கனியை தொட்டா அவ்வளவுதான்! ஆட்டம் இனி தான்! அவங்க இப்படி சொல்லலாமா? தங்கச்சி விஜயலட்சுமி ஆதங்கம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் கனிக்கு ஆதரவாக அவருடைய தங்கை விஜயலட்சுமி பேசி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாகவே காரக்குழம்பு கனிவுடன் எஃப்ஜே (fj) பழகி வருவது அதிகமான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் தன்னுடைய சகோதரிக்கு ஆதரவாக விஜயலட்சுமி பேசியிருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் அதிகமான சோசியல் மீடியா பிரபலங்கள் தான் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கின்றனர். இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் சோசியல் மீடியாவில் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது.

அதேபோல இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து சண்டை சச்சரவுகள் தான் இருக்கிறது. இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள்தான் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாக இருக்கின்றனர். அதில் காரக்குழம்பு கனியும் ஒருவர். இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதோடு விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகவும் மாறி இருந்தார்.
அகத்தியனின் இன்னொரு மகள் விஜயலட்சுமி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆகவும் ஜெயித்து இருந்தார். ஆனால் கனி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகுதான் அவர்களுக்கு அதிக நெகட்டிவ் வந்தது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரை பாராட்டியவர்கள் கூட இப்போது கனியுடைய விளையாட்டை விமர்சித்து வருகிறார்கள். அவர்தான் ராஜமாதா என்றும் அன்பு கேங்கில் லீடர் என்றும் சிலர் கிண்டல் செய்கின்றனர். இன்னும் சிலர் எஃப்ஜே இவருடைய கழுத்தில் கடித்து விளையாடுவது, முத்தம் கொடுப்பது, கட்டிபிடித்துக் கொண்டே நடப்பது, தோளில் சாய்ந்து கொள்வது, தன்னுடைய மடியில் கனியை படுக்க வைத்து அவருடைய தலை முடியை வருடி கொடுப்பது போன்ற செயல்களை செய்து வருவதை விமர்சிக்கிறார்கள்.
அத்துடன் கனி எதற்காக எஃப்ஜே இப்படி நடந்துகொள்ள இடம் கொடுக்கிறார் என்றும் சிலர் கேட்டுக் கொண்டு வருகிறார்கள். அக்கா தம்பி என்று சொல்லிக் கொண்டு இவர்கள் செய்யும் அக்கப்போருக்கு அளவில்லையா? என்று கலாய்த்தும் வருகிறார்கள். இது பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயலட்சுமி பேசும் போது என்னுடைய அக்காவிற்கு தான் நான் எப்போதும் சப்போர்ட் பண்ணுவேன்.
அவங்க யாரு? எப்படி? என்று எங்களுக்கு நல்லாவே தெரியும். அவங்களுடைய விளையாட்டு இனி தான் தெரியும். அவங்களுடைய விளையாட்டு முதல் இரண்டு வாரம் தான் சரி இல்லாமல் இருந்தது, எந்த இடத்திலும் அவர்கள் பேச வேண்டிய விஷயத்தை தைரியமாக பேசாமல் இருந்தாங்க. அதற்குப் பிறகு அவர்களுடைய கேள்விகளை தைரியமாக முன்வைத்து வராங்க. அவங்கள தொட்டா என்ன நடக்கும்னு சில இடத்தில் காட்டி இருக்காங்க.
அதோடு உள்ளே இன்னொரு போட்டியாளர் என்னுடைய அக்காவை கிழவி என்று சொல்லி இருந்தாங்க. ஆனா சோசியல் மீடியாவில் பார்க்கும்போது அப்படி பேசினவங்க வயதும் என்னுடைய அக்காவின் வயதும் ஒரே போல தான் இருக்கிறது. அவங்க கேமரா நம்மளை பார்த்துட்டு இருக்கிறது என்பதை தெரிந்தும் இப்படி பேசி இருக்காங்கன்னா அவஙகளுடைய பழக்கவழக்கம் எப்படி இருக்கும்னு நாம புரிஞ்சுக்கணும் அவ்வளவுதான் என்று விஜயலட்சுமி பேசியிருக்கிறார்.
அத்துடன் தன்னுடைய அக்காவிடம் யாரெல்லாம் சண்டை போடுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுடன் நானும் சண்டை போடணும் என்று எனக்கும் தோணும், அந்த அளவிற்கு எனக்கு எங்க அக்காவை பிடிக்கும். நான் எந்த இடத்திலும் என்னுடைய அக்காவை விட்டுக் கொடுக்க முடியாது என்று அக்கா கனிக்கு சப்போர்ட் பண்ணி இருக்கிறார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications