Maargan 1st day box office: ரிலீசான முதல் நாளே குபேராவை ஓவர்டேக் செய்த மார்கன்.. கலக்கும் விஜய் ஆண்டனி!
சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் லியோ ஜான் பால் இயக்கத்தில் வெளியான மார்கன் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படத்தை விடவும் முதல் நாள் வசூல் அதிகரித்திருக்கிறது.
விஜய் ஆண்டனி சமீபகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் அவர் நடிப்பில் உருவான மார்கன் திரைப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த திரைப்படத்தை லியோ ஜான்பால் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி தான் தயாரித்திருந்தார். அதுபோல அஜய் திஷான் என்கிற புதுமுக நடிகர் வில்லனாக நடித்திருந்தார். இவர்களோடு பிரகிடா, தீப்ஷிகா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மார்கன் பட நடிகர்கள்
இந்த திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் நேற்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. அதுபோல விஜய் ஆண்டனிக்கு இதுவரைக்கும் வெளியான அதிக திரையரங்குகளில் ரிலீசான படம் இந்த படம் தான். மார்க்கன் திரைப்படத்திற்கு ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருந்தனர்.
மார்கன் பட கதை
இந்த படத்தின் கதை ஆனது ரசாயன ஊசியை செலுத்தி அடுத்தடுத்து இளம் பெண்களை டார்கெட் செய்து மர்ம கொலைகளை செய்து வரும் சைக்கோ கொலையாளியை பிடிக்க விசாரணையில் இறங்கும் போலீஸ் அதிகாரியாக விஜய் ஆண்டனி நடித்திருந்தார். சைக்கோ கொலையாளியை விஜய் ஆண்டனி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் கதை. திரில்லர், காதல், செண்டிமெண்ட் என எல்லாம் நிறைந்த இந்த படம் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது.

குபேராவை முந்திய மார்க்கன்
மார்கன் திரைப்படம் சுமார் 10 கோடி பட்ஜெட்டில் தயாரித்து இருந்தனர். நேற்று மட்டும் இந்த படத்திற்கு 85 லட்சம் வசூல் கிடைத்திருக்கிறது. உலக அளவில் ஒரு கோடி வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது. இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் பாக்ஸ் ஆபீஸ் வசூல் பிக்கப் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது இந்த திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் தமிழில் பெரிய அளவில் அவருக்கு வசூல் கிடைக்கவில்லை. குபேரா படத்திற்காக திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டிருந்ததால் நேற்று தமிழ்நாட்டில் வரும் 22 லட்சம் தான் குபேரா வசூல் செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications