Vijay Son Jason: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் அதிரடி'சிக்மா'! 'பண கட்டுகள்' சொல்லும் மர்ம கதை
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் தீவிர அரசியலில் களம் காணும் நேரத்தில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் (JSJ) தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பல மாதங்களாக அவர் இயக்கும் படத்தின் படத்தின் தலைப்பை ரகசியமாக வைத்திருந்த நிலையில், தற்போது படத்திற்குப் 'சிக்மா' (SIGMA) என்று அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விஜய் மகன் அறிமுகம்
நடிகர் விஜய்க்கு ஜனநாயகம் தான் கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், அவர் திரைத்துறையிலிருந்து விலகும் நேரத்தில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகத் திரைத்துறையில் நுழைகிறார்.
இந்தப் படத்தை லைகா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன் இணைந்து ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான JSK மீடியாவும் இணைத் தயாரிப்பை மேற்கொள்கிறது. இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கிறார். படத்திற்கு திரையுலகின் டாப் இசையமைப்பாளரான தமன் இசையமைக்கிறார்.
மொழி
தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவது, அண்மையில் வெளியான வாழ்த்து வீடியோக்கள் மூலம் தெரியவந்துள்ளது. 'சிக்மா' படத்தின் டைட்டில் லுக்கில், இந்த படம் ஒரு மாஸ் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உச்சத்திற்குக கொண்டு சென்றுள்ளது.
டைட்டில் போஸ்டர் ரகசியம்
வெளியான போஸ்டரில், பணக்கட்டுகள் மற்றும் தங்கக்கட்டிகள் குவிந்து கிடக்க, அதன் மேல் நடிகர் சந்தீப் கிஷன் அமர்ந்திருக்கிறார். அவரது கையில் கட்டுப் போடப்பட்டு, முகத்தில் சில ரத்தக்கறைகளுடன் இடம் பெற்றிருப்பது, இந்தப் படம் பணத்தை மையமாக வைத்து ஆக்ஷன் பின்னணியில் உருவாகி வருவதைக் காட்டுகிறது. 2023ஆம் ஆண்டு படத்தின் அறிவிப்பு வெளியான போது, மோஷன் போஸ்டரில் 'தடைசெய்யப்பட்ட ரகசியம்' (Forbidden Secret) என்ற புத்தகம் இடம்பெற்றிருந்தது. அதனால், இந்தப் படம் ஒரு பெரிய, இதுவரை சொல்லப்படாத மர்மக் கதையைச் சொல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
பிரச்சனைகளும், குழப்பங்களும்
படத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆன நிலையில், இதன் டைட்டில் வெளியாகாமல் இருந்தது பல கேள்விகளை எழுப்பியது. இடையில், நிதி நெருக்கடியால் சில பிரச்சனைகளைச் சந்தித்து வருவதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான JSK மீடியா இந்த படத்தில் இணைந்தது.
எதிர்பார்ப்பு
இருப்பினும், நடிகர் விஜய்யின் மகன் இயக்கும் முதல் படம் என்ற எதிர்பார்ப்பும், சந்தீப் கிஷன் - தமன் கூட்டணியும் இந்தப் படத்தின் மீதுள்ள ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கவேச் செய்துள்ளது. அரசியல் களத்தில் விஜய் எவ்வளவு தூரம் தன் முத்திரையைப் பதிக்க போகிறாரோ, அதேபோல், திரை களத்தில் ஜேசன் சஞ்சய் தனதுப் முதல் படமான 'சிக்மா' மூலம் என்ன மாயாஜாலத்தை செய்யப் போகிறார் என்பதை காண ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!











Click it and Unblock the Notifications