விஜய்யை விட்டு சங்கீதா பிரிந்து சென்றுவிட்டாரா? யார் சொன்னது? இந்த போட்டோவை பாருங்க!
சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, சென்னை விமான நிலையம் வந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. தனது மகன் சஞ்சய்யுடன் வரும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. விஜய்- சங்கீதா விவாகரத்து என தகவல்கள் சுற்றி வந்த நிலையில் தற்போது அவர் லண்டனில் இருந்து சென்னை வந்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ரசிகர்கள் ஏராளம். அவர் சினிமா படங்களில் நடித்த போது இவரை திருமணம் செய்து கொள்ள ஏராளமா ரசிகைகள் கடிதம் எழுதி வந்தது அனைவரும் அறிந்ததே.

தற்போது விஜய் சினிமா துறையில் கொடி கட்டி பறந்து வருகிறார். அது போல் அரசியலிலும் அவர் இறங்கியுள்ளார். இந்த பயணமும் தற்போது வரை வெற்றி அடைந்துள்ளது. எனினும் அரசியல் என்றால் வாக்கு சதவீதமும் முக்கியம் என்பதை போல் வரும் தேர்தலில் அக்கட்சிக்கு என்ன மாதிரியான வாக்குகள் வருகிறது என்பதை பார்த்தால்தான் அவர் அரசியலில் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை துல்லியமாக சொல்ல முடியும்.
தற்போது விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படம்தான் கடைசி படம் என்கிறார்கள். அதன் பிறகு முழு நேர அரசியலில் அவர் ஈடுபட போகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
நடிகர் விஜய்யை திருமணம் செய்ய போட்டி போட்டுக் கொண்டிருந்த நிலையில் அவருடைய இலங்கை ரசிகை சங்கீதாவுடன் அவருக்கு திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகன் ஜேசன் சஞ்சய் , ஒரு மகள் திவ்யா சாஷா உள்ளனர். இவர்கள் இருவரும் லண்டனில் இருக்கிறார்கள். விஜய்யின் பட வெளியீட்டு விழா, திருமண விழா உள்ளிட்ட விழாக்களுக்கு விஜய்யுடன் சங்கீதாவை பார்த்து ஆண்டு கணக்காகிறது.
விஜய் கட்சித் தொடங்கும் போது சரி, அவர் இரு மாநில மாநாடுகளை நடத்திய போதும் கூட சங்கீதா அந்த விழாக்களில் இல்லை. இதனால் விஜய் மீது அதிருப்தியில் இருக்கும் சங்கீதா, தனது கணவர் விஜய்யை பிரிந்து விட்டார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
விஜய்யுடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவர் தனது மகன், மகளுடன் லண்டனில் வசித்து வருகிறார் என சொல்லப்பட்டது. விஜய் வீட்டில் அவர் மட்டுமே இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சங்கீதாவை மகன் ஜேசனுடன், சென்னை விமான நிலையத்தில் இருப்பது போன்று புகைப்படங்கள் வெளியானது. இந்த புகைப்படத்தில் சங்கீதா விஜய் யாருடனோ (இயக்குநர் ஷங்கரின் மனைவி போல் இருக்கிறது, உறுதியாக தெரியவில்லை) பேசிக் கொண்டு செல்வது போல் உள்ளது. பின்னால் லக்கேஜுடன் அவரது மகன் ஜேசன் வருவது போல் இருக்கிறது.
இந்த புகைப்படம் வைரலான நிலையில் சங்கீதா சென்னை வந்திருப்பதாக சொல்கிறார்கள். விஜய் விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதால் அவருக்கு உறுதுணையாக இருக்க சங்கீதா வந்துள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் இது சென்னை விமான நிலையமா என்ற சந்தேகமும் எழுகிறது. பலர் இது கோவா விமான நிலையம் என்கிறார்கள். எனவே அவர் சென்னையில் இருக்கிறாரா என்ற தகவல் உறுதியாக தெரியவில்லை.
விஜய்- சங்கீதாவின் மகன் ஜேசன் சஞ்சய், தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். இது தொடர்பான படப்பிடிப்பு நடந்து வருகிறது. வெளிநாட்டில் திரைப்படக் கல்லூரியில் படித்த ஜேசன் தற்போது தமிழில் படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications