Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடக்காததும் நன்மைக்கு தான்.. நல்லவேளை அப்படி நடக்கவில்லை.. ராஜலட்சுமியின் வேற லெவல் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜலட்சுமி தற்போது பலருக்கும் மோட்டிவேஷன் கொடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று பலரும் கூறிவரும் நிலையில் நடக்காதவையும் நன்மைக்கே என்று ராஜலட்சுமி எடுத்துக்காட்டோடு கூறியிருக்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் தான் இவர் இப்படி எல்லாம் பேசுகிறாரோ என்று பலருக்கும் எண்ணத்தோன்றுகிறதாம்.

சூப்பர் சிங்கர் மூலம் வெற்றி

சூப்பர் சிங்கர் மூலம் வெற்றி

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரிச்சயமான ராஜலட்சுமி தற்போது சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியின் இவருடைய வெற்றிக்கு பிறகு பல திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் பாடி கொண்டிருக்கிறார். இவருடைய பாடல்கள் பல சூப்பர் ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில நேரங்களில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்று இவருடைய ரசிகர்கள் இவருக்கு சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இவர் சமூக வலைத்தளம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று பல பேரும் கூறுவார்கள் ஆனால் நடக்காதவையும் நன்மைக்கே என்று இவர் கூறியது பலரையும் யோசிக்க வைத்துள்ளதாம்.

நடக்காததும் நன்மைக்கே

நடக்காததும் நன்மைக்கே

சில நேரம் நாம நெனச்ச விஷயங்கள் நினைச்ச மாதிரி நடக்காமல் இருக்கலாம். இந்த வேலை எப்படியாவது நமக்கு கிடைச்சிரும் என்று நம்பிக் கொண்டு இருப்போம். அது கிடைக்காமல் போய்விடும் எப்படியாவது இந்த பணம் நமக்கு வந்து விடும் என்று நினைத்துக் கொண்டு இருப்போம் ஆனால் வராமல் போய்விடும். எப்படியாவது இவங்க மனசுல நம்ம இடம் புடிச்சிருவோம் என்று நம்பிக் கொண்டே இருப்போம் ஆனால் அதுவும் நடக்காமல் போய்விடும். இந்த பொறுப்பு நமக்கு கிடைக்கும் என்று யோசிச்சுகிட்டு இருப்போம் பார்த்தா பொறுப்பு நமக்கு இல்லன்னு ஆகிடும். இதுபோல நாம நெனச்ச மாதிரி பல விஷயங்கள் நடக்காம போகும்போது வாழ்க்கையே முடிஞ்சிட்ட மாதிரியோ இதுக்கு அப்புறம் அவ்வளவுதான் என்பது மாதிரி துவண்டு போயிருவோம். ஆனால் அப்படி இல்ல வாழ்க்கை என்று கூறியிருக்கிறார்.

சூப்பர் எடுத்துக்காட்டு

சூப்பர் எடுத்துக்காட்டு

அதுமட்டுமல்லாமல் இந்த மாதிரி நடக்கிற விஷயங்களை விட நடக்காத விஷயங்கள் நிறைய விஷயங்கள் தான் நாம உயிரோட்டமாக இருக்கோம். நானே பல நேரங்களில் அதை உணர்ந்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். நாம நிறைய நேரங்களில் சொல்வோம் இல்லயா..?ஒரு பியூ செகண்ட் தான் அந்த பஸ் கொஞ்சம் முன்னாடி வந்து இருந்தா அந்த பஸ் பயங்கரமா ஆக்சிடென்ட் ஆகி இருக்கும், நான் எப்போதுமே இந்த பாதையில லைட் இல்லாம தான் போவேன் இன்னைக்குன்னு பார்த்து எதார்த்தமா டார்ச் லைட் அடிச்சுகிட்டு போனேன், அங்க ஒரு பாம்பு இருந்தது நல்லவேளை நான் உயிர் பொழச்சேன் என பல நேரங்களில் நாம சொல்லி இருப்போம் என்று உணர்வுபூர்வமான எடுத்துக்காட்டுகளை கூறியிருக்கிறார்.

அதுவாகத்தான் இருக்குமோ

அதுவாகத்தான் இருக்குமோ

நடக்கிற விஷயங்கள் எவ்வளவு பவர்ஃபுல்லானதோ அதுபோல நடக்காத விஷயங்களும் பவர்புல்லானது. நடப்பவை எல்லாம் நன்மைக்கே அல்ல, நடக்காதவையும் நன்மைக்கே. அப்படின்னு நாம நினைச்சுக்கிட்டோம்னா இந்த மாதிரி மன குழப்பங்கள், மனவழிகளை தவிர்த்து மன அமைதியோடு இருக்கலாம். இதற்கு நாம் முயற்சிக்கலாமா..!!?? என்று தத்துவத்தை உதிர்த்திருக்கிறார். இவருடைய இந்த வீடியோவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் வேற லெவல் என்று இவரை புகழ்ந்து வருகிறார்கள். ஒரு சில நெட்டிசன்கள் ஏற்கனவே சில திரைப்படங்களில் இவருக்கு பாட கிடைத்த வாய்ப்பு பறிபோனதை நினைத்துதான் ராஜலட்சுமி இப்படியெல்லாம் பேசுகிறாரா?? என்றெல்லாம் கற்பனை கதைகளை அவிழ்த்து விட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+