சினிமா ஸ்டிரைக்... டிவிக்கு கொண்டாட்டம் - வேலைக்காரன், கலகலப்பு 2 எல்லாமே புது படங்கள்தான் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா ஸ்டிரைக் காரணமாக புதுப்படங்கள் எதுவும் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் தொலைக்காட்சிகளில் எந்த சேனலை திருப்பினாலும் காலை முதலே புத்தம் புது படங்களாகவே ஒளிபரப்பி மக்களை வீட்டோடு கட்டி போட்டு விட்டது.

தமிழ் புத்தாண்டு என்று ஜெயாடிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட பல சேனல்கள் கொண்டாடுகின்றன. அதே நேரத்தில் சன் டிவி 25 ஆண்டு பிறந்தநாளை கொண்டாடியது. கலைஞர் டிவியோ சித்திரை முதல்நாள் கொண்டாடியது.

விடுமுறை நாள் வந்தாலே புத்தம் புது படங்களை ஒளிபரப்புவது சேட்டிலைட் சேனல்களின் வாடிக்கை. தியேட்டர்களில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில் போனமாதம் திரைக்கு வந்த படங்கள் எல்லாம் டிவியில் ஒளிபரப்பானது.

விடுமுறை நாள் சிறப்பு திரைப்படம்

விடுமுறை நாள் சிறப்பு திரைப்படம்

விடுமுறை தினத்தை முன்னிட்டு புத்தம் புதிய படங்களாக ஒளிபரப்பாகின. கலைஞர் டிவியில் களவாடிய பொழுதுகள், விஜய் டிவியில் வேலைக்காரன், சன் டிவியில் கலகலப்பு 2 என காலை நேரத்தில் திரைப்படங்கள் களைகட்டியது. ஜெயாடிவியில் வீர சிவாஜி ஒளிபரப்பானது.

புத்தம் புது படங்கள்

புத்தம் புது படங்கள்

காலையில் மட்டுமல்ல மதியம், மாலை என மூன்று நேரமும் புத்தம் புது படங்களைப் போட்டு திணறடிக்கின்றனர். மாலையில் சன்டிவியில் தானா சேர்ந்த கூட்டம், விஜய் டிவியில் மதியம் துப்பறிவாளன், ஜெயாடிவியில் ரெமோ, ஜீ தமிழ் டிவியில் 3 மணிக்கு பாகமதி ஒளிபரப்புகின்றனர்.

நட்சத்திர பேட்டிகள்

நட்சத்திர பேட்டிகள்

காலை முதலே கலகலப்பான பட்டிமன்றங்களும், சினிமா நட்சத்திரங்களின் பேட்டிகளும் ஒளிபரப்பாக உற்சாகமாகவே கடந்து போனது புத்தாண்டு. மணக்க மணக்க சைவ சாப்பாடு சாப்பிட்டு மதியம் திரைப்படம், மாலையில் இந்திய தொலைக்காட்சிகளில் புதுப்படம் என பொழுது போய்விடும்.

சேனல்களின் புது படங்கள்

சேனல்களின் புது படங்கள்

மொத்தத்தில் சினிமா துறையினரின் ஸ்டிரைக் காரணமாக தியேட்டர்கள் காத்தாடுகின்றன. புது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. மக்களும் தியேட்டர்களுக்கு செல்வதை மறந்து வருகின்றனர். இதனை வைத்து டிவி சேனல்கள் புது படங்களை ஒளிபரப்பி விளம்பரங்களின் மூலம் வருமானத்தை அள்ளி வருகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil TV Channels telecast on premier movies Velaikaran,kalakalappu 2, Kalavadiya Poluthugal on Tamil New years 2018.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற