நாள் முழுக்க வேலை.. சம்பளமோ இவ்வளவுதான்.. சாப்பாட்டிற்கே உதவிய ரசிகர்கள்.. தாமரையின் கண்ணீர் கதை
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாவதற்கு முன்பு தாமரைச்செல்வி நாடகத்தில் தான் பட்ட கஷ்டங்களை கண்ணீரோடு கூறியிருக்கிறார்.
நாடகத்திற்காக அவர் வாங்கிய சம்பளத்தை கேட்டு ரசிகர்கள் திகைத்துப் போய் இருக்கின்றனர். இதற்காகவா இவ்வளவு வேதனை என்று பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஊரடங்கில் அனுபவித்த வேதனை
ஆரம்பக் காலகட்டத்தில் ஒருவர் அதிகமாக கஷ்டங்களை அனுபவித்து வந்தால் அவருடைய பிற்கால வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறிவிடும் என்பது பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது தாமரைச் செல்வியின் வாழ்க்கையிலும் சில மாற்றங்களும் மகிழ்ச்சியும் ஏற்பட்டிருந்தாலும் தான் ஆரம்ப காலகட்டத்தில் அனுபவித்த வேதனைகள் ஏராளம் என்று தன்னுடைய கதையை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். கொராணா ஊரடங்கு காலத்தில் பல்வேறு தரப்பினரும் வாழ்க்கையில் பல வேதனைகளை அனுபவித்து போலத்தான் இவருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கிறதாம்.

நாடகத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை
தாமரைச்செல்வி இளமைப் பருவத்திலேயே நாடகத்துறையில் காலூன்றி தன்னுடைய குடும்பத்திற்காக ஆதாயம் தேட தொடங்கியிருப்பது பற்றி அவர் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கதைசொல்லும் டாஸ்க்கில் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய குடும்ப வாழ்க்கையிலும் அவர் எவ்வளவு வேதனைகளையும் கஷ்டங்களை பட்டுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், தன்னுடைய ஏழ்மையான குடும்பத்தில் இவர் பிறந்து, ஆரம்பம் முதலே நாடகத்துறை வருமானத்தை மட்டும் நம்பி தான் இவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் நாடக குழுவின் உறுப்பினராக இருந்து வருகிறாராம்.

மொத்த வருமானம்
ஒரு நாடகத்திற்கு குறைந்தது 5 முதல் 10 பேர் வரைக்கும் சென்று வருவார்களாம். அப்போது இவருக்கு வருமானம் ஒரு நாளைக்கு 2000 வரைக்கும் கிடைத்திருக்கிறது. ஆனால் இன்று இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை ஏழு மணி வரைக்கும் இவர்கள் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டும். அவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் அந்த வேலை தினமும் இருந்தது இல்லையாம். மாதத்தில் ஒரு சில நாட்களில் மட்டும்தான் நாடகம் இருந்துள்ளது. இதில் கிடைக்கும் வருமானம் மொத்த நாட்களையும் நகர்த்துவதற்கு போதுமானதாக இல்லாத நிலையில், இதை வைத்துதான் இவர் தன்னுடைய குடும்பத்தை மட்டுமல்லாமல் தன்னுடைய அம்மாவின் வீட்டிற்கும் தேவையான ஒரு சில வசதிகளை செய்து வந்துள்ளார்.

எல்லாமே வதந்திதானாம்
கொரோனா காலகட்டத்தில் கூட இவருக்கு நாடகம் எதுவும் இல்லாததால் எந்த வருமானமும் இல்லாமல் இவர் தவித்துக் கொண்டிருக்கும் போது, இவருடைய ரசிகர்கள் தான் இவருக்கு சாப்பாட்டுக்கே உதவி செய்து வந்தார்களாம். ஆனால் இவர் வசதியாக இருப்பதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பொய் சொல்வதாகவும் சமூக வலைத்தளத்தில் பல செய்திகள் கிளம்பி இருப்பதை இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்ற பிறகுதான் தெரிந்து இருக்கிறாராம். அதை பார்க்கும்போது வேதனையாக இருந்தாலும் சிரிப்பாகவும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications