திருமணம் முடிந்ததும் கஷ்டத்தை அனுபவிக்க தொடங்கிய கோபி"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் திருமணம் தற்போது முடிந்து விட்டது.
திருமணத்திற்கு பிறகு கோபி இரண்டு பொண்டாட்டிகாரரின் கஷ்டத்தை அனுபவிக்க தொடங்கி இருக்கிறார்.
கோபி கஷ்டப்படுவார் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இவருக்கு இப்படி ஒரு கஷ்டம் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லையாம்.

ரசிகர்களை ஏமாற்றவில்லை
பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த கோபியின் திருமணம் தற்போது முடிவு அடைந்து இருக்கிறது. திருமண மண்டபத்திற்கு கடைசி நேரத்தில் வந்த கோபியின் அம்மா, அப்பா, இனியா அனைவரும் ரசிகர்கள் எந்த அளவிற்கு எதிர்பார்த்து வைத்திருந்தார்களோ அதை கொஞ்சம் கூட ஏமாற்றாமல் கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து விட்டார்கள். கோபி மட்டுமல்லாமல் ராதிகாவிற்கும் ராதிகாவின் குடும்பத்திற்கும் சரிசமமாக சாபங்களும் திட்டல்களும் கிடைத்து வந்தது.

மேடையில் தொடங்கிய ஆட்டம்
கோபிக்கு திருமணம் முடித்ததும் மண்டபத்திற்கு வந்த இனியாவை பார்த்ததும் இனியா அழுவதை தாங்கிக்கொள்ளாமல் இனியாவை சமாதானப்படுத்துவதற்காக மேடையில் இருந்து இறங்க புறப்படும் போது ராதிகா ஒரு பக்கமும் ராதிகாவின் மகள் ஒரு பக்கமும் கோபியின் கைகளை பிடித்து விட்டனர். திருமணம் முடிந்ததும் இனியாவோடு பேசுவதையும், இனியாவுக்காக இவர் பாசமாக இருப்பதையும் ராதிகாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அது மட்டும் இல்லாமல் இனியா, இனி எனக்கு இந்த அப்பா தேவை இல்லை. எனக்கு இவரை பிடிக்கவில்லை.நம்ம எல்லாரையும் விட்டுவிட்டு இவர் இப்படி திருமணம் செய்து விட்டார். அந்த மயூவுக்கு முத்தம் கொடுக்கிறார் என்று அழுது கொண்டிருக்கிறார்.

உண்மை முகம் தெரிய போகிறது
இனியா அழுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபி, இனியா என்று கதறுகிறார். அதை பார்த்து ஷாக் ஆன ராதிகாவின் முகம் அப்படியே மாறிவிட்டது. இன்று இந்த எபிசோடு ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் மண்டபத்தை விட்டு கோபியின் கைகளை பிடித்தபடி பாக்யாவை பார்த்து முறைத்தபடியே ராதிகா கிளம்புகிறார். ராதிகாவா? இப்படி செய்கிறார் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு ராதிகாவின் உண்மை முகம் இனி தான் தெரியப்போகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ராதிகா இனி வில்லி அவதாரம் எடுக்கப் போகிறாரம்.

இனி தெரியும் கஷ்டம்
அதுமட்டுமல்லாமல் மண்டபத்தில் இருந்து வந்த கோபி மற்றும் ராதிகாவிற்கு ராதிகாவின் அம்மா ஆரத்தி எடுத்து வீட்டிற்குள்ளே அழைக்கிறார். உள்ளே வந்ததும் ராதிகா இனி உங்களுக்கும் அந்த குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது. அது மட்டும் அல்லாமல் இனி நீங்க இனியாவின் பெயரைக் கூட எடுக்ககூடாது. இனியாவின் மீது பாசத்தை காட்டவே கூடாது என்று கண்டிஷன் போடுகிறார். இப்படி எல்லாம் இருக்கிறதாக இருந்தால் மட்டும் இங்கே இருக்கலாம் இல்லை என்றால் போய்விடலாம் என்றும் கராராக பேசியிருக்கிறார். இதுவரைக்கும் பாக்கியாவையும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையும் மிரட்டி அரட்டி வைத்திருந்த கோபிக்கு இனி தான் தக்க பாடம் கிடைக்கப் போகிறது.












Click it and Unblock the Notifications