Thug Life: கமல்ஹாசன் எனக்கு நல்ல ஆசான்! மணிரத்னம் எப்படிப்பட்டவர்? சுகர் பேபி த்ரிஷா தக்லைப் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் ஏற்கெனவே நடித்திருந்ததால் தக் லைப் படப்பிடிப்புகளில் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன் என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். அது போல் கமல்ஹாசன் தனக்கு நல்ல ஆசான் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

thug life

நடிகை த்ரிஷா, கமல்ஹாசனுடன் மன்மதன் அன்பு, தூங்காவனம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அது போல் ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் மணிரத்னம் இயக்கத்திலும் நடித்துள்ளார்.

தற்போது தக் லைப் படத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இந்த படம் ஜூன் மாதம் வெளியாகிறது. இதில் கமல், சிம்பு, அசோக்செல்வன், த்ரிஷா, அபிராமி , ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. மணிரத்னம்+ கமல் இணைந்து நாயகன் படத்தில் பணியாற்றியிருந்தனர்.

அத்துடன் 38 ஆண்டுகள் கழித்து தற்போது தக் லைப்பில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜிங்கு ஜிங்குசா பாடல் பிரபலமடைந்து பட்டித் தொட்டியெங்கும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லரில் அபிராமியுடன் லிப் லாக் காட்சிகளில் கமல் நடித்துள்ளார். அது போல் இந்த படத்தில் கமலுக்கு த்ரிஷா கள்ளக்காதலி ரோலில் நடித்துள்ளார். த்ரிஷாவுடனும் கமல் நெருக்கமாக நடித்திருக்கும் காட்சிகள் டிரெய்லரில் வெளியானது.

இத்தனை வயதில் இப்படியான சீன்கள் தேவையா என பலர் சமூகவலைதளங்களில் விவாதித்தனர். கமலுக்கும் த்ரிஷாவுக்கும் 28 வயது வித்தியாசம் வருகிறது. இதுகுறித்து சமூகவலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில் மும்பையில் நடந்த ஒரு விழாவில் த்ரிஷா கூறுகையில், எனக்கு சிம்புவையும் கமல் சாரையும் பல ஆண்டுகளாக தெரியும். தக் லைப் படத்தில் நடித்த போது நான் என் வீட்டில் இருப்பது போல் இருந்தேன். கமல் சார் எனக்கு ஆசான். ஏற்கெனவே நானும் சிம்புவும் இரு படங்களில் நடித்துள்ளோம்.

எனவே இருவருக்கும் ஒருவரை பற்றி ஒருவர் தெரியும். தக் லைப் படப்பிடிப்பு தளத்திற்குள் வந்ததும் நான் மிகவும் பாதுகாப்பான இடமாக உணர்ந்தேன். மணி சாருடன் எந்த பயமுமின்றி பணியாற்றினேன். பொன்னியின் செல்வன், ஆயுத எழுத்து படங்களில் மணிரத்னம் சார் இயக்கத்தில் நடித்திருந்ததால் அவர் எந்த மாதிரியான நடிப்பை வெளிப்படுத்த நினைப்பார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

நான் அவருடைய படப்பிடிப்புகளில் நடிப்பதற்கு நன்கு பயின்றேன் என சொல்லலாம். ஒருவருடன் தொடர்ந்து பணியாற்றும் போது ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் இருக்கும். என்னிடம் இருந்து எப்படி வேலை வாங்க வேண்டும் என்பது மணி சாருக்கு தெரியும். மணி சார் உள்பட அனைவருடனும் இணக்கமாக பணியாற்றினேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சுகர் பேபி எனும் பாடல் பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் , மகேஷ் மஞ்ச்ரேகர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+