பிக்பாஸில் கடைசி வரைக்கும் இருக்கும் போட்டியாளர்கள் இவர்கள் தானா??சக போட்டியாளர்களே சொல்லிட்டாங்களே
சென்னை: கடைசி மூன்று இடங்களில் இவர்கள் தான் வருவார்கள் என்று தற்போது ரசிகர்களும் அடித்துக் கூறி வருகின்றனர்.
ரசிகர்களின் கருத்து மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் இதனை உறுதி செய்து விட்டார்களே.
எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று சொல்வது போல மாற்றம் இருக்குமா? ?என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் புதுப்புது பிரச்சனைகளும், சுவாரசியமான நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போதைய ஐந்தாவது சீசனிலும் அதுபோல நிகழ்ச்சிகள் பஞ்சமில்லாமல் நடந்துவருகிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி தற்போது பனிரெண்டு போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். இதில் கடைசி வரைக்கும் இருக்கப்போகும் போட்டியாளர்கள் யார் என்று ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

யாருக்கு வெற்றி
இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் அதிகம் பரிச்சயம் இல்லாத போட்டியாளர்களாக இருந்தாலும் தற்போது பிரபலமடைந்து விட்டனர். இவர்கள் 50 நாட்களை கடந்து விட்டதால் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அதனால் இந்த சீசனில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து உள்ளது. யார் வெற்றி கோப்பையை தட்டி பறிப்பார்கள் என்றும் கடைசி வரைக்கும் இந்த வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்றும் பல்வேறு கருத்துகள் இப்போதே தொடங்கிவிட்டது .

புதுவிதமான டாஸ்க்
அதில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் ரசிகர்களின் கருத்துப்படியே தங்களுடைய கருத்துக்களை வெளிக் காட்டி விட்டனர் என்று கூறி வருகின்றனர். நேற்றைய எபிசோட்டில் கமல் முன்னிலையில் போட்டியாளர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு கப்பும் ஒரு ஜீரோ வும் கொடுத்து இருந்தனர் அதில் கப்கொடுக்கும் போட்டியாளர் 100 நாள் வரைக்கும் தன்னோடு தொடர வேண்டும் என்று ஆசைப்படும் நபரை குறிப்பதாகவும், ஹீரோ கொடுக்கும் நபர் மீது விருப்பமில்லை என்பதைக் குறிப்பதாகவும் டாஸ்க் கொடுத்து இருந்தது.

அனைவரின் கருத்தும் இதுதானோ
அதில் அதிகமான போட்டியாளர்கள் ராஜுவை தேர்ந்தெடுத்து இருந்தனர். அவரை தொடர்ந்து நிரூப் மற்றும் பிரியங்காவிற்கு அதிக கப்புகள் கிடைத்திருந்தது. இதனால் இவர்கள் 3 பேரும் கண்டிப்பாக கடைசி வரைக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வார்கள் என்று போட்டியாளர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதைத்தான் ஏற்கனவே ரசிகர்களும் கூறி வருகின்றனர். அதே கருத்தை தற்போது போட்டியாளர்களும் கூறியதை தொடர்ந்து உண்மை இதுவாகத்தான் இருக்குமோ என்று நம்பத் தோன்றுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications