Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sun TV Serials: தீபா வெங்கட் அஞ்சு வருஷமா பார்க்கும் சீரியல் எதுவாக இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் கண்டேன் காதலை படத்தை ஒளிபரப்பினார்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது இந்த படத்தில் சந்தானம் காமெடி. தமன்னாவின் தாய் மாமனாக வந்து அசத்தி இருப்பார்.

அஞ்சலியோட புருஷன் சக்தி இல்லை.. கவுதம் என்று ஒரு பாட்டியின் காதில் சொல்லி, எல்லார்கிட்டயும் சொல்ல சொல்கிறார் சந்தானம். அந்த பாட்டி சொல்வது கடைசியில் நடிகை தீபா வெங்கட்டின் காதுக்கு போகிறது.

நீங்க சும்மா இருங்க ராசு அண்ணே..அஞ்சலியோட புருஷன் சக்தியும் இல்லை.. கவுதமும் இல்லை..அவ மொத புருஷன் ராகவேந்திரன்னு சொல்றாங்க. அந்த சீரியலை நான் அஞ்சு வருஷமா பார்த்துகிட்டு இருக்கேன்.. என்னை யாரும் ஏமாத்த முடியாதுன்னு சொல்றாங்க.

 அஞ்சு வருஷ சீரியல்

அஞ்சு வருஷ சீரியல்

தொலைக்காட்சிகளில் சீரியல்களை போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பு செய்து வந்தார்கள். இதில் அதிக நேரம் சீரியல்களை ஒளிபரப்பியது சன் டிவிதான். சீரியல்கள் என்றாலே சன் டிவிதான் என்று நிலைமை மாறிப்போனது. தொடர்ந்து அஞ்சு வருஷம் என்றாலும் ஒரே சீரியலை விரும்பிப் பார்த்து வந்தார்கள். இப்போது லாக்டவுன் என்பதால் சீரியல்கள் படப்பிடிப்பு இல்லாமல் ஒளிபரப்பும் இல்லை.

 சந்திரலேகா சீரியல்

சந்திரலேகா சீரியல்

சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை என்று தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல், சந்திரலேகா. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இந்த சீரியல் எப்படி எப்படியோ திசை மாறி கதை பயணித்து ஒளிபரப்பாகி வந்தது. இப்போது லாக்டவுன் காலத்தில் இதே சீரியலை மறுபடியும் முதலில் இருந்து ஒளிபரப்பு செய்து வருகிறது சன் டிவி.

 விவேக் காமெடி

விவேக் காமெடி

நகைச்சுவை நடிகர் விவேக் சில படங்களில் சீரியல்களை வைத்து நகைச்சுவை செய்து இருப்பார். மாடிப்படியில் எறிகிட்டே இருக்கட்டும்.. அதை ஸ்லோமோஷனில் காண்பித்து காண்பித்து தொடரும் போட்டுடலாம் என்று ஒரு படத்தில் காமெடி செய்து இருப்பார். இன்னொரு படத்தில் புதருக்கு இடையில் கள்ளக்காதலர் பேசிக்கொண்டு இருக்கும்படியான சீரியல் கதையை ஷூட் செய்து கொண்டு இருக்க. அதை உண்மையாக பேசுகிறார்கள் என்று நம்பி வீடியோ எடுக்கும்போது சீரியல் ஷூட்டிங் என்று விவேக்குக்கு ஷாக் கொடுப்பார்கள்.

 வடிவேலு ஆட்டோ

வடிவேலு ஆட்டோ

வடிவேலு ஆட்டோ ஓட்டுநராக இருப்பார்.. மூன்று பெண்கள் ஆட்டோவில் ஏறிக்கொண்டு மாடியில இருந்து விழுந்துட்டா அவளுக்கு என்னாச்சோ தெரியலையே.. சீக்கிரம் போடா அம்பின்னு உச்சு கொட்டிக்கிட்டே சொல்ல, வடிவேலுவும் பதறி ஆட்டோ ஓட்டிச் சென்று வீட்டில் நிறுத்துவார். அப்போது ஒரு மாமியிடம் அவளுக்கு என்னாச்சு மாமின்னு கேட்க, அதுக்குள்ளே தொடரும் போட்டுட்டா அம்பின்னு மாமி சொல்லும். அடச்சே.. இவ்ளோ நேரம் டிவி சீரியல் பத்தியா பேசிகிட்டு இருந்தீங்க என்று வடிவேலு சொல்வார்.

 சந்தானம் காமெடி

சந்தானம் காமெடி

சந்தானம், கண்டேன் காதலை படத்தில் ராசுவாக நடித்து இருப்பர். அஞ்சலிக்கும், சக்திக்கும் நடக்க இருக்கும் கல்யாணத்தை நிறுத்தி, அஞ்சலியை தான் கல்யாணம் செய்துக்க வேண்டும் என்று, அஞ்சலியோட புருஷன் சக்தி இல்லையாம்...புதுசா வந்து இருக்கானே கவுதம்.. அவன்தானாம். இதை எல்லார்கிட்டேயும் பரப்பி விடுன்னு சொல்றார். அந்த பாட்டி வட்டமா உட்கார்ந்து இருக்கும் பாட்டிகளில் ஒருவரிடம் சொல்ல, கடைசியில் ஒரு சின்ன பெண்ணிடம் இருந்து தீபா வெங்கட்டின் காதுக்கு வருகிறது.

 என்னை ஏமாத்த முடியாது

என்னை ஏமாத்த முடியாது

அட போங்க ராசு அண்ணே.. அஞ்சலியோட புருஷன் சக்தியும் இல்லை..கவுதமும் இல்லை. அவ மொத புருஷன் ராகவேந்திரன்தான்... நான் 5 வருஷமா அந்த சீரியலை பார்த்துகிட்டு இருக்கேன். என்னை யாரும் ஏமாத்த முடியாதுன்னு சொல்றாங்க. உடனே பக்கத்தில் இருக்கும் பாட்டி, ஆமாம் நானும் பார்த்துகிட்டு இருக்கேன்.. இப்போ அவ ரெண்டாவது புருஷன் கூடத்தானே வாழ்ந்துகிட்டு இருக்கன்னு தீபா வெங்கட்டிடம் கேட்கறாங்க.. இப்படி போகுது சினிமாவில் சீரியல்களை காமெடி செய்வது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+