Goat விஜய் என்கிட்ட சான்ஸ் கேட்டாரு! ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை! கோலங்கள் சீரியல் திருச்செல்வம் ஓபன்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள், எதிர்நீச்சல் போன்ற சீரியல்களை இயக்கிய இயக்குனர் திருச்செல்வம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் தன்னிடம் வாய்ப்பு கேட்டார், ஆனால் அவருக்கு தன்னால் படம் இயக்க முடியாமல் போய்விட்டது. இப்போது அவர் கோட்(Goat) திரைப்படத்திற்கு பிறகு நடிக்கவில்லை என்று சொல்லி இருப்பது தனக்கு வருத்தமாக இருக்கிறது என்று பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதோடு நடிகர் ரஜினிகாந்தை தான் சந்தித்தது பற்றியும் அந்த பேட்டியில் இயக்குனர் திருச்செல்வம் பேசி இருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.
ஒரு சில இயக்குனர்கள் பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இயக்குனர் திருச்செல்வம் தான் இயக்கும் சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறார். அதிலும் கோலங்கள் சீரியலில் தொல்காப்பியம் என்ற கேரக்டரில் பெரிய அளவில் பிரபலம் அடைந்து விட்டார். அவர் இயக்குனர் என்பதை காட்டிலும் தொல்காப்பியன் கேரக்டர் தான் இப்ப வரைக்கும் அவருக்கு ஒரு அடையாளமாக இருக்கிறது.

அதேபோல அவர் இயக்கி சமீபத்தில் சன் டிவியில் முடிவுக்கு வந்த எதிர்நீச்சல் சீரியலிலும் தோழர் கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்துவிட்டாலும் அதன் இரண்டாவது பாகம் வெளியாகுமா? அல்லது திருச்செல்வம் அடுத்து என்ன சீரியல் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் திருச்செல்வம் தன்னுடைய இயக்குனர் வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
ஆரம்பத்தில் திருச்செல்வம் சவுண்ட் இன்ஜினியராக 5 வருடம் வேலை பார்த்திருக்கிறார். சுஜாதா டப்பிங் தியேட்டரிலும், பிரசாந்த் ஸ்டுடியோவிலும், இளையராஜா கம்போஸ் பண்ணும் இடத்திலும் இவர் வேலை பார்த்திருக்கிறார். நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் சவுண்ட் இன்ஜினியராக வேலை பார்த்துவிட்டு தான் இவர் மெட்டி ஒலி சீரியலில் துணை இயக்குனராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
அதற்கு பிறகு அந்த சீரியலிலும் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து கோலங்கள் சீரியல் இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது. அந்த நேரத்தில் இவரை பற்றி நடிகர் ரஜினிகாந்த் பெருமையாக பேசியது தன்னால் மறக்க முடியாது என்று திருச்செல்வம் கூறியிருக்கிறார். கோலங்கள் சீரியல் நடிகர் நடராஜன் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் நடராஜன் நடிகர் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பர்.

இவர்கள் இருவரும் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடராஜனை பார்த்து பல ரசிகர்கள் நீங்க சீரியலில் அருமையாக நடிக்கிறீங்க என்று பாராட்டி இருக்கிறார்கள். அப்போது ரஜினிகாந்த் எந்த சீரியலில் நடிக்கிற என்று விசாரிக்க, நான் கோலங்கள் சீரியலில் நடித்தேன் என்று நடராஜன் சொன்னாராம். அதற்கு ரஜினிகாந்த் நான் அந்த சீரியலை பார்த்து இருக்கிறேன்.
வீட்டிலும் அந்த சீரியலை விரும்பி பார்ப்பாங்க என்று சொன்னாராம். அதற்கு நடராஜன் இந்த சீரியலில் இயக்குனர் உங்களுடைய தீவிரமான ரசிகர் என்று சொல்ல ஒரு நாள் அவரை சந்திக்கலாம் என்று ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறார். பிறகு திருச்செல்வம், ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்தாராம். அப்போது ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்க பண்ணலாம் என்று ரஜினிகாந்த் சொல்ல அதற்கு திருச்செல்வம் அந்த பதட்டத்தில் ஒரு கதை சொல்லி இருக்கிறார்.
ஆனால் அது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக இருந்ததால் வேற ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னாராம். அதுபோல கோலங்கள் சீரியல் முடிவடைந்த பிறகு விஜயை சந்திக்கும் வாய்ப்பு திருச்செல்வத்திற்கு கிடைத்திருக்கிறது.
அப்போது திருச்செல்வத்திடம் விஜய் ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் நான் நடிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு திருச்செல்வம் விஜய்க்காக ஒரு கதையை ரெடி செய்தாராம். ஆனால் அதற்கு பிறகு அடுத்தடுத்து சில பிரச்சனைகள் வந்ததால் அந்த கதையை அவரிடம் சொல்லி அவரை நடிக்க வைக்க முடியாமல் போய்விட்டது என்று திருச்செல்வம் பேசி இருக்கிறார்.

நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் இந்த வாரத்தில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது. காரணம் விஜய்யின் கடைசி படம் என்று அவர் கூறியிருப்பதால் அவருடைய ரசிகர்கள் இந்த படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார்கள். விஜய் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நிலையில் இந்த திரைப்படத்திற்கு பிறகு தன்னுடைய கவனத்தை அரசியலில் செலுத்தவதாக இருப்பதால் இனி படம் வேண்டாம் என்று அவர் சினிமாவை விட்டு விலக்குவதாக அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் விஜய் தன்னிடம் வாய்ப்பு கேட்டும் சில காரணங்களால் விஜய்க்கு கதை சொல்லி அவரை வைத்து ஒரு படம் இயக்க முடியவில்லை என்று திருச்செல்வம் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications