போடு..ரகிட.,ரகிட ...ஆட்டம் போட்டுக் கொண்டாடும் சர்வைவர்...கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இவ்வளவு நாளா போட்டிகளாலும், சண்டைகளாலும் நிறைந்திருந்த சர்வைவர் நிகழ்ச்சியில் இன்று ஆட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

நேற்றைக்கு வரைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்துக் கொண்டிருந்தவர்கள் இன்று அதே பாணியை கையில் எடுத்திருப்பதும் நெட்டிசன்கள் கலாய்க்க ரெடியாகி விட்டனர்.

எத்தனை நாளைக்கு தான் வெறித்தனமாக போட்டியே போட்டுக் கொண்டிருப்பது மனசு லேசாக ஆட்டமும் போடுவோம் என்று போட்டியாளர்கள் செம குத்து குத்தி வருகின்றனர்.

இன்றைக்கு வித்தியாசமாக இருக்குது

இன்றைக்கு வித்தியாசமாக இருக்குது

தினமும் டாஸ்க் எல்லாம் வெறித்தனமாக இருக்கிறது. அதனால் இன்று ஒரு முறை மட்டும் உங்களுக்கு விடுமுறை என்று அர்ஜுன் சொன்னதும் அனைவரின் முகத்திலும் புன்னகை மிளிர்கிறது. ஒரே போன்று வேலையை தினமும் செய்து கொண்டிருந்தால் மனது பாரமாக மாறிவிடும் அதனால் இப்படி வாரத்துக்கு ஒருமுறையோ, மாதத்திற்கு ஒரு நாளோ ஜாலியாக இருந்தால் தான் மனது ஜாலியாக இருக்கும் என்பதை சர்வைவர் டீம் நன்றாக புரிந்து கொண்டு விட்டது போல, அதனால்தான் தங்களுடைய போட்டியாளர்களின் மனநிலையை மாற்றுவதற்காக இவர்கள் கடற்கரையில் மைக் செட்டை போட்டு கலக்கி விட்டார்கள். நாங்கள் போட்டிகளில் மட்டுமல்ல ஆட்டமும் வெறித்தனமாக ஆடி காட்டுவோம் என்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.

அடடா என்ன ஆட்டம்

அடடா என்ன ஆட்டம்

பாடலில் தொடங்கி ஆடலில் கலக்கி கொண்டிருக்கும் போட்டியாளர்கள் ஒருபுறம் என்றால் இன்னைக்கு எலிமினேஷன் இருக்கே யார் எலிமினேஷன் ஆக போகிறார்களோ என்று ரசிகர்களுக்கு பதற்றம் இன்னொருபுறம் தொற்றிக்கொண்டது. ஆனாலும் இவர்களின் என்டர்டைன்மென்ட் ரசிகர்களுக்கும் என்டர்டைமெண்ட் ஆகத்தான் இருந்து வருகிறதாம். அதுவும் "ஏ கோலிசோடாவே" பாட்டுக்கு விஜயலட்சுமியும் உமா பதியும் போட்ட ஆட்டம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. இவர்களின் ஜோடி ஆட்டம் வேற லெவல் இருந்து வருகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுவும் காட்டுக்குள்ளே மேக்கப் எதுவுமில்லாமல் கலக்கலாக இவர்கள் போட்ட ஆட்டமும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.

போட்டி போட்டு ஆடுராங்களே

போட்டி போட்டு ஆடுராங்களே

ஒருபுறம் கோலிசோடா என்றால் இன்னொரு பக்கம் ரகிட ரகிட பாட்டுக்கு பெசன்ட் ரவி இறங்கி குத்தி இருக்கிறார். அவருக்கு ஒரு பக்கம் பார்வதியும் இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவும் ஜோடி சேர்ந்து ஹெவி பர்பாமன்ஸ் கொடுத்திருக்கிறார்கள். இவர்களுடன் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களின் மனதும் ஆட்டம் போட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அடிக்கடிப் சண்டைக் காட்சிகளையும் டாஸ்க்களையும் காட்டிக் கொண்டு இருந்தவர்கள் திடீரென்று ஆட்டத்தை காட்டியதும் நெட்டிசன்கள் இந்தா....வாரம் என்று கலாய்க்க ஓடி வந்துவிட்டனர். இதுவரைக்கும் இது பிக்பாஸ் நிகழ்ச்சி போன்று இல்லை என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போ இது எது மாதிரி இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்கள்.

நேற்று அப்படியின்றி இப்படியா? ?

நேற்று அப்படியின்றி இப்படியா? ?

நேற்றைய எபிசோடில் அம்ஜத் கான் பார்வதியை பார்த்து இவர் இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் போன்று இருக்கும் என்று எதிர்பார்த்து வந்துவிட்டார் போல என்று நிகழ்ச்சியின் பெயரைச் சொல்லாமலேயே சுற்றி வளைத்து பேசிக்கொண்டிருந்தார். ஆனால் இன்று இவர்கள் போட்ட ஆட்டத்தை பார்த்ததும் இதுவும் அது போலத்தான் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். நேத்து தான் ஆட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இங்கு ஆட்டம் போட எல்லாம் முடியாது என்று கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று இவ்வளவு ஹெவியாக ஆடுகிறார்கள், அது எப்படி??என்று இந்த ப்ரோமோவை பார்த்ததும் மீம்ஸ்களும் பறந்து வருகிறது. நெட்டிசன்கள் செய்யும் சேட்டைகளைப் பார்க்கும்போது போட்டியாளர்களை ஒரு நாள் கூட ஜாலியாக இருக்க விட மாட்டார்கள் போல..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+