திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக ரித்திகா வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு...வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் தெரிந்த ரித்திகா சமீபத்தில் திருமணத்தை முடித்திருக்கிறார். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
தன்னுடைய காதல் கணவரோடு ரித்திகா புது வீட்டின் முன்பு நின்றபடி வாழ்த்து கூறிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பகிர்ந்து இருக்கிறார்.

எளிமையான திருமணம்
விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் போட்டியாளராகவும் பல நிகழ்ச்சிகளில் அடிக்கடி வளம் வரும் சின்னத்திரை நடிகையாக இருக்கும் ரித்திகா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பல வருடங்களாக இவர் அமிர்தாவாக இருந்தாலும் தற்போதைய கதை களத்தில் திருப்புமுனையாக இவருடைய திருமணம்தான் இருந்து வருகிறது. கோபியின் திருமணத்திற்கு பிறகு இந்த சீரியலின் பரபரப்பை ஏற்படுத்தும் திருமணமாக அமிர்தா மற்றும் எழில் திருமணம் இருக்க போகிறது இதுவரைக்கும் சைடு கேரக்டரில் இருந்த இவருடைய கதை இனி முக்கியமானதாக மாறப்போகிறது .இந்த நிலையில் நிஜ வாழ்க்கையிலும் ரித்திகா எளிமையான முறையில் திருமணத்தை முடித்து இருக்கிறார்.

ரசிகர்கள் பிரபலங்களின் வாழ்த்துக்கள்
விஜய் டிவி பிரபலமான வினு என்பவரை திருமணம் செய்திருக்கும் ரித்திகா இன்று முதல் முறையாக தனக்கு வாழ்த்துக்கள் கூறிய ரசிகர்களுக்கு நன்றிகளை கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இருவரும் புது வாழ்க்கையில் அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் ரசிகர்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு ரசிகர்கள் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அசார் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கம்பம் மீனா போன்றோர் ரித்திகா பதிவிட்ட ஒரு சில நிமிடங்களில் வாழ்த்துக்களை கூறியிருக்கின்றனர்

மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்வி
விஜய் டிவியில் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ரித்திகா அதே விஜய் டிவியில் பணிபுரியும் வினுவை திருமணம் செய்து இருப்பதால் இவர்கள் இருவருக்கும் காதல் திருமணமா? என்று பலர் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். இன்னும் ஒரு சில நெட்டிசன்கள் அப்போ பாலாவின் நிலைமை என்று கேள்வியோடு வலம் வருகின்றனர். ஏற்கனவே ரித்திகா தாங்கள் இருவரும் நடிப்பிற்காகவும் நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காகவும் தான் பேசி பழகி வருகிறோம் அதைத் தாண்டி எங்களுக்குள் ஒன்றும் இல்லை என்று தெளிவுபடுத்திய நிலையிலுள் மீண்டும் மீண்டும் சிலர் இதே கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

விரைவில் வரவேற்பு
முதல் முறையாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகத்தான் ரித்திகாவை அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து இருக்கின்றனர். இதற்கு முன்பு இவர் ஒரு சில நிகழ்ச்சிகளில் விஜய் டிவியில் கலந்து கொண்டிருக்கிறார் ஆனாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பார்த்த பலர் இவரை பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருக்கிறார். ஹோமிலியாக இருக்கிறார் என்று வர்ணித்து வந்தனர் .இந்த நிலையில் தற்போது ஒரு சில சீரியல்களிலும் ரித்திகா பிசியாக நடித்து வருகிறார். தற்போது எளிமையாக திருமணத்தை முடித்து இருந்த ரித்திகாவிற்கு 27 ஆம் தேதி ரிஷப்ஷன் நடப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. புது வீட்டின் முன்பு தனது கணவரோடு ரித்திகா எடுத்த புகைப்படங்கள் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
-
சர்ச்சைக்கு மத்தியில் உருக்கமாக பேசிய மாதம்பட்டி ரங்கராஜன்.. இதை எதிர்பார்க்கவே இல்ல.. ஆனால், நெகிழ்ச்சி வார்த்தை -
குக் வித் கோமாளியில் 18+ காமெடி! “கொழுந்தியா” இல்லையே என உருகிய மாதம்பட்டி ரங்கராஜன்! புது பஞ்சாயத்து -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது?












Click it and Unblock the Notifications