கோபிநாத்தா அப்படி சொன்னார்...!!?? புலம்பும் நல்ல பிள்ளைகளை பெற்றவர்கள்..இதில் எது உண்மை..??
சென்னை:உறவுகளை குறித்தும் குழந்தைகளை குறித்தும் கோபிநாத் பேசியுள்ள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
கோபிநாத் பேசியுள்ள வீடியோவில் உள்ள கருத்துக்களை கேட்டவர்கள் அட.. ஆமாப்பா..!! உறவுகளும், குழந்தைகளும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும், கோபிநாத் சொல்வதும் சரிதான் என்று ஒருத்தரப்பினர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கோபிநாத் சொல்வது கொஞ்சம் சரியான கருத்துக்கள் போல் இருந்தாலும், முழுமையாக ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்று எதிர் கருத்துகளையும் கூறி வருகின்றனர்.

அப்பாவி அப்பாவால் வைரலான ஷோ
சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்களையும் அவர்களது கணவர்களையும் வைத்து நிகழ்ச்சியை நடத்திய கோபிநாத் அதில் ஒரு குடும்பத்தை பற்றிய விவாதத்தின் போது நடைபெற்ற அப்பா மகள் இடையேயான சுவாரசியமான நிகழ்வு குறித்த வீடியோ வைரலாகி விட்டது.அந்த வீடியோவில் கோபிநாத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்த விதம் பலரால் பாராட்டப்பட்டது.இதனைத் தொடர்ந்து நீயா நானா நிகழ்ச்சியில் மட்டுமன்றி பொதுவெளியில் கோபிநாத் பேசிய சில வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது

பர்ஃபெக்ட் ரிலேஷன் மியூசியம் பீஸ்
அப்படி தற்பொழுது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வரும் கோபிநாத் வீடியோக்களில் ஒன்றில் உறவுகளை குறித்தும், குழந்தைகளை குறித்தும் சில கருத்துக்களை கூறியுள்ளார். உறவுகளை குறித்து கூறும் பொழுது உறவுகள் என்றால் சில சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும் என்றும், பர்ஃபெக்ட் ஆக இருப்பவர்கள் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட வேண்டியவர்களே தவிர உறவுமுறைக்கு ஏற்றவர்கள் அல்ல என்று கூறியுள்ளார். இதைக் கூட ஓரளவிற்கு ஏற்றுக்கொண்ட பார்வையாளர்கள் குழந்தைகள் குறித்து இவர் கூறிய கருத்திற்கு தான் அதிகமான எதிர் கருத்துகளை கூறி வருகின்றனர்.

தங்கமான புள்ள உருப்படாது
தங்கமான புள்ள உருப்படாது என்று கோபிநாத் கூறியுள்ளது பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. "சேட்டை பண்ணா தான் அது பிள்ளை. தனக்கு வேண்டியதை போராடி பெறுவதின் குறியீடு தான் சேட்டை பண்ணுவது. தங்கமான பிள்ளை, சொல் பேச்சு கேட்கும் பிள்ளைகள் உருப்படாது. சொல்பேச்சு கேட்கும் பிள்ளை சௌகரியமாக இருக்கும். சுயமா சிந்திக்கும் பிள்ளைகள் பிரச்சனையாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.ஒரு சில குழந்தைகளுக்கு வேண்டுமென்றால் கோபிநாத் சொல்லும் கருத்து பொருந்தலாம் ஆனால் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு இந்த கருத்து பொருந்தாது என்று பலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கருத்தால் கடுப்பானவர்கள்
கோபிநாத்தின் இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் உறவு முறைகளுக்குள் சரியாக இருக்கும் சிலர் நாங்கள் என்ன மியூசியம் பீசா என்று புலம்பி வருகின்றனர். சொல் பேச்சு கேட்கக் கூடிய தங்கமான குழந்தை டைப்பிலான பிள்ளைகளை பெற்றவர்கள் எங்கள் குழந்தை உருப்படாத!!?? என்றும் கடுப்பாகி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications