சன் டிவியா? விஜய் டிவியா? நடிகர் வடிவேலு இணையும் சமையல் நிகழ்ச்சி! அப்போ பஞ்சாயத்து இருக்கு
சென்னை: நடிகர் "வடிவேலு" விரைவில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று வலைப்பேச்சு அந்தணன் பேசியிருக்கும் நிலையில் இது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்தில் டிவி சேனல்களில் டிஆர்பி அதிகரிப்பதற்காக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் போட்டி போட்டு ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலுக்கு பெயர் போன சன் டிவியை பாலோ பண்ணி புதியது புதியதாக பல சேனல்கள் தொடங்கப்பட்டது. அதிலும் சன் டிவிக்கு போட்டியாக தொடங்கப்பட்ட விஜய் டிவி இப்போது இளம் தலைமுறைகள் பலரையும் கவர்ந்திருக்கிறது

குறிப்பாக விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் அதிகமாக ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிகமாக கவரப்படுகிறது. அந்த வரிசையில் பிக்பாஸ், குக் வித் கோமாளி, பாடல் நிகழ்ச்சிகள், டான்ஸ் நிகழ்ச்சிகள் என்று புதியது புதியதாக களம் இறக்கி கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்ததை தொடர்ந்து இப்போது சன் டிவியிலும் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்று புது நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் நடுவராக இருக்கிறார். ஏற்கனவே இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்தவர்தான். அதோடு வெங்கடேஷ் பட் திடீரென்று ஐந்தாவது சீசனில் இருந்து தான் விலகப் போகிறேன் என்று அறிவிப்பு கொடுத்திருந்தார். அவரை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்து விலகி இருந்தனர்.
அவர்கள் இப்போது சன் டிவியில் புது நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்திருக்கின்றனர். அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த பலரும் இப்போது டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வமான ப்ரோமோ நேற்று வெளியானது. இப்படியான நிலையில் புதிய சமையல் நிகழ்ச்சியில் வைகைப்புயல் என்று எல்லோராலும் அழைக்கப்படும் வடிவேலு இணைய உள்ளார் என்று கூறப்படுகிறது.
பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்து பிரபலம் அடைந்த வடிவேலு ஒரு சில திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் வடிவேலுவும் இணைய இருக்கிறார் என்று வலைப்பேச்சு அந்தணன் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications