பாக்கியலட்சுமி: பாக்யா வீட்டுக்கு வந்த சுதாகர்.‌. கோபி கேட்ட கேள்வி.. அதிர்ச்சி கொடுத்த இனியா! எதிர்பாராத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் 2025 ஜூலை 7ஆம் தேதிக்கான எபிசோடில் சுதாகர் பாக்யா வீட்டிற்கு வந்து இனியாவை தன்னுடைய வீட்டிற்கு கூப்பிடுகிறார். ஆனால் அதற்கு கோபி குடும்பத்தினர் சொன்ன விஷயத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் இனியா, குடும்பத்தினரிடம் எனக்கு என்னை பத்தி கூட கவலை இல்லை ஆனால் எனக்கு அம்மாவை பற்றி தான் கவலையா இருக்கு. ஏன்னா அவங்க தான் அதிகமாக இழந்துட்டாங்க. அவங்க ஆசையா வச்சிருந்த ரெஸ்டாரெட்டை ஏமாத்திட்டாங்க. அதை அவங்க கிட்ட இருந்து வாங்கணும் டாடி, அது மட்டுமில்லாமல் கல்யாணத்துக்கு செலவு பண்ண காசையும் வாங்கணும் என்று சொன்னதும் கோபி சரி என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

சரி நான் வேலைக்கு கிளம்புகிறேன் என்று இனிய கிளம்பும்போது சுதாகரும் சந்திரிகாவும் வருகின்றனர். அவர்களிடம் என்ன விஷயம் என்று கேட்க, சுதாகர் நாங்கள் இனியாவை கூட்டிட்டு போக வந்திருக்கிறோம் என்று சொன்னதும், எந்த நம்பிக்கையில் நாங்க அனுப்பவும்னு வந்து இருக்கீங்க என்று பாக்கியா கேக்க, சுதாகர் ஹஸ்பண்ட் அண்ட் வைப்க்குள்ள பிரச்சனை வரத்தான் செய்யும் அதுக்குனு அப்படியே விட்டுற முடியாது.

இன்னைக்கு சாயங்காலத்துக்குள் நிதிஷை எப்படியாவது கூட்டிட்டு வந்துடுவோம் என்று சொல்ல, உங்க வீட்ல எங்க பொண்ணு பட்ட கஷ்டம் எல்லாம் போதும். இதுக்கு மேல நாங்க அனுப்புறதா இல்லை என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரியும் கோபப்பட்டு பேசுகிறார். உங்களை சும்மா விடமாட்டேன் என் பேத்தி வாழ்க்கையை நாசம் பண்ணிட்டீங்களே? எங்க வயித்தெரிச்சல் எல்லாம் சும்மா விடாது என்று சாபம் கொடுத்து அனுப்புகிறார்.

மறுபக்கத்தில் பாக்யா ஹோட்டலுக்கு வர செல்வியும் அவருடைய மகனும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பாக்கியா ஹோட்டலில் வந்து உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் போது சாப்பிட வந்தவர்கள் பில் கட்டும்போது ஆகாஷ் சாப்பிட்ட உணவுகளை சொல்ல பாக்கியா அதற்கு கம்மியான பணத்தை சொல்கிறார். பிறகு ஆகாஷ் சொன்னதும் ஆமாம் என்று சொல்கிறார்.

அதுபோல கொஞ்ச நேரமாக குழப்பத்தில் பாக்யா உட்கார்ந்து இருக்க, அப்போது கூட்டம் கிளம்பியதும் செல்வி என்னக்கா ஆச்சி என்று கேட்கிறார். இனியாக நினைத்து குடும்பத்தில் எல்லோரும் கஷ்டப்படுறாங்க என்று சொன்னதும், ஒரு ரெஸ்டாரண்டுக்காக அந்த ஆளு இனியாவோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டான். அந்த ஆளை சும்மாவே விடக்கூடாது என்று சொல்கிறார். காலையில் கூட வீட்டுக்கு வந்தார் என்று சொன்னதும், அவரால் எப்படி வெட்கமே இல்லாம வீட்டுக்கு வர முடியுது என்று செல்வி கேட்கிறார்.

அப்போது ஆகாஷ் பாக்கியாவிடன் என்னை மன்னிச்சிடுங்க ஆன்ட்டி, நான் மட்டும் இனியா கூட பேசாமல் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று சொல்ல, உன் மேலே எந்த தப்பும் இல்லப்பா நீ இப்போதைக்கு எதுவும் வேணாம்னு சொன்ன உடனே ஒதுங்கிட்டீங்க, ஆனா எங்க வீட்ல இருக்கவங்களோட தப்புதான் என்று பாக்கியா சொல்கிறார். மறுபக்கம் சுதாகர் நிதிசை ஜாமினில் எடுத்து வருகிறார். பிறகு நிதிஷிடம் என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ? தெரியாது. அந்த பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துரு. வர முடியலன்னா மூணு பேரும் ஜெயில்ல உட்கார வேண்டியதுதான் என்று சுதாகர் சொல்கிறார். உடனே நிதிஷ் இனியாவின் ஆபீசுக்கு போகிறார். அங்கு இனியாவை பாக்கணும் என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+