கோவில் அறங்காவலர் தேர்வு குழுவில்.. திரிஷாவின் நெருங்கிய தோழி அர்ச்சனா கல்பாத்திக்கு முக்கிய பொறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் கோவில் அறங்காவலர் தேர்வு குழுவில் புதிய உறுப்பினராக ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் தயாரிப்பாளருமான அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தற்போது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பரம்பரை முறைப்படி சாரா அறங்காவலர்களின் நியமிக்கும் நடைமுறையை சீரமைக்க மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவில் தான் அர்ச்சனா கல்பாத்தியும் ஒரு உறுப்பினராக இருக்கிறார். அதேபோல உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பா.ரா சம்பத், சொற்பொழிவாளர் மா. சுமதி, டாக்டர் த வேல்முருகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குழு தலைவராக பொம்மபுரம் ஆதீனம் சிவ ஞானபாலய சுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளார். துணை தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் கே ராமநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த 24- 7- 2026 அன்று மாநிலக் குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய மாநில குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புது குழு வருஷத்துக்கு 10 லட்சத்திற்கு மேல் வருவாய் உள்ள திருக்கோவில்களுக்கு பரம்பரை முறையை சாராத அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் திரிஷா, விஜய் மனதார நேசித்தாங்க! ஆனால் சந்திரசேகர்! நடிகை குட்டி பத்மினி போட்ட புது குண்டு
அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் நடிகை திரிஷாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவராகவும் இருக்கிறார். பல வருஷங்களாகவே இருவரும் குடும்ப நண்பர்களாக பழகி வரும் நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருக்கிறது. அதுபோல அர்ச்சனா கல்பாத்தி தான் முதல்வர் விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Archana Kalpathi Trisha vijay

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

குறிப்பாக அர்ச்சனா கல்பாத்தி குடும்பத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நடிகை திரிஷாவும், முதலமைச்சர் விஜய்யும் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்கள் அப்போது பெரும் பேசுபொருளாக மாறின. அந்த நிகழ்ச்சியை வைத்து இருவரையும் இணைத்து சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

Archana Kalpathi Trisha vijay

முதல்வர் நிகழ்ச்சியில்

அதுமட்டுமில்லாமல் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவிலும் அர்ச்சனா கல்பாத்தி நேரில் கலந்து கொண்டிருந்தார். அப்போது திரிஷாவையும், அர்ச்சனா கல்பாத்தியும் விஜய்யின் பெற்றோர்கள் வரவேற்ற புகைப்படங்களும் வைரலானது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் கோவில் அறங்காவலர் தேர்வு குழுவில் உறுப்பினராக அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. திரையுலகில் முக்கிய தயாரிப்பாளராகவும், பல முக்கிய பிரபலங்களுடன் நட்பாக இருக்கும் அர்ச்சனா கல்பாதிக்கு இந்தப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+