கோடிகளில் புரளும் விஜய் டிவி பிரியங்கா.. அவசர கல்யாணம் ஏன்? வசி பார்க்க அஜித் போல இருக்காரே: பிரபலம்
சென்னை: பிரியங்காவின் கணவர் வசுவை பார்ப்பதற்கு அப்படியே அஜித் ஸ்டைலில் வெள்ளை தாடி, ஸ்டைலில் இருக்கிறார். எப்படியும் வசுவுக்கு வயது 58, 60 இருக்கும் என்று நினைக்கிறேன். எனினும் வயதானதே தெரியவில்லை. ஒரு சாயலில் அஜித் போலவே இருக்கிறார்.. நான் யாரை கல்யாணம் செய்தால் உங்களுக்கென்ன? என்று பிரியங்காவே நறுக்கென கேட்டுவிட்டார்" என்று பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.. அதில், "பிரியங்கா திருமணத்தில், முதலில் மெகந்தி விழா நடந்துள்ளது.. பிறகு பிராமண முறைப்படி இந்த திருமணம் நடந்துள்ளது.. மகாபா உட்பட யாருமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என சிலர் கதைவிட்டார்கள். ஆனால், மகாபா, அமீர், பாவனி உள்ளிட்ட விஜய் டிவி நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

எல்லாருமே டான்ஸ் ஆடிக் கொண்டே, மணமகள் பிரியங்காவின் கையை பிடிச்சிட்டு அழைத்து வந்தார்கள்.. திருமணம் ஒரு இடத்திலும், வரவேற்பு இன்னொரு ஷூட்டிங் பங்களாவிலும் நடந்தது.. மிக லைவ்லியாக அந்த கல்யாண வீடியோ எடுக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட்டது. ரிசப்ஷன் முடிந்ததுமே, பிரியங்கா போட்ட குத்தாட்டம் ஆச்சரியத்தை தந்தது.. எந்த ஹீரோயினும், இப்படியொரு குத்தாட்டம் போட்டிருக்க மாட்டார்கள்
கருத்து வேறுபாடுகள்
பிரியங்கா திருமணம் செய்துள்ள வசி யார்? கடந்த 2016ம் ஆண்டு விஜய் டிவி தயாரிப்பாளரான பிரேம் என்பவரை திருமணம் செய்தார் பிரியங்கா.. ஆனால், 6 வருடம் அவருடன் திருமண வாழ்க்கை நன்றாகவே சென்றது. கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனால் இவர்களது பிரிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. பிறகு கடநத 2023ம் ஆண்டிலிருந்து வசியுடன் தொடர்பு ஏற்பட்டது. ஆனால் 7 வருடமாக இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்ததாகவும் சொல்கிறார்கள்.
பெரிய லெவலில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்தி வருபவர் வசி. அவரது அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிரியங்காவும் பங்கேற்றுள்ளார்.. சமீபகாலமாக பிரியங்காவும் வசியும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை நடத்தினார்கள். என்றும் சொல்லப்பட்டது. பிறகு திடீரென திடீரென இவர்கள் இருவரும் திருமணம் செய்துள்ளனர். தனக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை இருக்கிறது .. எனவே திருமணம் செய்து கொண்டுள்ளதாக பிரியங்கா கூறியிருக்கிறார்.
அஜித் மாதிரியே இருக்காரு
ஆனால், இந்த அவசர திருமணத்துக்கும், பிரியங்காவின் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசைக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? தெரியவில்லை. எனினும், அது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை.. அதற்குள் நாம் செல்லக்கூடாது.
வசுவை பார்ப்பதற்கு அப்படியே அஜித் ஸ்டைலில் வெள்ளை தாடி, ஸ்டைலில் இருக்கிறார். எப்படியும் வசுவுக்கு வயது 58, 60 இருக்கும் என்று நினைக்கிறேன். எனினும் வயதானதே தெரியவில்லை. ஒரு சாயலில் அஜித் போலவே இருக்கிறார்.. 35 வயது பிரியங்காவை, 60 வயது வசி திருமணம் செய்வது சரிதான். நான் யாரை கல்யாணம் செய்தால் உங்களுக்கென்ன? என்று பிரியங்காவே நறுக்கென கேட்க துவங்கிவிட்டார்.
புடிச்சாலும் புளியங்கொம்பு
பிரியங்கா, வசி இருவருக்குமே கோடிக்கணக்கில் சொத்து உள்ளது. இருவருமே தொழிலில் திறமை மிக்கவர்கள்.. குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவில் பிரியங்கா உள்ளதால், விஜய் டிவி விட்டு விலகுவாரா? அவரை இழக்க விஜய் டிவி சம்மதிக்குமா? பிரியங்கா விலகும் சூழல் வந்தால், அதை அவரது ரசிகர்கள் இதை ஏற்பார்களா? என தெரியவில்லை. ஆனால், பிரியங்கா புடிச்சாலும் பெரிய புளியம்கொம்பாக பிடித்துவிட்டதாக அவரது ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications