சமந்தா..நயன்தாரா போல கூடிய கூட்டம்..எவ்ளோ லவ்..ரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்து போன கயல் சைத்ரா ரெட்டி
சென்னை: கயல் நாயகி சைத்ரா ரெட்டியை பார்க்க முசிறியில் ரசிகர்கள் கூடிய கூட்டம் திக்கு முக்காட வைத்துள்ளது. ரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்து போனேன் என்று பதிவிட்டுள்ளார் நாயகி சைத்ரா ரெட்டி.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ' கயல் ' சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். கயல் நாயகி தனது குடும்பத்திற்காக படும் கஷ்டம்தான் கதை என்பதால் பலருக்கும் கயல் போல ஒரு அக்கா இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

கயல் நாயகி சைத்ரா ரெட்டி
யாரடி நீ மோகினி ' சீரியலில் வில்லியாக நடித்த சைத்ரா ரெட்டியும் , ' ராஜா ராணி ' சீரியலில் நடித்த சஞ்சீவ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதில் தந்தையை இழந்ததால் , குடும்பத்தின் பாரம் சைத்ரா ரெட்டி மேல் விழுகிறது. தாய், சகோதரர்கள் , சகோதரிகள் என குடும்பத்தையே இவர் சம்பளத்தில் தாங்கி பிடிக்கிறார்.

ரசிகர்கள் வரவேற்பு
பெண் உரிமை குறித்து சொல்லும் இந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல் தொடங்கிய நாள் முதலே ரேட்டிங்கில் முதலிடம் பிடித்தது. இதற்கு மிக முக்கிய காரணம் சைத்ரா ரெட்டி , சஞ்சீவ் இருவருமே சீரியலில் நடிப்பது மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம் தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர்.

கயலுக்கு அதிக ரசிகர்கள்
இயல்பாகவே இவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.அதிலும் சைத்ரா ரெட்டிக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இவர் ஏற்கனவே ,யாரடி நீ மோகினி ' கல்யாணம் முதல் காதல் வரை ' சீரியலில் நடித்து இருந்தார். அப்போதிலிருந்து இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். கயல் சீரியலுக்குப் பிறகு சோஷியல் மீடியாவிலும் இவரை அதிகம் பேர் ஃபாலோ செய்கின்றனர்.

செண்டை மேளம் முழங்க
சீரியலில் பிரபலமாக இருக்கும் சைத்ரா விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அவ்வப்போது கடை திறப்பு விழாவிலும் பங்கேற்று வருகிறார். அவருக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து அசந்து போய் அதை தனது யூட்யூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கூடிய கூட்டம்
சைத்ரா ரெட்டி சமீபத்தில் முசிறியில் உள்ள கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார். கயல் நாயகி வருகிறார் என்ற உடனே அவரைக்கான ஏராளமானோர் குவிந்து விட்டனர். ரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்து போன சைத்ரா ரெட்டி முசிறி லவ் என்று தனது யூட்யூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வழக்கமாக சினிமா நாயகிகளான நயன்தாரா, சமந்தா போன்றவர்களைக் காணத்தான் கூட்டம் கூடும். முசிறியில் சீரியல் நாயகி சைத்ராவை காண கூடிய கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது என்றே சொல்லலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications