விஜய் டிவி புகழ் பெயரில் அரிசி பை...என்னையா இப்படி கிளம்பிட்டீங்க...
சென்னை: குக் வித் கோமாளி புகழுக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் அவருடைய ரசிகர் ஒருவர் செய்த செயல்தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
அடடா என்ன மாதிரி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா..என்று மெச்சும் வகையில் தற்போது அரிசி பையில் புகழுடைய போட்டோவை பதித்து அவருடைய ரசிகர் அசத்திவிட்டார்.
வளர்ந்து வரும் நடிகர் என்றாலும் இவருடைய காமெடி மற்றும் குணத்திற்கு ரசிகர்களிடம் எவ்வளவு மரியாதை இருக்கிறது என்பதை தற்போது அனைவருக்கும் தெரிகிறது.

மனசுவிட்டு சிரிக்க வச்சுட்டாங்க
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பலபேர் வாழ்க்கையின் உச்சிக்குப் போய் இருக்கிறார்கள். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல கண்டஸ்டண்டுகள் இதுவரை இல்லாத வகையில் பாப்புலர் ஆகிவிட்டனர். உதாரணத்திற்கு அஸ்வின், சிவாங்கி, புகழ் என்று பலரையும் கூறலாம். அதிலும் புகழுக்கு தற்போது வேற லெவல் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு வரைக்கும் இவர் சின்ன வேடங்களில் ஒரு சில நிகழ்ச்சிகளில் தோன்றி கொண்டிருந்தார். இவருடைய கேரக்டரையே மாற்றி பெண் வேடத்தில் இவர் ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளில் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய உண்மையான கேரக்டரை உலகிற்கு எடுத்துக் காட்டியது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

மாற்றம் தந்த குக் வித் கோமாளி
இந்த நிகழ்ச்சியில் இவருடைய டைமிங் காமெடி மற்றும் நடிப்பை பார்த்து பலபேர் இவருக்கு ரசிகர்கள் ஆக மாறி விட்டார்கள். பொதுவாக சீரியல்கள் என்றாலே அழுகாச்சி சீன்களை பார்த்து பார்த்து வெறுத்துப்போன ரசிகர்கள் சின்னத்திரையை அப்படியே ஒதுக்கி விட்டனர். ஆனால் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி வந்தபிறகு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டிவி முன்பு இந்த நிகழ்ச்சிக்காக காத்திருக்கத் தொடங்கி விட்டனர். அதில் ஒவ்வொரு கன்டஸ்டன்ட்களும் தங்களுடைய திறமையை நிரூபித்து கொண்டிருந்தாலும் புகழுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. இளைஞர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளின் மனதையும் கவர்ந்து விட்டார். இவருடைய என்ட்ரி பார்த்ததுமே பலருக்கும் மனதிற்குள் சந்தோஷமும், சிரிப்பும் வந்துவிடுகிறது.

விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி
புகழுக்கு ரசிகர்கள் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவினால் தற்போது இவர் ஒரு சில படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பல கடை திறப்பு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இவர் செல்லும் இடங்களெல்லாம் இவருடைய ரசிகர்கள் பட்டாளம் புடை சூழ்ந்து விடுகிறது. ஆனால் இவரும் தான் ஒரு செலிபிரிட்டி என்ற கெத்து காட்டாமல் ரசிகர்களோடு சேர்ந்து என்ஜாய் பண்ணி வருகிறார். இவருக்காகவே இவருடைய ரசிகர்கள் பலர் எப்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்புவார்கள் என்று கேட்டு வருகின்றனர். ஆனால் அடுத்த சீசனில் புகழ் கலந்து கொள்ளமாட்டார் என்று பரவலாக பேசி வருகின்றனர். இதனால் புகழின் ரசிகர்கள் கொஞ்சம் பீலிங்காகத் தான் இருக்கின்றனர். ஆனாலும் தொடர்ந்து இவர் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருவதால் ரசிகர்கள் கொஞ்சம் என்ஜாய் பண்ணி வருகின்றனர்.

புகழுக்கு புகழ்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை சீக்கிரமாக வெள்ளித்திரையில் கலக்குவீர்கள் என்று இவருக்கு வாழ்த்து மழையை பொழிகிறார்கள். ரசிகர்களின் பேராதரவோடு இவர் ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டிருக்கும் போது, ஒரு ரசிகர் இவர் மீது வைத்திருக்கும் பாசத்தை பார்த்து புகழ் மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களும் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்கள். அப்படி அவர் என்னதான் செய்துவிட்டார் என்று பார்த்தால், புகழ் பெயரில் அரிசி பையை அச்சிட்டு அதில் அரிசியை விற்பனை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அந்த பையில் என்றும் புகழ் அண்ணா வழியில் என்று ப்ரிண்ட் செய்திருக்கிறார். இதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இந்த போஸ்ட் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தாலும், சில நெட்டிசன்கள் மீம்ஸ்களைப் போட்டு கலாய்த்தும் வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications