விஜய் தொடர்ந்து முன்னிலை.. கண்கலங்க வீடியோ வெளியிட்ட அவருடைய நண்பர் ஸ்ரீமன்! உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆரம்ப கட்டத்திலேயே கிடைத்த இந்த முன்னிலை, அரசியல் வட்டாரங்களையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த முன்னிலை தொடர்ந்ததை தொடர்ந்து, சென்னை உள்ள விஜயின் இல்லத்தில் கொண்டாட்டம் தொடங்கியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்து கொண்டாடி வரும் காட்சிகள் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகின்றன. "முதல் தேர்தலிலேயே இப்படியா?" என்ற பெருமிதம் அந்த வீட்டில் நிலவுவதாக கூறப்படுகிறது.

Vijay Sriman Tamil Nadu Election 2026 TVK

விஜய் நண்பர் ஸ்ரீமன் வீடியோ

இதற்கிடையில், விஜய்க்கு ஆரம்ப காலத்திலிருந்தே ஆதரவாக இருந்து வரும் அவரது நண்பரும் நடிகருமான ஸ்ரீமன் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "தொடர்ந்து விஜய் முன்னிலை!" என்று உற்சாகமாக விசில் அடித்து காட்டிய அவர், சில நொடிகளில் கண்கலங்கியபடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கண்கலங்கிய நடிகர்

"இது சாதாரண விஷயம் இல்லை... மக்கள் தான் இதை செய்திருக்காங்க... எல்லோருக்கும் நன்றி" என்று அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிய அந்த தருணம், ரசிகர்களின் மனதை தீண்டியுள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பெருமளவில் பகிர்ந்து, "இது மக்கள் வெற்றி" என்ற ஹேஷ்டேக்குடன் கொண்டாடி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் #VijayLeads, #TNResults2026, #Thalapathy போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் இந்த தேர்தல் முடிவுகளை மிகுந்த ஆர்வத்துடன் பின்தொடர்ந்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல முக்கிய தொகுதிகளில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், சில இடங்களில் முன்னிலை மாற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இருப்பினும், தமிழக வெற்றிக் கழகம் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி வருவதால், அரசியல் மாற்றம் குறித்து பெரிய விவாதம் எழுந்துள்ளது.

Vijay Sriman Tamil Nadu Election 2026 TVK

முதல்வர் பதவிக்கான போட்டியில் விஜய் முன்னிலை வகிக்கிறார் என்ற கணிப்புகளும் அதிகரித்துள்ளன. முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்க முடியுமா என்ற கேள்வி தற்போது "அது சாத்தியமா?" என்ற நம்பிக்கையாக மாறியுள்ளது.

இந்த நிலையில், விஜயின் வீட்டில் தொடங்கிய கொண்டாட்டமும், ஸ்ரீமன் போன்ற நெருங்கியவர்களின் எமோஷனல் வீடியோக்களும், இந்த தேர்தல் முடிவுகள் சாதாரண அரசியல் நிகழ்வு அல்ல, ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கம் என்பதைக் காட்டுவதாகவே பார்க்கப்படுகிறது.

இன்னும் சில மணி நேரங்களில் முழுமையான முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் இன்று ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+