கவர்ந்த அனுராதாவின் மகிழ்ச்சிக்கு காரணம் இவர்தானா??..வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான அனுராதாவின் குடும்ப போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.
சோகத்தில் இருப்பவர்களையும் மனதை இதமாக மாற்றிவிடும் இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான அனுராதாவின் மகிழ்ச்சிக்கு காரணம் இவர்தானா?? என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.
பல வருடங்களுக்கு பிறகு அனுராதாவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தொடங்கிய இசைப் பயணம்
பொதுவாகவே அனைவருக்கும் சோகமாக இருக்கும் நேரங்களில் மனது தேடுவது இனிமையான இசை தான். அதுவும் சோகமான நேரத்திலும், மகிழ்ச்சியான நேரத்திலும் பலர் தேடும் குரல்களில் ஒருவராக அனுராதா இருந்து வருகிறார். இவர் சிறு வயதிலேயே பாடகியாக வளம் வர தொடங்கியிருந்தாலும் இவருடைய பாடல்கள் பலவற்றிற்கும் ரசிகர்கள் அடிமைகளாக இருந்து வருகின்றனர். இவருடைய ஹிட் பாடல்கள் என்று சொன்னால் லிஸ்ட் பெரியதாக தான் இருந்து வருகிறது. ஆறு வயதிலேயே இசை பயிற்சியை தொடங்கிய அனுராதா காளி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 12 வயது வரை இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கச்சேரி செய்து இருக்கிறார்.

படிப்பிலும் சளைத்தவர் இல்லை
அனுராதா தஞ்சாவூர் எஸ் கல்யாணராமன், டி. பிருந்தா மணிக்பா தாகூர் தாஸ் போன்ற இசை கலைஞர்களிடம் சங்கீதம் கற்று இருக்கிறார். பாடல்கள் பாடுவதில் மட்டுமல்லாமல் படிப்பிலும் கெட்டிக்காரராகத்தான் இவர் இருந்திருக்கிறார். இவர் கல்லூரி படிக்கும் போதே தங்கப் பதக்கங்களையும் வாங்கி குவித்து இருக்கிறாராம். அனுராதா ஸ்ரீராம் தமிழ் திரைப்பட துறையின் வாயிலாக அறிமுகமாகி 1995 ஆம் ஆண்டு ஏ ஆர் ரகுமான் இசையமைத்த மலரோடு மலர் இங்கு என்ற பாடலில் மூலமாக பலருடைய மனதை கொள்ளை கொண்டு விட்டார். பம்பாய் திரைப்படத்தில் இவர் அறிமுகமாகி இருந்தாலும் அதற்குப் பிறகு இந்திரா திரைப்படத்தில் இனி அச்சம் அச்சம் இல்லை என்ற பாடல் பலருடைய கவனத்தையும் ஈர்த்து ரத்தத்தையும் சூடேற்றி இருந்தது.

சலிக்காத திருமண வாழ்க்கை
இசை கச்சேரிகளிலும், சினிமா பாடல்கள் பாடுவதிலும் இவர் எப்போதும் சிரித்த முகமாக பாடுவது பல ரசிகர்கள் இவரை ரசிப்பதற்கு ஒரு காரணமாக இருந்து வருகிறதாம். குரல் மட்டுமல்லாமல் இவருடைய ஜாலியான பேச்சும் இவரை ரசிக்கும் ரசிகர்களுக்கு அதிகமாக பிடித்துப் போக காரணமாக இருந்து வருகிறது. இவர் அதிகமாக பாடகர்களான எஸ் பி பி பாலசுப்ரமணியன், ஹரிகரனோடு இணைந்து பாடல்கள் பாடி உள்ளார். இவருடைய பாடல்கள் பல வெற்றி பெற்று பல விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறது. அனுராதா பாடலால் அனைவரையும் கவர்ந்தது போலவே அவருடைய கணவர் ஸ்ரீராமும் இசையின் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பரவி வரும் போட்டோக்கள்
அனுராதா ஸ்ரீராம் பாடகர் ஆன ஸ்ரீராம் பரசுராம் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுடைய திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக ஜயந்த் மற்றும் லோகேஷ் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர் . மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் அனுராதாவின் திருமண வாழ்க்கையில் தற்போது தனது கணவரோடு அனுராதா எடுத்த போட்டோஸ்கள் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இசைத்துறையில் வெற்றி பெற்றது போலவே நீண்ட நாட்கள் திருமண வாழ்க்கையிலும் இவர்கள் மகிழ்ச்சியாக வெற்றி பெற வேண்டும் என்பது இவருடைய ரசிகர்களின் வாழ்த்துக்களாக இருந்து வருகிறது.

ரசிகர்கள் வியப்பு
திரைத்துறையில் மட்டுமல்லாமல், சின்ன திரையிலும் சிறப்பு விருந்தினர்களாக அறிமுகம் ஆகி இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு மோட்டிவேஷனல் கொடுத்து பலருடைய மனதையும் கவர்ந்து வருகிறார் அனுராதா. பல ரசிகர்கள் பலருக்கும் இவருடைய கணவர் ஸ்ரீராம் பரசுராம் என்பவர்தான் என்று தற்போது தான் தெரிந்துள்ளதாம். அதனால் அவர்கள் இவர்தான் எங்கள் மனதை கவர்ந்த அனுராதாவின் மனதை கவர்ந்தவரா??என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications