மாமியாருக்கு முத்தம் கொடுத்து அலப்பறை செய்த நிக்கோலாய்! வரலட்சுமி கொடுத்த ரியாக்ஷன்! லீக்கான வீடியோ
சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் 90ஸ்களில் இருந்து இன்றுவரை சினிமாவில் ஆக்ஷன், குடும்ப சென்டிமென்ட் எனப் பல பரிமாணங்களில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய மகளும், துணிச்சலான நடிகையுமான வரலட்சுமி சரத்குமாரின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை, தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

வரலட்சுமி சந்தித்த சர்ச்சை
வரலட்சுமி, சரத்குமார் மற்றும் அவரது முதல் மனைவி சாயா தேவிக்கு பிறந்தவர். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே, நடிகர் விஷாலுடன் காதலில் இருந்தார் என்றும், நடிகர் சங்க விவகாரத்தில் சரத்துக்கும், விஷாலுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்தத் திருமணம் தடைபட்டதாகவும் கிசுகிசுக்கள் தொடர்ந்து உலவின. ஆனால்,இதற்கெல்லாம் வரலட்சுமியும் விஷாலும் அந்த நேரத்தில் பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். தொடர்ந்து இவர்கள் இருவரும் ஜோடியாகவும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.
துணிச்சலான பாத்திரங்கள்
வரலட்சுமி சினிமாவில், வில்லி மற்றும் சவாலான குணச்சித்திரப் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து, தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். அதுபோல மனதில் பட்டதை எல்லாம் வெளிப்படையாக பேசி விடுவார். தான் சின்ன வயதில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து பல இடங்களில் பேசி இருக்கிறார். அதுபோல சினிமா துறையில் இருக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்தும் வரலட்சுமி பேசியதாலயே இவருக்கு தமிழ் சினிமாவில் அதிகமாக வாய்ப்பு கிடைக்கவில்லை இவருடைய நடிப்பு திறமைக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் மற்ற மொழிகளில் நல்ல வாய்ப்புகள் அமைந்து கொண்டிருக்கிறது.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் உடன் வரலட்சுமிக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. அந்தத் தம்பதிக்கு டீன் ஏஜில் ஒரு மகளும் இருக்கிறார். இந்தக் காதலுக்கு சரத்குமார், அவரது முதல் மனைவி சாயா தேவி, மற்றும் இரண்டாவது மனைவி ராதிகா ஆகியோர் 'க்ரீன் சிக்னல்' கொடுத்தார்கள். தாய்லாந்தில் வைத்து இவர்களுடைய திருமணம் கடந்த வருடம் கோலாகலமாக நடந்தது. இதில் சரத்தின் முதல் மனைவி சாயா தேவி, இரண்டாவது மனைவி ராதிகா ஆகியோர் இணைந்து கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
திருமணத்தை முடித்த கையோடு செய்தியாளர்களைச் சந்தித்த நிக்கோலாய், இனி தனது பெயருக்கு பின்னால் வரலட்சுமியின் பெயரையும் இணைத்துக்கொள்வேன் எனக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

சாயா தேவி பிறந்தநாள்
வரலட்சுமியின் அம்மா நடிகை சாயா தேவி நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்தச் சந்தர்ப்பத்தில் மருமகன் நிக்கோலாய் செய்த ஒரு செயல், இணையத்தில் வைரலாகி, பாசப் பிணைப்பைக் காட்டியுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் தனது மாமியார் சாயா தேவிக்குக் கன்னத்தில் அன்போடு முத்தம் கொடுத்து, கேக்கையும் ஊட்டிவிட்டார். இதைப் பார்த்த வரலட்சுமி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் கைகளைத் தட்டினார்.
நிக்கோலாய், சரத்குமாருடனும் அவரது முதல் மனைவி சாயா தேவி மீதும் மிகுந்த அன்பையும், மரியாதையையும் வைத்திருக்கிறார். மேலும், வரலட்சுமி தொடர்ந்து நடிப்பதற்கு நிக்கோலாய் முழு ஆதரவை அளித்து வருவதால், இந்தக் காதல் தம்பதியினரின் பயணம் இனிமையாக நகர்ந்து வருகிறது. மேலும், வரலட்சுமி, நிக்கோலாயின் டீன் ஏஜ் மகளுடனும் நல்லவிதமாகப் பழகிவருவதால், இந்தத் திருமணம் ஒரு கூட்டுப் பாசத்தின் அடையாளமாக மாறியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications